மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
New Bus

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்துகள் மற்றும் ஒரு பேருந்து வழித்தடத்தினை நீட்டிப்பு செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்துகள் மற்றும் ஒரு பேருந்து வழித்தடத்தினை நீட்டிப்பு செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 38KB)

மேலும் பல
Election Dept

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025

சிறப்பு தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஃ மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. (PDF 70KB)

மேலும் பல
Sport Kit Distribution

நகர்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய விழாவின் காணொளிக் காட்சி நேரலை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். இவ்விழாவில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 24KB)

மேலும் பல
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 84KB)

மேலும் பல
Election Dept

சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/12/2025

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது மற்றும் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிவுற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு. (PDF 77KB)

மேலும் பல
DCPU

மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/12/2025

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 127KB)

மேலும் பல
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 20KB)

மேலும் பல
Kalamadum Competition

களமாடும் மற்றும் கலைக்கொண்டாட்டப் போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025

அரியலூர் மாவட்டத்தில் சமூக நீதி கல்லூரி விடுதிகளில் நடைபெற்ற களமாடும் மற்றும் கலைக்கொண்டாட்டப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேடயம், பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 151KB)

மேலும் பல
பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம்

பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

அரியலூர் மாவட்டம், தி/ள். செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் (பி) லிமிடெட் செந்துறை நக்கம்பாடி சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 54KB)

மேலும் பல
FLC

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருவதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.(PDF 73KB)

மேலும் பல