தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,அரியலூர் மாவட்டம்
- அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 15.12.2013 முதல் இயங்கி வருகிறது.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம் அரசு கட்டிடத்தில் எண்.4/326, திருச்சி மெயின் ரோடு, RTO அலுவலகம் எதிரில், கீழப்பழுர் அஞ்சல், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது.
- தலைவர், முதன்மை அலுவலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், எண்.76, மவுண்ட் சாலை, கிண்டி, சென்னை – 32.
- அரியலூர் மாவட்டத்தின் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆவார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகள்
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாசு கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் விதிகளை முறையாக செயல்படுத்தி வருகிறது. வெளியேற்றப்படும் நீர், காற்று மற்றும் நில மாசுக்களின் தன்மையை வாரியம் சேகரித்து, கண்டறிந்து தரவுகளை வெளியிடுகிறது. மேலும் வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் காற்று மாசின் தரத்தை அறிய முறையான தர அளவுகளை நிர்ணயத்துள்ளது.
- வாரியம் தொழிற்சாலைகளுக்கு இரண்டு கட்டமாக இசைவாணைகளை வழங்குகிறது. முதற்கட்டமாக, தொழிற்சாலை நிறுவுவதற்கான இசைவாணை, தகுந்த இடத் தேர்வுக்கு பின், கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கு முன் வழங்கப்படுகிறது. பிறகு வாரியத்தால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காற்று மாசு கட்டுப்பாடு சாதனங்களை தொழிற்சாலை அமைத்த பின், உற்பத்தியை தொடங்கும் முன் தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை இரண்டாவது கட்டமாக வழங்கப்படுகிறது.
- வாரியத்தின் கள அலுவலர்கள் தங்களின் பகுதிக்குட்பட்ட ஒவ்வொரு தொழிற்சாலையையும் குறித்த கால இடைவெளிகளில் ஆய்வு செய்து, செயல்முறைக் கழிவுநீர் மற்றும் வாயுக் கழிவுகளைச் சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள மாசு கட்டுப்பாடு சாதனங்களின் செயல்திறனைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். வாரியம் ஒவ்வொரு தொழிற்சாலை வெளியிடும் மாசுபாட்டினை கண்காணிக்க அவற்றின் தன்மையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தியுள்ளது.
தொழிற்சாலைகளின் வகை பிரிவு பெரிய வகை சிவப்பு
ஆரஞ்சு
பச்சைநடுத்தர வகை சிவப்பு
ஆரஞ்சு
பச்சைசிறிய வகை சிவப்பு
ஆரஞ்சு
பச்சை17 வகையான தொழிற்சாலைகள் - மாசினை கட்டுப்படுத்த தவறும் தொழிற்சாலைகளின் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நிர்ணயத்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தொழிற்சாலைகளுக்கு முகாந்திர விளக்கம் கோரும் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. மேலும் அத்தகைய தொழிற்சாலைகள் மூடுதல், மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீர் வழங்குதலை துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றன.
- வாரியம், தொழிற்சாலைகளை சிறந்த முறையில் கண்காணிக்க பொறியார்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது. வாரியத்தில் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்களும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களும் ஆரஞ்சு, பச்சை வகை மற்றும் சிறிய சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்கவும், புதுபிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் முகாந்திர விளக்கம் கோரவும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்பு எண். 04329-250055
இணையதள முகவரி.www.tnpcb.gov.in