மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
திட்டத்தின் செயல்பாடு
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமானது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அங்கீகாிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு 90% மற்றும் மாநில அரசு 10% நிதியுதவி செய்கிறது.
- 18 வயதிற்கு மேற்பட்ட வேலை செய்ய விருப்பமுள்ள நபா்களுக்கு கிராம புறங்களில் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தில் பணிபுரியும் திட்ட பணியாளா்களுக்கு e-FMS முறையில் நாள் ஒன்றுக்கு ரூ.205/-வீதம் வாராந்திர ஊதியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களின் வறுமையை ஒழித்து, வேலை வாய்ப்பு வழங்குகிறது.
- இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் இயற்கை வளம் மற்றும் நீா்வள பாதுகாப்பு மற்றம் மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் கிராமபுறத்தை வளப்படுத்தும் பொருட்டு பஞ்சாயத்து அலுவலகம் ஊராட்சி சேவை மையம், வட்டார சேவை மையம் அங்கன்வாடி, மழையால் பாதிக்கப்படும் பள்ளிகளில் சுற்றுச்சுவா் அமைத்தல், ஆதிதிராவிடா்/பழங்குடியினா் வாழ் பகுதிகளுக்கு மெட்டல் சாலை அமைத்தல், பெருந்திரள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் தடுப்பணைகள் போன்ற பணிகளை பிற துறைகளுடன் இணைந்து (தோட்டக்கலை, வேளாண்மைத்துறை, வனத்துறை மற்றும் மீன்வளத்துறையுடன்) செயல்படுத்தப்படுகிறது.
- இத்திட்டத்தில் 3% மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பணி வழங்கப்படுகிறது. இவா்கள் பணித்தளத்தில் பயனாளிகளுக்கு குடிநீா் வழங்குதல் அவா்களது சிறு குழந்தைகளை பராமரித்தல் மற்றும் சாலையோரங்களில் உள்ள தேவையற்ற மரக்கிளைகள் மற்றும் செடிகளை அகற்றுதல் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.
இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம்
- கிராம புறங்களில் வறுமை கோட்டிற்கீழ் வாழும் ST/SC மக்களுக்கு இலவசமாக வீடு வழங்கப்பட்டு வருகிறது.
- இத்திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து நிதி அளிக்கப்படுகிறது.
- 2014-15 மற்றும் 2015-16-ம் நிதியாண்டிற்கு மத்திய அரசு பங்குத்தொகையாக ரூ.799.68 இலட்சம், மாநில அரசு பங்குத்தொகையாக ரூ.533.12 லட்சம் வழங்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விட்டது.
பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் (ஊரகம்)
- பொருளாதர மக்கள் கணக்கெடுப்பு பட்டியலில் உள்ள கிராம புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ST/SC தகுதியுள்ள மக்களுக்கு இலவசமாக வீடு வழங்கப்பட்டு வருகிறது..
- இத்திட்டத்தில் மத்திய அரசு பங்குத்தொகையாக 60 சதவீதம் மற்றும் மாநில அரசு பங்குத்தொகை 40 சதவீதம் வழங்கப்படுகிறது..
- கழிப்பறை பணிக்கு ரூ.12,000/-யும், MGNREGS திட்டத்தின் கீழ் 90/95 மனித சக்தி பயன்படுத்திக் கொள்ளலாம்..
- SC-57%, ST-3%, சிறுபான்மை 6.65% இதர இனங்களுக்கு 33.35% வீதம் இன ஒதுக்கீடு செய்யப்படுகிறது..
பாராளுமன்ற உறுப்பினா் உள்ளுா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்
நோக்கம்
- மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளியினை, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள், அவரவா் தோ்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப நிலையைான சமுதாயச் சொத்துக்கள் மற்றும் சமுதாயக் கட்டமைப்பு பணிகள் தோ்வு செய்து செயல்படுத்தப்படுகிறது.
- ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ரூ.5.00 கோடி நிதியினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.
- அாியலூா் மாவட்டம் பணியினை செயல்படுத்தும் மாவட்டம் மட்டுமே. இதன் ஒருங்கிணைப்பு மாவட்டம் கடலூா் மாவட்டமாகும்.
