மூடுக

மருதையாறு வடிநில கோட்டம், அரியலூர்

இக்கோட்டமானது 01.04.1968 அன்று அரியலூர் கோட்டம் என உதயமானது. பின் அரசாணை எண். 46 பொப (டபிள்யு.ஆர்.1) துறை / நாள் 19.01.1996-ன் படி பெயர் மாற்றம் செய்யப்பட்டு அய்யாறு வடிநில கோட்டம் எனவும், பின் அரசாணை எண். 371 பொப (டபிள்யு.ஆர்.1) துறை / நாள் 26.06.1997 -ன் படி மருதையாறு வடிநில கோட்டம் என செயல்பட்டு வருகிறது.

இக்கோட்டம் அரியலூர் மாவட்டத்தின் (பகுதி) மற்றும் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்டு இயங்கி வருகிறது எனவும், இக்கோட்ட ஆளுகையில் 3 உபகோட்டம் மற்றும் 9 பிரிவு அலுவலகங்களை உள்ளடக்கியது எனவும்

அதன் தலைமையிடங்கள் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

  1. மருதையாறு வடிநில உபகோட்டம், அரியலூர்பாசனப்பிரிவு அலுவலகம் – 1, அரியலூர்
    பாசனப்பிரிவு அலுவலகம் – 2, அரியலூர்
    பாசனப்பிரிவு அலுவலகம், செந்துறை.மேற்கண்ட பாசனப்பிரிவு அலுவலகங்களான 1 மற்றும் 2 ஆகியவைகள் அரியலூர் பொதுப்பணித்துறை வளாகத்திலும், பாசனபிரிவு, செந்துறை, செந்துறை பொதுப்பணித்துறை வளாகத்திலும் இயங்கி வருகின்றன.
  2. மருதையாறு வடிநில உபகோட்டம், ஜெயங்கொண்டம்பாசனப்பிரிவு அலுவலகம், ஜெயங்கொண்டம்
    சித்தமல்லி பாசனப்பிரிவு அலுவலகம், ஜெயங்கொண்டம்
    பாசனப்பிரிவு அலுவலகம், மதனத்தூர்.மேற்கண்ட பாசனப்பிரிவு அலுவலகங்களான பாசனபிரிவு, ஜெயங்கொண்டம் மற்றும் சித்தமல்லி பாசனபிரிவு ஆகியவைகள் பொதுப்பணித்துறை வளாகம், ஜெயங்கொண்டத்திலும், பாசனபிரிவு, மதனத்தூர் பொதுப்பணித்துறை வளாகம் காரைக்குறிச்சியிலும் இயங்கி வருகின்றன.
  3. மருதையாறு வடிநில உபகோட்டம், பெரம்பலூர்.பாசனப்பிரிவு அலுவலகம், பெரம்பலூர்
    பாசனப்பிரிவு அலுவலகம், சின்னாறு
    பாசனப்பிரிவு அலுவலகம், குன்னம்.மேற்கண்ட பாசனப்பிரிவு அலுவலகங்களான பிரிவு அலுவலகம் பெரம்பலூர் மற்றும் சின்னாறு ஆகியவைகள் பொதுப்பணித்துறை வளாகம் பெரம்பலூரிலும், பாசனபிரிவு குன்னம் பெரம்பலூரில் உள்ள செயற்பொறியாளரின் முகாம் அலுவலக வளாகத்திலும் இயங்கி வருகின்றன.

இக்கோட்டத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளான அரியலூர் மாவட்டத்தில் முறைசாரா ஏரிகள் 64 எண்கள், முறைப்படுத்தப்பட்ட ஏரிகள் 5 எண்கள், கொள்ளிடம் இடது கரை மைல் 47/6 முதல் 67/3 வரையிலும், பொன்னாறு வாய்க்கால் மற்றும் சித்தமல்லி நீர்தேக்கம் ஆகியவைகளும் பெரம்பலூர் மாவட்டத்தில் முறைசாரா ஏரிகள் 73 எண்களும் பராமரிப்பில் உள்ளன. இக்கோட்டம் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் அரசு திட்டப் பணிகள் செயல்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டமாக இருந்து வருகிறது.

