மூடுக

தாட்கோ

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ),  1974ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்களுக்கு  தீப்பிடிக்கா வீடுகள் கட்டுவதற்காக இந்திய நிறுவனச்சட்டம் -1956-இன் படி நிறுவப்பட்டது.
ஆதிதிராவிடர்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காகப் பல்வேறு திட்டங்கள் 1980-81 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் வாயிலாகச் செயல்படுத்தப்படுகின்றன.

திட்டங்கள்

  1. நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத்திட்டம் :
    ஆதிதிராவிட மக்களின் நில உடைமை மற்றும் நில மேம்பாட்டு ஆதாரங்களை உறுதி செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
  2. தொழில் முனைவோர் திட்டம் (சிறப்பு திட்டம்) :
    பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைப்பதற்கு 30%  (அ) ரூ. 2.25 இலட்சம் மான்யத்துடன் கூடிய வங்கி கடன் திட்டம்.
  3. தொழில் முனைவோர் திட்டம் :
    ஆதிதிராவிட மக்களை தொழில் முனைவோராக உயர்த்திட 18 முதல் 65 வயதிற்குட்பட்ட வேலையற்ற புதிய தொழில் முனைவோருக்கான பொருளாதார கடனுதவி திட்டம்.
  4. இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் :
    18 முதல் 45 வயதிற்குட்பட்ட படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்கிட பொருளாதார கடனுதவி திட்டம்.
  5. துரித மின் இணைப்பு திட்டம் :
    ஆழ்துளை கிணறு , கிணறு உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவசமாக மின்பளு திறனுகேற்ப தக்கல் முறையில்  90% மானியமும் 10% பயனாளி பங்குத்தொகையுடன் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
  6. மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் :
    ஆதிதிராவிட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர் வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களை செய்வதற்கு திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது ரூ 2.50 இலட்சம் முன் விடுவிப்பு மான்யமாக வழங்கப்படுகிறது.
  7. திறன் மேம்பாட்டு பயிற்சிகள் :
    வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய, ஆரம்ப நிலை பயிற்சிகளான ஆயத்த ஆடை தயாரித்தல், கணினி பயிற்சி (டேலி), சில்லரை செலவின மேலாண்மை, கணினி வன்பொருள் உதவியாளர்,வெல்டர்,வீட்டு பயன்பாட்டு மின் தொழில் நுட்பம், தையல் பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட திட்டங்களில் விண்ணப்பிப்பதற்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மேலும் தாட்கோ திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள, இங்கே சொடுக்கவும்.

அலுவலக முகவரி

மாவட்ட மேலாளர்,
தாட்கோ அலுவலகம்,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்

தொலைபேசி எண் : 04329 -228315