மூடுக

தொடக்கக் கல்வித் துறை

பள்ளிக் கல்வி
கல்வி

நல்லறிவு தந்திடும்; நம்பிக்கை யூட்டிடும்;
செல்லுமிட மெல்லாம் சிறப்பளிக்கும்: கல்விபோல்
நன்னெறி காட்டுவது ஞாலத்தில் வேறில்லை
என்றுணர்ந்தே கற்பர் இனிது!

பொது :
  • அரியலுார் மாவட்டத்தில் அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 409 தொடக்கப் பள்ளிகளும் 129 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. மேலும், 62 மழலையர் தொடக்கப்பள்ளிகளும் மொத்தம் 600 பள்ளிகள் உள்ளன.
  • தொடக்கக் கல்வித் துறையில் மொத்தம் 538 தலைமையாசிரியர் பணியிடங்களும், 1697 பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் உள்ளன.
  • 1முதல்5 ஆம் வகுப்புவரை 35425 மாணாக்கர்களும், 6 முதல் 8 வகுப்பு வரை 6974 மாணவர்களும் உள்ளனர்.
  • மழலையர் தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 5 வகுப்பு வரை 16284 மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். 2017-2018 ஆம் ஆண்டில் RTE 25 % இடஒதுக்கீட்டில் துவக்க வகுப்பில் 748 மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர்.
  • மாண்புமிகு முதலமைச்சர் அறிவிப்புகளின்படி தொடக்கப் பள்ளிகளில் விலையில்லா கற்றல் உபகரணங்களாக பாடநுால், பாடக்குறிப்பேடுகள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள், வண்ணம் தீட்டும் குச்சிகள், நான்கு இணை பள்ளிச் சீருடைகள், காலணிகள், புவியியல் வரைபடநுால் 2017-2018ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்டு வருகிறது.
  • 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக தமிழ்நாடு மின்விசை சக்தி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ. 50,000 / 75,000 முதலீடு செய்யப்பட்டு வைப்பு நிதி பத்திரமாக வழங்கப்பட்டு வருடம் ஒரு முறை வட்டித் தொகை மாணவர்களுக்கு பெற்று வழங்கப்படுகிறது. மாணவர்கள் 21 வயது முடிந்த பின் இத்தொகையை காசோலையாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுகிறது. இதுநாள் வரை இத்துறையின் முலம் 54 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மாணவியரின் இடைநிற்றலைத் தவிர்க்கவும் பெண்கல்வியை ஊக்கப்படுத்தவும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
  • அரியலுார் ஒன்றியம் கரு.சேனாபதியில் இயங்கும் கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யா உண்டு உறைவிடப் பள்ளியில் வருடம் தோறும் 40 மாணவிகள் 10 முதல் 14 வயது வரை உள்ளவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்பட்டு 6 முதல் 8 வகுப்புகள் வரை படித்து பயன்பெற்று வருகிறார்கள்.
  • மாண்புமிகு முதலமைச்சர் அறிவிப்பின்படி 2017-18 ஆம் கல்வியாண்டில் 6 ஆம் வகுப்பு பயிலும் 2063 மாணவ, மாணவிருக்கு சாதிச்சான்றிதழ் இத்துறையின் முலம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
கல்வியின் தர மேம்பாடு மற்றும் மாணவர் நலன் குறித்த அறிக்கை
  • தொடக்கக் கல்வி நிலையில் 1முதல் 4 ஆம் வகுப்பு வரை எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் (SALM) முறையும், 5ஆம் வகுப்பில் எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (SABL) முறையும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி (ALM) முறையிலும் கற்றல் கற்பித்தல் நடைமுறையில் உள்ளது. இதன் முலம் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கப்படுகிறது.
  • 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் SC பெண் குழந்தைகளுக்கு ரூ.. 500/- ம்,
    6ஆம் வகுப்பு பயிலும் SC பெண்குழந்தைகளுக்கு ரூ. 1000/- ம் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் SC பெண் குழந்தைகளுக்கு ரூ.1500/- ம் வழங்கப்படுகிறது.
  • மேலும், 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் MBC பெண் குழந்தைகளுக்கு ரூ.. 500/-ம், 6 ஆம் வகுப்பு பயிலும் MBC மாணவிகளுக்கு ரூ. 1000/- வீதமும் வழங்கப்பட்டு பெண்கல்வி கற்றலின் சதவீதத்தை மேம்பாடு அடைய உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  • தொடக்கக் கல்வியில் பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் பொருட்டு, கூடுதல் வகுப்பறைக்கட்டிடங்கள், ஆண்/பெண் கழிப்பறைகள் தனித்தனியாகவும், குடிநீர் வசதி மேம்படுத்தியும் வருகிறது.
  • மாணவர்களுக்கு சுத்தத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பள்ளிகளில் கை கழுவும் பழக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது.
  • எய்ட்சு விழிப்புணர்வு முகாம் நடத்துதல்,
  • புகையிலை / மது பழக்கம் தடுக்கும் விழிப்புணர்வு முகாம்
  • வளரிளம் பெண்களுக்கு Napkin வழங்கும் திட்டம், இரும்புச் சத்து மாத்திரை வியாழன் தோறும் மாணவர்களுக்கு வழங்குதல்.
அலுவலக தொலைபேசி மற்றும் கைபேசி

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம்
அலுவலக தொலைபேசி : 04329- 228871
கைபேசி : 9443497519

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கைபேசி எண்
உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
அரியலுார் 8525926731 8190987816
திருமானுார் 9442940522 9443734599
செந்துறை 9865417349 8428344789
ஜெயங்கொண்டம் 6380749834 8110001712
ஆண்டிமடம் 9442143573 8778165701
தா.பழுர் 9865494379 8610844045
பள்ளிகள் எண்ணிக்கை
மேலாண்மை வகை தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் மொத்தம்
அரசு பள்ளிகள் 2 2 4
ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் 351 110 461
நலப் பள்ளிகள் 22 0 22
நிதியுதவி பெறும் பள்ளிகள் 39 12 51
சுயநிதிப் பள்ளிகள் 62 0 62
நலத்திட்டங்கள் (கல்வியாண்டு 2017-18)
வ.எண் நலத்திட்டம் பயன்பெறும் வகுப்பு பயன்பெற்ற மாணவ/ மாணவர்கள்
1 விலையில்லா பாடநுால் (1,2,3 பருவம்) 1முதல் 8 வகுப்பு 42399
2 விலையில்லா பாடக்குறிப்பேடு (1,2,3 பருவம்) 1முதல் 8 வகுப்பு 42399
3 விலையில்லா புத்தகப்பை 1முதல் 8 வகுப்பு 42399
4 விலையில்லா சீருடை 1முதல் 8 வகுப்பு 42399
5 விலையில்லா காலணி 1முதல் 8 வகுப்பு 42399
6 விலையில்லா பேருந்து பயண அட்டை 1முதல் 8 வகுப்பு 538
7 கணித உபகரணப்பெட்டி 6 ம் வகுப்பு 2421
8 புவியியல் வரைபடநுால் 6 ம் வகுப்பு 2421
9 வண்ண கிரையான் 1,2 வகுப்பு 13098
10 வண்ண பென்சில்கள் 3 முதல் 5 வகுப்பு 22327