ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
Diselting works

நீர்வளத்துறையின் சார்பில் பாசன ஆதாரங்கள் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

நீர்வளத்துறையின் சார்பில் பாசன ஆதாரங்கள் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் 22 பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 32KB)

Meetting

தமிழில் பெயர் பலகை முதன்மையாக வைப்பது தொடர்பான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் முதன்மையாக வைப்பது தொடர்பான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (09.04.2025) அன்று நடைபெற்றது.(PDF 18KB)

Meeting with all Department

அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025

அரியலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)

மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம் – 09.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025

அரியலூர் வட்டம், 09.04.2025 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 25KB)

Heat Wave Meeting

வெப்ப அலை தாக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

அரியலூர் மாவட்டத்தில் வெப்ப அலை தாக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 22KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.04.2025 அன்று நடைபெற்றது.(PDF 85KB)

100 year Function

காட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு நினைவுத் தூணினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

அரியலூர் மாவட்டம், காட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு நினைவுத் தூணினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)

100 year Function

அரியலூர் மாவட்டம், மருதூர் அரசு தொடக்கப்பள்ளி முப்பெரும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

அரியலூர் மாவட்டம், மருதூர் அரசு தொடக்கப்பள்ளி முப்பெரும் விழா மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)

limestone

கல்லங்குறிச்சி சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025

கல்லங்குறிச்சி சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ( PDF 31 KB)

கூட்டம்

கோட்டைக்காடு கிராமத்தில் வெள்ளாற்று மேம்பாலப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா கோட்டைக்காடு கிராமத்தில் வெள்ளாற்றில் மேம்பாலம் மற்றும் அணுகுமுறை சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ( PDF 19 KB)