மூடுக

பொதுப்பணித்துறை (கட்டடம்)

அரசானை 373/பொப (டி2) நாள் 27.6.1997ன்படி மேற்கண்ட ஈரோடு வட்ட ஆளுகையிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டம், திருச்சி ஆளுகையில் கீழ் இயங்கி வருகிறது. இக்கோட்டம் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உபகோட்டம் மற்றும் பெரம்பலூர் கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உபகோட்டம், மற்றும் பெரம்பலூர் கட்டுமான உபகோட்டம் ஆகிய மூன்று உபகோட்டங்களை உள்ளடக்கியதாகும், அரியலூர் உபகோட்டத்தில் அரியலூர் பிரிவு-ஐ மற்றும் பிரிவு – ஐஐ, செந்துறை பிரிவு, செயங்கொண்டம் பிரிவு அலுவலகங்களை கொண்டுள்ளது, இக்கோட்டமானது அரசுதுறையை சார்ந்த பள்ளிகள், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு தனித்தனி விடுதிக்கட்டடங்கள், நீதித்துறைக்கு தேவையான கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கு தேவையான குடியிருப்பு கட்டடங்கள், வருவாய்துறைக்கு தேவையான கட்டடங்கள் அலுவலர்களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டடம், மாவட்ட போக்குவரத்து துறை, சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டடம், தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், வணிகவரி அலுவலகம், மாவட்ட தொழிற்மையம், தொல்லியல்துறை, புள்ளியியல் துறை, விளையாட்டுத்துறை, அருங்காட்சியங்கள் துறை, பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, கருவவூலம் மற்றும் கணக்கு துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளுக்கு தேவையான கட்டட கட்டுமான வசதிகள் மற்றும் பராமரிப்பு பழுதுபார்த்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேலும் அரசு அலுவலகங்கள் இயங்க அரசு கட்டடங்கள் காலி இல்லை என சான்று மற்றும் தனியார் கட்டடங்களில் இயங்கும் அரசு கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலர் கள் தனியார் குடியிருப்புகளுக்கு வாடகை நிர்ணயம் செய்தல், நிலமெடுப்புக்கு இழப்பிட்டுதொகை கணக்கீடு செய்தல் போன்ற பணிகள் இத்துறைமூலம் செய்யப்பட்டு வருகிறது.

அலுவலக விபர அறிக்கை

அலுவலக முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி பல்துறை அலுவலக வளாகம்,
தரைதளம்,
ஜெயங்கொண்டம் ரோடு, அhpயலூர்
போன் – 04329 – 224550
மின்னஞ்சல் – eekattadamariyalur[at]gmail[dot]com
வ. எண் பெயர் பதவி மின்னஞ்சல் முகவரி
1 ந.ச.இரவிச்சந்திரன், எம்.இ செயற்பொறியாளர் eekattadamariyalur[at]gmail[dot]com
2 ஜோ.தேவேந்திரன், பி.இ உதவிசெயற்பொறியாளர் aeebariyalur[at]gmail[dot]com
3 ப.ஜெயந்தி, பி.இ உதவிபொறியாளர், பிரிவு – ஜெயங்கொண்டம் pwdbuildingsjkm[at]gmail[dot]com
4 பா.அட்சயா, பி.இ உதவிபொறியாளர் அரியலூர் பிரிவு  II, செந்துறை

 

மாவட்டத்தின் முதன்மையான கட்டடங்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டம் அரியலூரில் ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் 2.25 கோடி மதிப்பீட்டில் இவ்வலுவலகம் மூலம் கட்டப்பட்டு 2006ஆம் ஆண்டு அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரக கட்டடம் சுமார்ர 12.88 கோடி மதிப்பீட்டில் புதியதாக இவ்வலுவலகம் மூலம் கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது மேலும் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், குடியிருப்பு கட்டடம், மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பு கட்டடம் இவ்வலுவலகம் மூலமாகவே கட்டப்பட்டது,
அரியலூர் மாவட்டம் செயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டடம் ரூ.24.86 கோடி மதிப்பீட்டில் இவ்வலுவலகம் மூலம் கட்டப்பட்டு உரிய துறையின் பயன்பாட்டில் உள்ளது.