மூடுக

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்.

  • 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் நலத்தையும், ஊட்டச்சத்தையும் மேம்படுத்துதல்.
  • உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மொழிவளர்ச்சி , சமுதாய வளர்ச்சி இவற்றைச் சிறுவயதிலிருந்தே நல்ல முறையில் பேணிக் காத்தல்.
  • குழந்தை இறப்பு விகிதம், நோய் வாய்ப்படுதல், சத்துணவு பற்றாக்குறை ஆகியவற்றைக் குறைத்தல்.
  • தாய்மார்களிடையே இயற்கையிலே உள்ள குழந்தை வளர்ப்புத் திறனைச் சத்துணவு மற்றும் சுகாதாரக் கல்வி மூலம் அதிகரித்தல்.
  • குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் அனைத்து துறைகளுடன் சேர்ந்து பணியாற்றுதல்.
  • 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்களின் நலத்தையும், ஊட்டச்சத்தையும் மாதந்தோறும் கண்காணித்து ஆலோசனை மற்றும் பரிந்துரை வழங்கப்பட்டு வருகிறது.
  • கிஷோரி சக்தி யோஜனா மூலம் 11-18 வயது வளர் இளம் பெண்களுக்கு உடல் நலத்தையும், ஊட்டச்சத்தையும் அதிகரிக்க கல்வி அளித்தல் மற்றும் தொழில் பயிற்சி மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழி வகுக்கப்பட்டு வருகிறது.
  • 2017 ஆம் ஆண்டு அரியலூர் சட்டமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்ட தொகையில் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் எரிவாயு இணைப்பு, சமையல் மேடை மற்றும் சமையல் அடுப்பு ஆகியவை கொடுக்கப்பட்டு, அனைத்து அங்கன்வாடி மையங்களின் தரம் உயர்த்தப்பட்டது.
  • குழந்தைகளை ஊக்குவிக்க அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் இரண்டு செட் வண்ணச் சீருடை அனைத்துக் குழந்தைகளுக்கும் (2-5+ வயது) முன்பருவக் கல்வி குழந்தைகளுக்கு வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
  • ISO தரச்சான்று நான்கு அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் வட்டாரத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்களுக்கும், திருமானூர் வட்டாரத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
  • வருடந்தோறும் நெகிழ்வு தொகையாக ரூபாய் 1000/- வீதம் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்படுகிறது.
  • வருடந்தோறும் குடற்புண் நீக்கல் மருந்து வழங்கப்படுகிறது.
  • சிறந்த அங்கன்வாடி பணியாளர் விருது  அரியலூர் வட்டாரம் மற்றும் ஆண்டிமடம் வட்டாரம் பணியாளர்கள் இருவருக்கு வழங்கப்பட்டது. மூ.5000/- வீதம் 2 பணியாளர்களுக்கு ரூ.10000/- வழங்கப்பட்டது.
  • வருடந்தோறும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 5 வகை சாப்பாடு, 1-டசன் வளையல், குங்குமம், மஞ்சள் , பூ, சுமங்கலி செட் மற்றும் மாலை அணிவித்து அவர்களின் நலனை மேம்படுத்த வழிவகுக்கிறது.
  • முன்பருவக்கல்வி பயில ஏதுவாக 11 மாதங்களுக்குமான பாடத்திட்ட புத்தகம் 1செட் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் விடுமுறை மாதம் என்பதால் பாதி வருகை புரியும் குழந்தைகளுக்கு 11 மாத தலைப்புப் பாடம் திருப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.
  • அனைத்து முன்பருவக்கல்வி குழந்தைகளின் திறனை மதிப்பிடுவதற்காக 2-3 வயது, 3-4 வயது மற்றும் 4-5 வயது குழந்தைகளுக்கு ஆய்வுத் தாள் அட்டை தனித்தனியாக வழங்கப்பட்டு மதிப்பிடப்பட்டு வருகிறது.
  • செயல்பாட்டு புத்தகம் அனைத்து முன்பருவக்கல்வி குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் குழந்தைகளின் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்த இது வழி வகுக்கிறது.
  • குழந்தைகள் விவரப் பதிவேடு அனைத்து முன்பருவக் கல்வி குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு அவர்களின் விவரம் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது.
  • கடுமையான எடைக்குறைவாக இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவக் குழு மூலம் பரிந்துரை செய்யப்பட்டு வருடந்தோறும் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
  • ஆண்டிமடம் வட்டாரத்தில் கடுமையான எடைக் குறைவாக உள்ள 10 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நன்கொடையில் 3 மாத காலத்திற்கு தினமும் சத்துமாவுடன் (இணை உணவுடன்) நெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையில் முதல் உணவாக வழங்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் நலத்தையும், ஊட்டச்சத்து நிலையையும் மேம்படுத்தும் விதமாக வாரம் 6 நாட்களுக்கு தினமும் ஒரு உணவு வழங்கப்படுகிறது.