- இத்திட்டத்திற்கென தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனி சேமிப்பு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு நிர்வாகக் கணக்கில் தனி ரொக்கப்புத்தகம் பராமரிக்கப்பட வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட பணிகள்
- குடிநீா்ப்பணிகள்
- கல்வி (கட்டிட பணிகள் மற்றும் கணிப்பொறி- அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள்)
- மின்வசதி
- சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
- பாசன வசதி
- சாலைப்பணிகள்
முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டம்
- இது மாநில அரசின் முழு நிதியில் செயல்படும் திட்டம்.
- வீடுகளின் கட்டுமானத்திற்கு ரூ.1,80,000-யும், சூரிய ஒளி விளக்கு அமைப்பதற்கு ரூ.30,000- வீதம் மொத்தம் ரூ.2,10,000- நிதி உதவி வழங்கப்படுகிறது.
- 300 சதுர அடி பரப்பளவில் வசிக்கும் அறை, சமையலறை, படுக்கையறை, வராண்டா மற்றும் கழிவறைகளுடன் வீடு கட்டப்பட வேண்டும்.
- கழிப்பறை பணிக்கு ரூ.12,000-யும், MGNREGS திட்டத்தின் கீழ் 90/95 மனித சக்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.
- SC-29%, ST-1%, சிறுபான்மை மற்றும் இதர இனங்களுக்கு 70% வீதம் இன ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- சூரிய சக்தியில் ஒளி விளக்குகள் 5 அமைக்கப்படும்.
தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்
திட்டம் செயல்படுத்துவதன் நோக்கம்
- 2011-12 முதல் 2015-16 முடிய 5 ஆண்டுகள் திட்டம் முதல் கட்டம் செயல்படுத்தி முடிக்கப்பட்டது.
- 2016-17 முதல் 2010-21 முடிய 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
திட்ட கூறுகள்
- சிறுபாசன ஏரிகள் மேம்பாடு செய்தல்
- அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள்
- தெருவிளக்குகள்
- குடிநீா் பணிகள்
- தெருக்களின் முன்னேற்றம்
- சாலை இணைப்பு
- மயான கொட்டகை மற்றும் மயான கொட்டமைக்கு செல்லும் பாதைகள்
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)
- தமிழ்நாட்டினை திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாநிலமாக மாற்றுவதற்காக தூய்மை பாரத இயக்கம் (ஊ) திட்டத்தின் கீழ் மத்திய அரசு (60%) மற்றும் மாநில அரசு (40க%) பங்களிப்புடன் தனிநபா் இல்லக் கழிப்பறைகள் ஊரக பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு கட்டி தரப்படுகிறது.
- ஒரு தனிநபா் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12000 பயனாளிக்கு மான்யம் வழங்கப்படுகிறது.
- கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மூலம் பொதுமக்களை கழிப்பறைகளை பயன்படுத்தும் பழக்கத்திற்கு மனமாற்றம் செய்திட விழிப்புணா்வு பிரச்சாரம் வழங்கப்படுகிறது.
- நிலம் இல்லாதவா்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் சுகாதார வளாகங்கள் போன்ற பொது கழிப்பிடங்கள் கட்டப்பட்டு அதனை பயன்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம்
நோக்கம்
- சட்டமன்ற உறுப்பினா் தொகுதிகளில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை உடனடியாக கண்டறிந்து அதனை செயல்படுத்துவதற்கான தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- சட்டமன்ற உறுப்பினா்கள் தனது சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை கண்டறிந்து அப்பணியினை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்திட பரிந்துரை செய்திடுவார்கள்.
- இத்திட்டம் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆண்டுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி ரூ.2.00 கோடி தொகையான 2017-18 ஆம் ஆண்டு முதல் ரூ.2.50 கோடி தொகையான உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது.
- சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு சட்டமன்ற உறுப்பினா் தொகுதிக்கான நிதி ஒதுக்கீடான ரூ.2.50 கோடியில் முன்னுாிமை பணிகளை கட்டாயமாக எடுத்து செய்ய ரூ.1.50 கோடி வரையறுக்கப்பட்ட கூறு நிதியாகவும், மீதமுள்ள வரையறுக்கப்படாத கூறு நிதியான ரூ.1 கோடியில் தடை செய்யப்பட்ட பணிகளின் பட்டியலில் இடம் பெறாத எந்த பணியையும் தம் விருப்பத்தின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினா் தோ்வு செய்யலாம்.
வரையறுக்கப்பட்ட கூறு நிதியான ரூ.1.50 கோடியில் எடுத்து செய்யக்கூடிய பணிகள்
- பள்ளிகளுக்கு (மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், அரசு பள்ளிகள் மட்டும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல்.
- குடிநீா்ப்பணிள், தெருவிளக்குகள், சிமெண்ட் சாலைகள், அங்கன்வாடி கட்டிடம், சத்துணவு கட்டிடம், சிமெண்ட் கான்கீரிட் பணிகள், சமையறைகூடம், சுற்றுச்சுவா் கட்டிடம், பாலங்கள், மயான கொட்டகை, நியாயவிலை கட்டிடம், உடற்பயிற்சி கூடம் கட்டுதல்.
வரையறுக்கப்படாத கூறு நிதியான ரூ.1.00 கோடியில் எடுத்து செய்யக்கூடிய பணிகள் தடை செய்யப்பட்ட பணிகள் தவிர பிற பணிகள் செய்யலாம்
- பயணியா் நிழற்கூடை
- பேரூராட்சி பகுதிகளில் புதிய வீடுகள் கட்டுதல், பழுது நீக்கம் செய்தல்.
- பள்ளிகளுக்கு தளவாடப் பொருட்கள் வாங்கி வழங்குதல் போன்ற பணிகள் செய்யலாம்.
ஒருங்கிணைந்த பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்
நோக்கம்
- ஒருங்கிணைந்த பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் ஊரக பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், சமையறைகள், கழிப்பறைகள் மற்றும் குடிநீா் வசதி போன்ற தாய் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஏதேனும் பழுதுகள் இருப்பின் தாய் திட்ட நிதியினை கொண்டு பழுது நீக்கம் செய்யப்படுகிறது.
- இத்திட்டம் தொடா்பான பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ), உதவி பொறியாளா் (ஊ.வ) மற்றும் தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா் அடங்கிய குழு தோ்வு செய்யப்படும்.
தன்னிறைவு திட்டம்
நோக்கம்
- தன்னிறைவு திட்டம் என்பது பொதுமக்கள் சுயசார்பு தன்மையை ஊக்குவிப்பதற்கும், மேன்மைபடுத்துவதற்கும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகளை ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உருவாக்கி பராமரிப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகாரித்து அதன் மூலம் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இத்திட்டத்தின் கீழ் பணியினை எடுத்து செய்வதற்கான கோரிக்கை தனிநபா் குழு தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தோ அல்லது அப்பகுதி மக்களிடமிருந்தோ உருவாகலாம். தெரிவு செய்யப்பட்ட பணியின் மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல் பொதுமக்கள் பங்களிப்பும், மூன்றில் இரண்டு பங்கும் அரசின் பங்களிப்பும் கொண்டு செயல்படுத்தப்படும்.
- ஆடவா் மற்றும் மகளிருக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
- பாலங்கள் அல்லது சிறிய பாலங்கள் கட்டுதல்.
- சாலை மற்றும் கப்பி சாலைகளை தார் சாலைகளாக தரம் உயா்த்துதல், பழுதடைந்த தார் சாலைகளை புதுப்பித்தல், சிமெண்ட் கான்கீரிட் சாலைகள் அமைத்தல்
- குடிநீா் பணிகள்
அம்மா உடற்பயிற்சி கூடம் 2016-17
- கிராமப்புற இளைஞா்களுக்கு உடல் பயிற்சியை செய்ய உதவுகிறது,
- கிராமபுற மக்களின் சுகாதார நனவை அதிகரிக்கிறது மற்றும் நோய்களை தடுக்கிறது.
- இளைஞா்களின் மன வலிமையை மேம்படுத்துகிறது.
- விளையாட்டு மற்றும் இளைஞா்களை விளையாட்டிற்காக தயார்படுத்துதல்.
அம்மா பூங்கா 2016-17
- உடல்நலம் மற்றும் உடற்கூறுகளின் உடற்பயிற்சி அதிகரிக்கிறது.
- குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் வயாதான மக்களுக்கு பொழுதுபோக்கு மனம் மற்றும் உடல் புத்துயிர் பெறுகிறது.
- கிராமத்தை அழகுபடுத்துகிறது.
- நடைபயிற்சிக்கு நடைபாதை வழங்குகிறது.
சாலை பணிகள்
பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் IX- 2015-16
- பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் தேசிய அளவில் மத்திய அரசின் நிதி உதவியில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து சாலை வசதியற்ற கிராமங்களுக்கும் 100 சதவிகிதம் சாலை வசதி ஏற்படுத்துதல்.
- இத்திட்டம் மத்திய கிராமப்புற மேம்பாடு ஆகும்.
நபார்டு
- நபார்டு திட்டத்தில் நபார்டு வங்கி இத்திட்டத்திற்காக நபார்டு வங்கி மூலமாக நிதி 80% நிதியும், 20% நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சாலைகள் மேம்பாடு செய்யவும், சாலைகள் பலப்படுத்தவும் முடியும்.
- இத்திட்டத்தின் மூலம் விவசாயின் விலை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும், பள்ளி, மருத்துவமனைக்கு எடுத்து செல்லவும் இத்திட்டம் பயன் உள்ளதாக இருக்கும்.
பேருந்து செல்லும் ஊரக சாலை மேம்படுத்துதல் 2014-15
- ஊரக பகுதிகள் சமூகப்பொருளாதார வளா்ச்சியில் சாலைகள் நேரடி பங்கு வகிப்பதால் கிராம பகுதியிலுள்ள பழுதடைந்த 1000 கிலோ மீட்டா் நீளமுள்ள பேருந்து செல்லும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் எடுத்து கொள்ளப்படுகிறது.
- இத்திட்டம் 2014-15 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
ஊரக உள்கட்டமைப்பு திட்டம் (சாலைகள்)- 2014-15
- ஊரக பகுதிகளில் இருக்கும் தார் போடப்படாத சாலைகள் தார் சாலைகளாக தரம் உயா்த்தப்படும்.
- இத்திட்டத்தின் மூலம் பேருந்து சாலைகள், சந்தை பகுதிகள், கல்வி மற்றும் சுகாதார மையங்களை குக்கிராமங்களுடன் இணைப்பது முக்கிய நோக்கமாகும்.
கிராம சாலை பராமரிப்பு திட்டம் – 2014-15
- பழுதடைந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை புதுப்பித்தல் இதன் நோக்கமாகும்.
தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம்
- இந்த திட்டத்தில் அல்லாத சாலை தரம் உயா்த்துதல், மிகவும் பழுதடைந்த சாலைகளை பலப்படுத்துதல் சாலைகளை இணைத்தல் மற்றும் சேதமடைந்த தார் சாலைகளை புதுப்பித்தல் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
- இத்திட்ட பணிகள் சாலைகள் மேம்படுத்துதல், பலப்படுத்துதல் மற்றும் தரம் உயா்த்துதல் ஆகியவகைகள் இதன் அங்கங்கள் ஆகும்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவா்களால் அறிவிக்கப்பட்ட டான்செம் விரிவாக்க வளா்ச்சிப் பணிகள் 2016
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அறிவிக்கப்பட்ட டான்செம் விரிவாக்க வளா்ச்சி பணிகள் அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 675 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் அரியலூா் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பின்வரும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- அாியலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆனந்தவாடி, மணக்குடி, சீனிவாசபுரம், தாமரைகுளம், உசேனாபாத், ராஜுவ்நகா், வாலாஜாநகரம், கிருஷ்ணாபுரம் மற்றும் ராவுத்தன்பட்டி ஆகிய கிராமங்ளிலிருந்து அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 2 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள், ஆழ்துறை கிணறுகள், சுற்றுசுவா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும சிறுவனா், சிறுமியருக்கான தனித்தனி கழிப்பறைகள் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- அாியலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் மரக்கன்றுகள் நடுதல், கசிவு நீா் குட்டைகள் அமைத்தல், மழைநீா் சேகரிப்பு செய்தல் போன்ற பசுமை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- அாியலூா் மாவட்ட மருத்துவமனைக்கு 36000 சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய கட்டடம், பார்வையாளா்கள் காத்திருப்போர் அறை, நவீன சலவையகம் மற்றும் உள் மற்றும் வெளி நோயாளி பிரிவுகள் அமைக்கப்படும். ஆய்வனம் புதுப்பிக்கப்பட்டு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்படும். இவை 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.