மண்ணின் மகள் திட்டம்
தேதி : 05/08/2026 -
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் மண்ணின் மகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தகுதி
- விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மானிய விபரம்
- சந்தை மதிப்பீட்டின் படி, திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5.00 இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
- நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5.00 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.
- முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.
- வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 10 வருடங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
பயனாளி:
-
பயன்கள்:
-
விண்ணப்பிப்பது எப்படி?
இதர விபரங்களுக்கு, தொடர்புக்கு
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்
தொலைபேசி எண் : 04329 -228315