மூடுக

வேளாண்மைப் பொறியியல் துறை

நிலம் சீர்திருத்தத்தில் தொடங்கி விதைப்பு, பயிர் பாதுகாப்பு, அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்ள வேளாண்மைக்கு தொழிலாளர்கள் அரிதாகிவிட்ட இன்றைய சூழலில் கால விரயமின்றி குறித்த நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக வேளாண் இயந்திர மயமாக்கலை விவசாயிகளிடையே கொண்டு சோ்ப்பதில் இன்றியமையாததாக வேளாண்மைப் பொறியியல் துறை விளங்குகிறது.

பார்வை மற்றும் குறிக்கோள்

வேளாண்மைப் பொறியியல் துறையின் பார்வை

  • பண்ணை சக்தியில் தன்னிறைவு
  • இளம் விவசாய தொழிலாளர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டல்
  • சமமான நீர் பகிர்வு
  • அனைவருக்கும் சூரிய சக்தி
  • விவசாய விளைபொருட்களின் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பை குறைத்தல்.

வேளாண்மைப் பொறியியல் துறையின் பணிகள்

  • தனிப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு மற்றும் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவுவதற்கு உதவுதல்.
  • நுண்ணீர் பாசன அமைப்பு, கிராம நீர் மேலாண்மை உத்தியிலிருந்து பெறப்பட்ட நீர் அறுவடை கட்டமைப்புகள்
  • வேளாண்மையில் சூரிய சக்தி பயன்பாட்டினை ஊக்குவித்தல்
  • வேளாண்மையில் அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி தொழில் நுட்பத்தினை ஊக்குவித்தல்

திட்டங்கள்

  1. வேளாண்மை இயந்திரமயமாக்கல்
  2. மண் மற்றும் நீர் பாதுகாப்பு
  3. வேளாண்மையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
  4. நீர் மேலாண்மை
  5. அறுவடைக்குப்பின் தொழில் நுட்பம்
  6. சிறப்பு திட்டங்கள்
  1. வேளாண்மை இயந்திரமயமாக்கல்

    வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை  இயக்கத் திட்டம்

    நோக்கம்
    • வேளாண் இயந்திர சக்தியினை மேப்படுத்துவதற்காக, சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல்.
    நிதி ஆதாரம்
    • ஒன்றிய அரசு -60 %
    • மாநில அரசு – 40 %
    மானியங்களும் சலுகைகளும்

    தனிப்பட்ட விவசாயிகளுக்கு

    • 50%  மானியம்- ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு.
    • 40% மானியம் – இதர விவசாயிகளுக்கு.
    செயல்படுத்தப்படும் பணிகள்
    • வேளாண் இயந்திரங்கள் / கருவிகளான டிராக்டர், சுழற்கலப்பை (ரோட்டவேட்டர்), பவர்டில்லர் (8 குதிரைத் திறனுக்கு மேல்), நெல் நாற்று நடவு இயந்திரம், விசைக்களையெடுப்பான், தட்டை வெட்டும் கருவி, புதர் அகற்றும் கருவி, அறுவடை இயந்திரம், பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம் போன்றவற்றினை தனிப்பட்ட விவசாயிகள் வாங்குவதற்கு மானியம் வழங்குதல்.
    தகுதி
    • தனிப்பட்ட விவசாய இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு -அனைத்து விவசாயிகள்.
  2. மண் மற்றும் நீர் பாதுகாப்பு

    நீர் சேகரிப்பு கட்டமைப்புகளைப் பராமரித்தல்

    நோக்கம்
    • நீர்வடிப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கட்டமைப்புகளுக்கு வரும் நீரோட்டத்தினை அதிகரித்து, கட்டமைப்புகளில் உள்ள செடி, கொடிகளை அகற்றி, தூர்வாரி, அதன் கொள்ளளவினை அதிகரிக்கும் பொருட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
    நிதி ஆதாரம்
    • தமிழ்நாடு நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை (TAWDEVA) மூலம் பெறப்பட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி நிதி (WDF).
    செயல்படுத்தப்படும் பணிகள்
    • தமிழ்நாடு நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமையின் (TAWDEVA) மூலம் ஏற்படுத்தப்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வேளாண்மைப் பொறியியல் துறையிலுள்ள இயந்திரங்கள் மூலம் பராமரித்தல்.
  3. வேளாண்மையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

    முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்

    நோக்கம்
    • விவசாயிகளின் இறவை பாசனத்திற்கான மின்சார தேவையினை உறுதி செய்தல்.
    நிதி ஆதாரம்
    • ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சக நிதி (MNRE)  – 30 %
    • மாநில அரசு நிதி – 40 %
    மானியங்களும் சலுகைகளும்
    • மானியம் – 70% (புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சக நிதி (MNRE)  – 30% மற்றும் மாநில அரசு நிதி – 40 %)
    செயல்படுத்தப்படும் பணிகள்
    • பாசன வசதிக்காக மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்தல்.
    தகுதி
    • அனைத்து விவசாயிகள்.
    • விவசாயக் குழுக்கள்.

    சூரிய கூடார உலர்த்திகள் அமைத்தல்

    நோக்கம்
    • சுகாதாரமான முறையில் தரத்துடன் வேளாண் விளைபொருட்களை உலர்த்த மதிப்பு கூட்டி மூலம் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைத்திட வழிவகுத்தல்.
    நிதி ஆதாரம்
    • ஒன்றிய அரசு – 60 %
    • மாநில அரசு – 40 %
    மானியங்களும் சலுகைகளும்
    • சூரிய கூடார உலர்த்திகள் அமைக்க ஏற்படும் செலவில் 40 % மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
    செயல்படுத்தப்படும் பணிகள்
    • விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு கொப்பரை தேங்காய், எள்,நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள்; வாழைப்பழம், நெல்லிக்காய் உள்ளிட்ட பழவகைகள்; கிராம்பு,  இஞ்சி உள்ளிட்ட வாசனை பொருட்கள்;மிளகாய்,முருங்கை இலை,கறிவேப்பிலை,மூலிகை செடி போன்ற வேளாண் விளை பொருட்களை உலர வைத்திட, பசுமை குடில் வகையிலான, 400 முதல்1,000 சதுர அடி பரப்பு கொண்ட பாலிகார்பனேட் தகடுகளை கொண்ட சூரியகூடார  உலர்த்திகள் அமைத்தல்.
    தகுதி
    • அனைத்து விவசாயிகள்
    • விவசாய குழுக்கள்.
  4. நீர் மேலாண்மை

    மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள்
    நோக்கங்கள்
    • மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல்.
    • அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல்.
    நிதி ஆதாரம்
    • 100 % மாநில நிதி
    மானியங்களும், சலுகைகளும்
    • புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.10,000/-அல்லது 50 % இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
    செயல்படுத்தப்படும் பணிகள்
    • பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு அல்லது அமைக்கப்படும் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள்அமைப்பதற்கு மானியம் வழங்குதல்.
    தகுதி
    • சொந்தமாக பாசனக் கிணறுக்கான மின் இணைப்பு வைத்திருக்கும் அனைத்துகுறு விவசாயிகள்.
    • சொந்தமாக 3 ஏக்கர் வரை நிலம் மற்றும் மின் இணைப்பு வைத்திருக்கும் அனைத்து சிறு  விவசாயிகள்.
  5. அறுவடைக்குப்பின் செய் தொழில்நுட்பம்

    வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல்
    நோக்கம்
    • அறுவடைக்குப்பின் சந்தைபடுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்பினை குறைத்தல், மற்றும் வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்கும் காலத்தை நீட்டித்தல்.
      நிதி ஆதாரம்
    • ஒன்றிய அரசு -60 %
    • மாநில அரசு – 40 %
    மானியங்களும் சலுகைகளும்
    • வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வாங்குவதற்கு ஆகும் செலவில் அதிகபட்சமாக 40 % அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்குதல்.
    செயல்படுத்தப்படும் பணிகள்
    • வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்களான
    • சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம்
    • சிறுதானியங்களில் உமி நீக்கும் இயந்திரம்
    • எண்ணெய் பிழியும் செக்குகள்
    • பைகளில் அடைக்கும் இயந்திரங்கள்
    • நிலக்கடலை உடைக்கும் இயந்திரங்கள்
    • தோல் நீக்கும் இயந்திரங்கள்
    • கதிரடிக்கும் இயந்திரங்கள்
    • பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவும் இயந்திரங்கள்
    • அரவை இயந்திரங்கள்
    • மெருகூட்டும் இயந்திரங்கள்
    • சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றினை வாங்குவதற்கு மானியம் வழங்குதல்.
    தகுதி
    • தனிப்பட்ட விவசாயிகள்
    • உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்
    • சுய உதவிக்குழுக்கள், விவசாய பயன்பாட்டு குழுக்கள்
    • தொழில் முனைவோர்கள்
  6. சிறப்பு திட்டங்கள்

    கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
    நோக்கங்கள்
    • புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்றநிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பினை அதிகரித்தல்.
    • வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்.
    • உழவர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துதல்
    நிதி ஆதாரம்
    • சமுதாய நீர் ஆதாரங்களை உருவாக்குதல் – மாநில அரசு திட்டம் (100%).
    • ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் சூரிய   சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் திட்டம், பிரதம மந்திரி வேளாண் நீர்ப் பாசனத் திட்டம், ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் – துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் ஆகிய  ஒன்றிய அரசின் பங்களிப்பு திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த திட்டங்களில் உள்ள நிதி ஆதாரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.
    மானியங்களும் சலுகைகளும்
    • அனைத்து இனங்களுக்கும் 100% மானியம்.
    • பல்வேறு ஒன்றிய அரசு திட்டங்களின் நெறிமுறைகளின்படி  நிர்ணயித்துள்ளஉச்சவரம்பு தொகைக்கு மிகாமல் மானியம் வழங்குதல்.
    திட்டப்பகுதி
    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் தெரிவு செய்யப்பட்ட 38 கிராமங்கள்.
    செயல்படுத்தப்படும் இனங்கள்
    • பாசன பரப்பு இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளில் சமுதாய நீர் ஆதாரத்தை (ஆழ்துளை/ குழாய் கிணறு) உருவாக்குதல்.
    • ஆதி திராவிட மற்றும் பழங்குடியின தனிப்பட்ட விவசாயிகளுக்கு நீர் ஆதாரத்தை (ஆழ்துளை குழாய் கிணறு) உருவாக்குதல்
    • பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.
    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு பாசன குளங்கள், ஊரணிகள், குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களை  தூர்வாரி மேம்படுத்துதல்
    தகுதி
    • தேர்ந்தெடுக்கப்பட்ட 38 கிராமங்களின் திட்டபகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட 38 கிராமங்களின்  திட்டபகுதிகளில் உள்ளஆதிதிராவிடர்/ பழங்குடியினர்,  சிறு குறு விவசாயிகள்.
  7. சேவைகள்

    1. இ-வாடகை

      வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலங்களுக்கு செல்லாமலே தங்கள் வீடு அல்லது வயல்களிலிருந்தே இ-வாடகை ஆன்லைன் செயலியின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

      1. புல்டோசர் வாடகை கட்டணம் – ரூ.970/மணிக்கு
      2. டிராக்டர் வாடகை கட்டணம் – ரூ.400/மணிக்கு இணைப்புக் கருவிகளுடன்.
      3. டிராக் வகை நெல் அறுவடை இயந்திரம் வாடகை கட்டணம் – ரூ.1630/மணிக்கு
      4. சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் வாடகை கட்டணம் – ரூ.760/மணிக்கு
      5. மினி டிராக்டர் வாடகை கட்டணம் – ரூ.400/மணிக்கு
    2. நில நீர் ஆய்வுக் கருவிகள்

      நிலத்தடி நீர் ஆய்வுக் கருவிகள் மூலம் திறந்தவெளி கிணறு, குழாய்க் கிணறு மற்றும் ஆழ்துளை குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கு ஏற்ற நிலத்தடி நீர் இருக்கக் கூடிய மண் படிவங்களின் அமைப்பினை கண்டறியலாம். இக்கருவி அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வாடகை அடிப்படையில் ஒரு ஆய்விற்கு ரூபாய் 500/- என்ற வீதத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.வாடகை கட்டணம்விவசாயம் சார்ந்த பணி : ₹500/- ஆய்விற்கு இதர பணி : ₹1000/- ஆய்விற்கு

அணுக வேண்டிய அலுவலர்

  • உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை,எண் 26, பல்துறை அலுவலக வளாகம் (முதல்தளம்), ஜெயங்கொண்டம் மெயின்ரோடு, அரியலூர்.
  • உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை,35/N-A, வெள்ளைப் பிள்ளையார் கோவில் தெரு, உடையார்பாளையம், அரியலூர்.