தாட்கோ
வெற்றி தொழில் முனைவோர் திட்டம்
தகுதி விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மானிய விபரம் இத்திட்டத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மொத்த திட்ட தொகையில் மூலதன மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திட்ட தொகையில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ 3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும். 6% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர்களுக்கான முன்னேற்ற திட்டம் (PM-AJAY)
தகுதி விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மானிய விபரம் திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000/- இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும். நிபந்தனைகள் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும். விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம் / நேரடியாக) இணையதள வாயிலாக விண்ணப்பிக்க https://newscheme.tahdco.com
துரித மின் இணைப்பு திட்டம்
தகுதி விண்ணப்பதாரார் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான ரூ 3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். நிபந்தனைகள் நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும். மானிய விபரம் குதிரைத்திறனுக்கேற்ப 90% அரசு மானியம் மற்றும் 10% பயனாளி பங்குத் தொகையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார திட்டம்
தகுதி விண்ணப்பதார் ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 12 நபர்கள் இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் வயது 18 முதல் 55 -குள் இருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட குழுவாக இருக்க வேண்டும். மானிய விபரம் சுய உதவி குழுக்களுக்கு திட்டத் தொகையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ 6.00 இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
மண்ணின் மகள் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் மண்ணின் மகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தகுதி விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மானிய விபரம் சந்தை மதிப்பீட்டின் படி, திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5.00 இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 2.5…
கல்விக் கடன் திட்டம்
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு பட்டப் படிப்பினை உள்நாடு மற்றும் அயல் நாட்டில் பயில்வதற்காக NSFDC, NSTFDC மற்றும் NSKFDC போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று மாணாக்கர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. முழுநேர படிப்புகளுக்கான மாணாக்கர்களுக்கு மிக குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் மற்றும் வெளி நாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.40.00 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் மற்றும் வெளி நாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு…