ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
Vanamum Vazhvum training

வனமும், வாழ்வும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கல்

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2026

அரியலூர் மாவட்டத்தில் வனமும், வாழ்வும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 25KB)

Final electoral roll

இறுதி வாக்காள் பட்டியல் வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026, 149-அரியலூர், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காள் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டது. (PDF 31KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 23.02.2026 அன்று நடைபெற்றது. (PDF 88KB)

Nala thitta uthavigal

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் 727 பயனாளிகளுக்கு ரூ.3.86 கோடி மதிப்பிலான இணைய வழி பட்டாக்களையும், 100 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.1.02 கோடி மதிப்பில் விலையில்லா இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 27KB)

TNSTC Job order issued

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் 127 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் , அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 29KB)

மாபெரும் கடன் வழங்கும் முகாம்

கல்வி கடன் மேளா

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2026

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 107 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.40 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 21KB)

World Mother Language Day

உலக தாய்மொழி நாள் – உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026

அரியலூர் மாவட்டத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது. (PDF 163KB)

TP Awareness rally

காசநோய் எதிர்ப்பு வார விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026

அரியலூர் மாவட்டத்தில் காசநோய் எதிர்ப்பு அனுசரிப்பு வாரம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 85KB)

MP Meeting

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2026

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் (18.02.2026) அன்று நடைபெற்றது. இக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 51KB)

DDH Health

புதிய அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையம்

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2026

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் புதிய அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து,மையத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். (PDF 91KB)