நோக்கம் :

இத்துறையின் மூலம் முக்கியமாக பின்வரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

  1. பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரிக்கவும்
  2. புதிய கூடுதல் திட்டங்கள் கட்டுமானங்களை உருவாக்கவும் பாசன ஆதாரங்களை மேம்படுத்தவும்
  3. நீர்வழிப் பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்து மேம்படுத்தவும்
    சாத்தியமான பாசன திட்டங்களை கண்டறிந்து ஆய்வு செய்து உருவாக்கி மதிப்பீடு செய்யவும் அதன்மூலம் அரசின் கொள்கைகள் உறுதிமொழிகள் அரசின் திட்டங்கள் இத்துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலக முகவரி

வ. எண்அலுவலக முகவரிதொலைபேசி எண்மின் அஞ்சல் முகவரி

1 செயற்பொறியாளர்,பொ.ப.து / நீ.ஆ.து. மருதையாறு வடிநில கோட்டம்அரியலூர். 04329-222079 eemarudaiyaru@yahoo[dot]com
2 உதவி செயற்பொறியாளர் பொ.ப.து. / நீ.ஆ.து. மருதையாறு வடி நில உபகோட்டம் அரியலூர். 04329-223620 aeemarudaiyaruariyalur@gmail[dot]com
3 உதவி செயற்பொறியாளர்  பொ.ப.து. / நீ.ஆ.து. மருதையாறு வடி நில உபகோட்டம் ஜெயங்கொண்டம். 04331-250850 aeewrdjkm@gmail[dot]com
4 உதவி செயற்பொறியாளர்   பொ.ப.து. / நீ.ஆ.து. மருதையாறு வடி நில உபகோட்டம் பெரம்பலூர் 04328-224406 pwdwropblr@gmail[dot]com

திட்டத்தின் சாதனைகள்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் கார்குடி கிராமம் சுத்தமல்லி நீர்த்தேக்கம் புணரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் பணி

இந்த கோட்டத்தின் கட்டுப்பாட்டில் சுத்தமல்லி நீர்த்தேக்கம் ஆனது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் கார்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இந் நீர்த்தேக்கமானது 5.05 கிமீ. அளவிற்கு சுற்றுக் கரையையும் அதிகபட்ச கரையின் உயரமாக 7.20 மீ. உடையதாகவும் மேலும் 3 (11.00 X 4.75மீ.) கண்களை கொண்ட உபரி நீர்ப்போக்கியானது அதிகபட்ச நீர் வெளியேற்றும் திறன் 495 கனமீட்டர் / வினாடி ஆகவும் கொண்டு அமைந்துள்ளது. அணையின் முழுகொள்திறனானது 6.422 மி.கன மீட்டராக (226.80 மி. கன அடி) உள்ளது. இத்திட்டமானது 1989ல் முடிக்கப்பட்டதாகும். சுத்தமல்லி நீர்த்தேக்கத்தின் மூலம் 5080.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை முழு அளவில் பராமரிக்கும் பொருட்டு கரைகளை பலப்படுத்தி கற்கள் பிரித்து அடுக்குதல். தடுப்புச் சுவர் அமைத்தல் அணையின் முன்பக்க கரையில் நீர் அரிமானத்தை தடுக்கும் பொருட்டு புற்கள் அமைத்தல் மற்றும் வானிலைக் கருவிகள் இடிதாங்கி, தகவல் தெடர்பு சாதனங்களை வலுப்படுத்துதல் போன்ற பணிகளுடன் திருத்தப்பட்ட வெள்ள மதிப்பீட்டின் படி கூடுதலாக வெள்ள நீரை வெளியேற்றும பொருட்டு கட்டுப்பாடற்ற வெள்ள நீர்ப்போக்கி (Uncontrolled surplus weir ) அமைக்கும் பணியும் அணை புணரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் (Dam Rehabilitation and Improvement project ) ரூ. 1452.51 இலட்சத்திற்கு அரசு ஆணை எண் 211 பொ.ப.து w1 / நாள் 22.08.2012 ன் படி நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் துவங்கி முடிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம் விளாங்குடி கிராமம் விளாங்குடி ஓடையின் குறுக்கே தடுப்பணை பணி.

