மூடுக

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

சமூகப்பாதுகாப்புத்துறை

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் 38 மாவட்டங்களிலும்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகானது செயல்பட்டு வருகின்றது. இதன் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவா் உள்ளார். அவரின் பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உள்ளார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அமைப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள்

இளைஞா் நீதி சட்டம் -2015 பிரிவு 106 –ன் கீழ் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டு இதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகானது செயல்பட்டு வருகின்றது.

  • 18 வயதிற்குட்பட்ட பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு இளைஞா் நீதி சட்டம் -2015 பிரிவு -27 மூலம் குழந்தைகள் நலக் குழு மூலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கப்படுகிறது.
  • 18 வயதிற்குட்பட்ட சட்டத்திற்கு முரணான குழந்தைகளுக்கு இளைஞா் நீதி சட்டம் -2015 பிரிவு 4 –ன்படி இளைஞா் நீதிக் குழுமத்தின் மூலம் அவா்களை கூா்நோக்கு இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவருகின்றது.
  • குழந்தைகள் பின் தொடா் முறையின் மூலம் காணாமல் போன குழந்தைகளின் விபரங்களை அவா்களின் புகைப்படத்துடன்trackthemissingchild.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
  • மேலும் அரியலூா் மாவட்டத்தில் இளைஞா் நீதி சட்டம்-2015 கீழ் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லத்திலுள்ள அனைத்து குழந்தைகளையும்trackthemissingchild.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டு அவா்கள் முறையாக கண்காணிப்படுகிறரர்கள்.
  • குழந்தைகள் இல்லங்கள் ஆய்வு செய்தல் மற்றும் மேற்பார்வையிடுதல்.
  • குழந்தைகள் இல்ல மேலாண்மை குழுக்கூட்டம் நடத்துதல் மூலம் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தல்.
  • குழந்தைகள் இல்லங்களை இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து முறையாக செயல்படுத்துதல்.
  • தற்காலிக பராமிப்பு மற்றும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குதல்
  • 18 வயதிற்கு மேற்பட்டு, 21 வயதுடைய குழந்தைகளுக்கு பிற்காப்பு பராமிப்பு திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் வழங்குதல்.
  • சட்டத்திற்குட்பட்டு சிறப்பு தத்துவள மையத்தின் வாயிலாக குழந்தைகளை முறையான தத்து வழங்குதல்.
  • பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு பணி மேற்கொள்ளுதல்.
  • குழந்தை திருமணத்தை தடுத்தல்.
  • குழந்தை தொழிலாளரை மீட்டல்.
  • குழந்தை பிச்சையெடுத்தலை தடுத்தல்.
  • குழந்தை கடத்தலை தடுத்தல்.
  • பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல்.
  • பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மீட்கபட்ட குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்குதல் மற்றும் பின்தொடர் பணிகள் மேற்கொள்ளுதல்.
  • குழந்தை பாதுகாப்பு குறித்து பள்ளிக் குழந்தைகள், குழந்தை தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணாவு வழங்குதல்
  • குழந்தை தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்துதல்.
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் அதன் பங்குதாரர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் சார்ந்த திறன்வளர்ப்பு பயிற்சி முகாம்கள் நடத்துதல்.
  • மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்துதல்.
  • வட்டார/கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் நடத்துதல்.
  • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலராக ஒவ்வொரு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உள்ளார்.
  • கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 5 இலட்சமும் ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 3 இலட்சமும்  மாண்புமிகு முதலமைச்சரின் நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.3000/- மும் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின்  விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.
  • பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாண்புமிகு  பிரதம மந்திரியின் நிவாரண உதவித்தொகையாக ரூ.10 இலட்சமும் பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.4000/- மும் சுகாதார அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
2வது தளம், அரசு பல்துறை வளாகம்,
அரியலூா் – 621704.

தொலைபேசி எண் – 04329 – 296239.
மின்னஞ்சல் முகவரி : dcpuariyalur1@gmail.com