மாவட்டம் பற்றி
அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண் 683 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள் 19.11.2007 இன்படி பிரிக்கப்பட்டு, 23.11.2007 முதல் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் வடக்கே கடலூர், தெற்கே தஞ்சாவூர், கிழக்கே கடலூர் மற்றும் தஞ்சாவூர், மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரு கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் (ஆண்டிமடம் வட்டம் அரசாணை (நிலை) எண்.167 வருவாய்த்துறை நிருவாக அலகு, வ.நி-1(1) நாள்: 08-05-2017 இன் படி உருவாக்கப்பட்டது.) ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் வாசிக்க