இத்தடுப்பணையானது 8 கிணறுகள் 24 ஆழ்துளை கிணறுகள் நிலத்தடி நீர் மேம்படுத்துவதன் மூலம் அருகில் உள்ள 58.29 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. இத்தடுப்பணையின் நீர் கொள்ளவு 0.78 மி.க.அடி. வருட கொள்ளளவு 2.34 மி.க.அடி. இத் தடுப்பணையின் நீர்வழிப்பாதை நீளம் 36.00 மீ மற்றும் 68.00 மீ3 / வினாடி வெளியேற்றும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

இப்பகுதியானது பிற்படுத்தப்பட்ட மற்றும் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட மக்கள் வசிக்கும் பகுதியாகும். இத்தடுப்பணைகள் நிறைவேற்றப்ட்டபின் குடிநீர் தட்டுப்பாடு பாசன வசதி மேம்பாடு நிலத்தடி நீர் சேகரிப்பு ஆகியவை நிறைவடைந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம் சிறுவளுர் கிராமம் கல்லார் ஓடையின் குறுக்கே தடுப்பணை பணி.

இத்தடுப்பணையானது 8 கிணறுகள் 17 ஆழ்துளை கிணறுகள் நிலத்தடி நீர் மேம்படுத்துவதன் மூலம் அருகில் உள்ள 68.50 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணையின் நீர் கொள்ளவு 0.65 மி.க.அடி. வருட கொள்ளளவு 1.95 மி.க.அடி. இத்தடுப்பணையின் நீர்வழிப்பாதை நீளம் 35.00 மீ மற்றும் 107 மீ3 / வினாடி வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியானது பிற்படுத்தப்பட்ட மற்றும் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட    மக்கள் வசிக்கும் பகுதியாகும். இத்தடுப்பணைகள் நிறைவேற்றப்பட்டபின் குடிநீர் தட்டுப்பாடு  பாசன வசதி  மேம்பாடு  நிலத்தடி  நீர்  சேகரிப்பு  ஆகியவை  நிறைவடைந்துள்ளது

