ஊடக வெளியீடுகள்
ஆடி திருவாதிரை விழா – 10.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னர் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 32KB)
உலக தாய்ப்பால் வார நிறைவு விழா
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026அரியலூர் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 94KB)
பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு – 06.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06.08.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 26 KB)
மாவட்ட ஆட்சியரின் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மசாலா தொழில் தொகுப்பு பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06.08.2026 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29 KB)
உலக தாய்ப்பால் வார விழா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026அரியலூர் மாவட்டம், உலக தாய்ப்பால் வார விழா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 92KB)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இயங்கும் திறன் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026அரியலூர் மாவட்டம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இயங்கும் திறன் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டார். (PDF 42KB)
ஊரக வளர்ச்சித் துறை ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வளமிகு வட்டாரங்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2026-27 ஆண்டிற்கு ஆண்டு செயல்திட்டம் தயாரித்தல் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.இக்காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 45KB)
சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026அரியலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB)
உள்ளாட்சி தேர்தல் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அறையில் உள்ள மின்கலங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026அரியலூர் மாவட்டம், அரசு பல்துறை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அறையில் உள்ள மின்கலங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 36KB)