அவைகளாவன,

திங்கள் கிழமை     – தக்காளி சாதம், வேகவைத்த முட்டை.
செவ்வாய் கிழமை  - கலவைசாதம், வேகவைத்த முட்டை.
புதன் கிழமை       - காய்கறி புலாவ், வேகவைத்த முட்டை.
வியாழக்கிழமை     - எலுமிச்சைசாதம், வேகவைத்தமுட்டை.
வெள்ளிக்கிழமை    - பருப்பு சாதம், வேகவைத்த முட்டை.
சனிக்கிழமை        - கலவை சாதம் வழங்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை – சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஒருநாள் உணவு விகிதம் : அரிசி 80கிராம், பருப்பு 10 கிராம்.

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு   இணை உணவு மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
கர்ப்பிணி தாய்மார்கள்    – 220 கிராம் ஒருநாள் அளவு
பாலூட்டும் தாய்மார்கள்   - 220 கிராம் ஒருநாள் அளவு
6-24 மாத குழந்தைகள்     - 150 கிராம் – இயல்பு நிலைக் குழந்தைகள்
6-24 மாத குழந்தைகள்     - 240 கிராம் – கடுமையான எடைக்குறைவு குழந்தைகள்
2-3 வயது குழந்தைகள்    - 130 கிராம் - இயல்பு நிலைக் குழந்தைகள்
2-3 வயது குழந்தைகள்    - 190 கிராம் – கடுமையான எடைக்குறைவு குழந்தைகள்
3-5 வயது குழந்தைகள்    - 10 கிராம் ஒருநாள் (அனைத்துக் குழந்தைகளுக்கும்)
3-5 வயது குழந்தைகள்    - 100 கிராம் (கடுமையான எடைக்குறைவு)

அங்கன்வாடி மையகள்
முதன்மை அங்கன்வாடி மையங்கள்(குறைந்தது 400 மக்கள் தொகை உள்ள ஊரகம் மற்றும் கிராமப்புறங்களிலும், அதிகபட்சம் 800 மக்கள் தொகையும் 25 குழந்தைகளுக்கு அதிக எண்ணிக்கை) குறு அங்கன்வாடி மையங்கள் (குறைந்தது 150 மக்கள் தொகை உள்ள ஊரகம் மற்றும் கிராமப்புறங்களிலும், அதிகபட்சம் 400 மக்கள் தொகையும் 15 குழந்தைகளின் எண்ணிக்கைக்கு குறையாமலும்) குழந்தை வளர்ச்சி திட்டம் (வட்டாரங்கள்)
691 83 6
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பயனாளிகள்
வ. எண் பிரிவு வயது-மாதம் பயனடைவோர்
 1.  இளம் குழந்தைகள்  7 மாதம் முதல் 12 மாதம் வரை  5099
2. கர்ப்பிணிகள் 4863
3. பாலூட்டும் தாய்மார்கள் 5406
4. வளர் இளம் பெண்கள் 15 முதல் 18 வயது 22980
5. இளம் குழந்தைகள் 1-2 வயது 10099
6. இளம் குழந்தைகள் 2-3 வயது 10446
7. குழந்தைகள் 3-5 + 21338
அங்கன்வாடி மையங்களை நவீனப்படுத்துதல்
வ.எண் வகை வழங்கிய மையங்கள் தொகை
(லட்சத்தில்)
1. எரிவாயு இணைப்பு 774 19.35
2. எரிவாயு அடுப்பு 774 7.74
3. பிரஷர் குக்கர் 774 20.12
4. சமையல் மேடை 774 19.35