2021-2022 ஆம் ஆண்டிற்கான தூர்வாரும் பணிகள்
வ. எண் பணியின் பெயர் ஆவண இணைப்பு மதிப்பீடு தொகை (ரூபாய் இலட்சத்தில்) நீளம் (கி.மீ)
1 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் சுள்ளாங்குடி கிராமம் சுள்ளாங்குடி வடிகால் தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 4.00 2.00
2 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் அரண்மனைக்குறிச்சி கிராமம் அரண்மனைக்குறிச்சி வடிகால் பணி. இங்கே சொடுக்கவும் 5.00 2.50
3 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் வெங்கனூர் கிராமம் ஆண்டிஓடை உபரிநீர் வாய்க்கால் எல்.எஸ் 0 மீ முதல் 5000 மீ தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 18.00 5.00
4 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கரைவெட்டி; கிராமம் ஆண்டிஓடை உபரிநீர் வாய்க்கால் எல்.எஸ் 5050மீ முதல் 10000மீ தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 17.50 4.95
5 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கரைவெட்டி; கிராமம் வேட்டக்குடி உபரிநீர் வாய்க்கால் எல்.எஸ் 0மீ முதல் 5000மீ தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 18.00 5.00
6 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கீழகாவட்டன்குறிச்சி கிராமம் வேட்டக்குடி உபரிநீர் வாய்க்கால் எல்.எஸ் 5050மீ முதல் 9000மீ தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 16.00 3.95
7 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் விரகாலூர் கிராமம் வெற்றியூர் ஓடை எல்.எஸ் 0மீ முதல் 5000மீ தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 17.00 5.00
8 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் குந்தபுரம்; கிராமம் வெற்றியூர் ஓடை எல்.எஸ் 5050மீ முதல் 9000மீ தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 15.00 3.95
9 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கீழகுளத்தூர் கிராமம் மொட்டையா பிள்ளை ஏரி உபரிநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 3.50 2.00
10 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கீழகுளத்தூர் கிராமம் செட்டி ஏரி உபரிநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 4.00 2.50
11 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் ராயம்புரம் கிராமம் ராயம்புரம் பெரிய ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 5.00 3.50
12 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் அரியலூர் கிராமம் அல்லிநகரம் ஓடை அணைக்கட்டு வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 5.00 2.70
13 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கல்லங்குறிச்சி கிராமம் தாமரை ஓடை அணைக்கட்டு மேல்புறம் மற்றும் கீழ்புறம் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 5.00 1.50
14 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் ரெட்டிபாளையம் கிராமம் உப்போடை அணைக்கட்டு மேல்புறம் மற்றும் கீழ்புறம் தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 8.00 1.00
15 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கீழையூர் கிராமம் (மேலப்பழுர்) பாப்பன் ஏரி உள் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 15.00 2.10
16 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் மல்லூர் கிராமம் மாணிக்கவாசகர் ஓடை தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 15.00 2.70
17 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் பொன்னார் பிரதான வாய்க்கால் எல்.எஸ். 0 மீ முதல் 8000 மீ வரை தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 35.00 8.00
18 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் பொன்னார் பிரதான வாய்க்கால் எல்.எஸ். 8100 மீ முதல் 16000 மீ வரை தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 35.00 7.90
19 அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் ராயம்புரம் முதல் கடுகூர் கிராமம் வரை சென்னிவனம் காடு முதல் சித்தமல்லி அணை 0 கி.மீ. முதல் 4.80 கி.மீ வரை ஓடை தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 52.00 4.80
20 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கடுகூர் முதல் தேளூர் கிராமம் வரை சென்னிவனம் காடு முதல் சித்தமல்லி அணை 4.90 கி.மீ முதல் 9.60 கி.மீ ஓடை தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 54.00 4.70
21 அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் தேளூர் முதல் விளாங்குடி கிராமம் வரை சென்னிவனம் காடு முதல் சித்தமல்லி அணை 9.70 கி.மீ முதல் 14.30 கி.மீ ஓடை தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 58.00 4.60
22 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மற்றும் அரியலூர் வட்டம் விளாங்குடி முதல் சித்தமல்லி கிராமம் வரை சென்னிவனம் காடு முதல் சித்தமல்லி அணை 14.50 கி.மீ முதல் 19.20 கி.மீ ஓடை தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 56.00 4.70
23 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் சித்தமல்லி முதல் காருகுடி கிராமம் வரை சென்னிவனம் காடு முதல் சித்தமல்லி அணை 19.35 கி.மீ முதல் 24.00 கி.மீ ஓடை தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 52.00 4.65
24 அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் காட்டாத்தூர் கிராமம் முதல் கூவத்தூர் கிராமம் வரை செங்கால் ஓடை அணைக்கட்டு தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 40.00 2.20
25 அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் ஸ்ரீராமன் கிராமம் நமச்சி ஓடை அணைக்கட்டு தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 12.00 2.50
26 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் பொன்னார் பிரதான வாய்க்கால் எல்.எஸ். 16000 மீ முதல் 24850 மீ வரை தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 35.00 8.75
27 அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் செங்கால் ஓடை அணைக்கட்டு அய்யூர் கிராமம் முதல் காட்டாத்தூர் கிராமம் வரை வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 20.00 4.00
28 அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் காடூர் அணைக்கட்டு வெள்ளூர் கிராமம் முதல் காடூர் கிராமம் வரை வரத்து வாய்க்கால் தரைத்தளம் தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 25.00 3.00
29 அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் மணப்பத்தூர் கிராமம் வீரவாசி அணைக்கட்டு பெரியாக்குறிச்சி கிராமம் முதல் சோழன்குடிகாடு கிராமம் வரை வரத்து வாய்க்கால் தரைத்தளம் தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 10.00 3.70
30 அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் செந்துறை பெரிய ஏரி, இலங்கைசேரி கிராமம் முதல் செந்துறை பெட்ரோல் நிலையம் வரத்து வாய்க்கால் தரைத்தளம் தூர்வாரும் பணி இங்கே சொடுக்கவும் 6.00 2.00
31 அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அசாவீரன்குடிகாடு கிராமம் மாரக்குறிச்சி அணைக்கட்டு மேல்புறம் தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 9.00 1.50
32 அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் மணப்பத்தூர் கிராமம் அழகுபடையாட்சி நந்தியான்குட்டை ஏரி வரத்து வாய்க்கால் தரைத்தளம் தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 4.00 1.80
33 அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் மணக்குடையான் கிராமம் செல்லியம்மன் ஓடை அணைக்கட்டு மற்றும் நீலாம்புறம் ஏரி மேல்புறம் தூர்வாரும் பணி. இங்கே சொடுக்கவும் 27.00 4.50
அரியலூர் மாவட்டம் -மொத்தம். 701.00 123.65