ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
Organic Farming

உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், பொய்யாதநல்லூர் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 19KB)

ITI Building

தா.பழூர் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மைய கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல்

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026

அரியலூர் மாவட்டத்தில் ரூ.9.19 கோடி மதிப்பீட்டில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மைய கட்டடம் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 21KB)

DDAWO

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 05 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை திறந்து வைத்தார்கள். அரியலூர் ஊராட்சி ஓன்றியம், கடுகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சமுதாய நல மையத்தில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து குத்து விளக்கேற்றி வைத்து, சேவை மையத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 110KB)

ex-serviceman GDP

முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 14/02/2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் (13.02.2026) அன்று நடைபெற்றது.(PDF 83KB)

Chinnaswamy Hall

மொழிப்போராட்டத் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 14/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் மொழிப்போராட்டத் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கத்தினை திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 26KB)

En Ooru En Kanavu

“என் ஊர் என் கனவு” திட்டம் – 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கம்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

அரியலூர் மாவட்டத்தில் “என் ஊர் என் கனவு” திட்டம் 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்,அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 101KB)

Safer Internet day

பாதுகாப்பான இணைய தினம் – 10.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

அரியலூர் மாவட்டத்தில் இணைய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 109KB)

Minister Function

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் மகளிர் விடியல் பயண பேருந்துகள் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் மகளிர் விடியல் பயண பேருந்துகள் வழித்தடம் நீட்டிப்பு மற்றும் புறநகர் பேருந்து தடம் மாற்றம் செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 56KB)

My Home My Dream Project

“என் ஊர் என் கனவு திட்டம் – 2030”

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

அரியலூர் மாவட்டத்தில் என் ஊர் என் கனவு திட்டம் – 2030 தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 128KB)

Kalai Thiruvizha Competition

கலைத்திருவிழா போட்டி – சமூக நீதி விடுதி

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

அரியலூர் மாவட்டத்தில் சமூக நீதி விடுதிகளில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 17KB)