மூடுக

சமூக பாதுகாப்புத்திட்டம்

முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை

வ.எண் திட்டத்தின் பெயர் உதவித் தொகை தகுதிகள்
1 இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை ரூ.1000/-
  1. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், உழைக்கும் திறனற்றவராக இருக்க வேண்டும்
  2. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்
  3. வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்
  4. ரூ. 1,00,000/-மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.
2 இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை. ரூ.1000/-
  1. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  2. வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்.
  3. ஊனத்தின் தன்மை 80 சதவீதத்திற்கும் மேலாக இருக்க வேண்டும்.
  4. எவரிடத்திலும் பிச்சையெடுப்பராக இருக்கக் கூடாது.
  5. இரு செவிகளும் கேட்கும் திறனற்ற நபர்களும் இத்திட்டத்தில் பயனாளிகள் ஆவார்கள்.
3 இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை ரூ.1000/-
  1. விதவையாக இருக்க வேண்டும்.
  2. 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  3. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  4. வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்.
  5. ரூ. 1,00,000/-மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.
4 ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ.1000/-
  1. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். (மிகவும் வறுமை நிலையில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குழுவால் வயது வரம்பு தளர்வு செய்யப்படுகிறது)
  2. ஊனம் நிலை 40% மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.
  3. பேச்சுத்திறனற்ற பயனாளிகள் இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்.
  4. அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்கள் (கல்வி நிறுவனங்கள் உட்பட) பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெற தகுதியில்லை. தனியார் துறையில் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டு ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மேல் இருந்தாலும் உதவித்தொகை பெற தகுதியில்லை.
  5. ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/-க்கு மேல் பெறும் சுயதொழில் புரிவோருக்கும் உதவித்தொகைப் பெற தகுதியில்லை.
5 ஆதரவற்ற விதவை உதவித் தொகை ரூ.1000/-
  1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  3. ரூ. 1,00,000/-மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.
6 ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட வருக்கான உதவித் தொகை ரூ.1000/-
  1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. 30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  3. கணவனால் கைவிடப்பட்டு உரிய நீதிமன்றத்தில் சட்டரீதியாக விவாகரத்து பெற்றவராக அல்லது 5 வருடங்களுக்கு மேல் கணவரால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்.
  4. ரூ. 1,00,000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.
  5. எவரிடத்திலும் பிச்சையெடுப்பராக இருக்கக் கூடாது.
7 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளாத ஏழை பெண்களுக்கான உதவித் தொகை ரூ.1000/-
  1. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  3. திருமணம் செய்து கொள்ளாதவராக இருக்க வேண்டும்.
  4. ரூ. 1,00,000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்கள் இருக்கக் கூடாது. ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.
8 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்கீழ் முதியோர் உதவித் தொகை (பொது) ரூ.1000/-
  1. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நிலமற்ற விவசாய தொழிலாளியாகவும், உழைக்கும் திறனற்றவராக இருக்க வேண்டும்.
  2. ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் – 2011-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  3. ரூ. 1,00,000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம்-2011

தகுதிகள்

  • 50 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலத்தை அல்லது 5.00 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலத்தினை சொந்தமாக வைத்திருந்து மற்றும் அந்நிலத்தில் நேரடியாக பயிர்செய்யும் 18 முதல் 65 வயது வரை உள்ள அனைத்து குறு மற்றும் சிறு விவசாயிகள்.
  • விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுப்பட்டுள்ள 18 முதல் 65 வயது வரை உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள்.
  • மேற்கண்ட இரண்டு வகைகளை சேர்ந்தவர்கள் மூல உறுப்பினராக பதிவு பெற தகுதியுடைவர்கள். மேலும் அவர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களும் இத்திட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்ய தகுதியானவர்கள்.
  • சார்ந்து வாழ்பவர் என்பது பொருள் ஈட்டாத கீழ்கண்ட உறவினர்கள் விபரம் பின்வருமாறு:
    • மனைவி அல்லது கணவன் (நேற்விற்கேற்ப)
    • குழந்தைகள்
    • இறந்துவிட்ட மகனுடைய மனைவி (விதவை மருமகள்) மற்றும் குழந்தைகள்
    • பெற்றோர்
    • இத்திட்டத்தில் கீழ்கண்ட பணிகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் என கருதப்படும்.
      • தோட்டக்கலை
      • பட்டுப்புழு வளர்ப்பு
      • பயிர் வளர்த்தல், புல் வளர்த்தல் அல்லது தோட்ட விளைபொருள்
      • பால்பண்ளை தொழில்
      • கோழிப்பண்ணை தொழில்
      • கால்நடை வளர்ப்பு
      • உள்ளூர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுதல்
      • மரங்களை வளர்த்தல்
      • ஒரு குடியானவர் தமது நிலத்தில் முழுவதையோ அல்லது ஒரு பகுதியோ மேய்ச்சலுக்காக பயன்படுத்துதல்.
      • உரவகைகளான பயிர்களை வளர்க்கும் நோக்கத்திற்காக நிலத்தினை பயன்படுத்துதல்.

திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகள்

வ.எண் திட்டத்தின் பெயர் உதவித்தொகை தகுதிகள்
1 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகை தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில்நுட்ப பயிற்சி கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு
  1. இத்திட்டத்தின் கீழ் பதிவுபெற்ற உறுப்பினர் ஒருவரின் குழந்தைகளின் கல்விக்காக ஆண்டொன்றுக்கு கீழ்கண்டவாறு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  2. கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
  3. கல்வியாண்டு துவங்கிய ஆற மாத காலத்திறகுள் விண்ணப்பக்க வேண்டும்.
2 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் கீழ் உறுப்பினர் /  உறுப்பினரைச் சார்ந்தவருக்கான திருமண உதவி தொகை
  • பெண் – Rs. 10,000/-
  • ஆண் – Rs. 8,000/-
  1. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் – 2011-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  2. முதல் திருமணத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
  3. உறுப்பினர் / உறுப்பினரைச் சார்ந்தவரின் அனைத்து குழந்தைகளும் தகுதியானவர்
  4. திருமணம் முடிவதற்கு முன்பு 3 மாதம் அல்லுது திருமணம் முடிந்த பின்பு 6 மாத காலத்திற்குள் விண்ணப்பக்க வேண்டும்.
3 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்-இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை
  • இறப்பு-Rs.20,000/-
  • ஈமச்சடங்கு-Rs. 2,500/-
  1. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் – 2011-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  2. மரூன் நிற அட்டை பெற்ற உறுப்பினர் இறந்தால் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  3. இறப்புச்சான்றுடன் மரணம் ஏற்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
4 உழவர் பாதுகாப்புத்திட்டம்-விபத்திற்கான உதவித்தொகை
  • இறப்பு-Rs.1,00,000/-
  • 2 கைகள் அல்லது 2 கால்கள் அல்லது  ஒரு கை மற்றும் ஒரு கால் அல்லது மீட்க முடியாத அளவிற்கு கண்கள் இரண்டிலும் பார்வை இழத்தல்-ரூ.1,00,000/-
  • ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது பக்கவாதம்-ரூ.50,000/-
  • ஈமச்சடங்கு-Rs. 2,500/-
  1. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் – 2011-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  2. இத்திட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் இறந்துவிட்டால் அவரைச்(பதிவுபெற்ற உறுப்பினர்) சார்ந்தவருக்கு வழங்கப்படும்.
5 தற்காலிக உடல்திறன் குன்றியோருக்கான உதவித் தொகை ரூ.1000
  1. வயது 18 முதல் 65 வரை இருக்க வேண்டும்.
  2. தற்காலிக உடல் திறனற்ற காலம் வரை உதவி தொகை நீட்டிக்கப்படும்.
  3. புற்றுநோய், காசநோய், HIV, சிறுநீரக நோய், கை கால்களில் ஏற்படும் எலும்பு முறிவு மற்றும் அவையநிலை மாறுதல், தசைநார், முதுகெழும்பில் ஏற்படும் நிலையான காயங்கள், 40% மேல் பாதிக்கப்பட்ட மூட்டு மாற்று சிகிச்சை, நரம்பியல் ஒழுங்கின்மை, இதய கோளாறு நோய், கண் பார்கை, சுவாசக் கோளாறு, நுரையீரல் தொடர்புடைய நோய்கள், கல்லீரல் கோளாறு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்வர்கள்.
  4. அரசு மருத்துவரினால் வழங்கப்பட்ட சான்று தேவை.
6 அனாதை குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000/- எச்.ஐ.வி. நோயால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விபத்து நிவாரணத்திட்டம் (ARS)

உதவித்தொகை :

ரூ.20000

தகுதிகள் :
  1. விபத்தில் இறந்தவர்க்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்படுகிறது.
  2. அரசினால் தெரிவிக்கப்பட்டுள்ள 43 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
  3. முதல் தகவல் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
  4. வருட வருமானம் ரூ.48,000/-

நலிந்தோர் நல்வாழ்வுத் திட்டம் (DRS)

உதவித்தொகை  :

ரூ.20000

தகுதிகள் :
  1. வருமானம் ஈட்டக் கூடிய வறுமையில் வாழும் ஏழை குடும்பத்தலைவர் இறந்து விட்டால் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படும்
  2. குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள்
  3. விவசாயத் தொழில் செய்து வருபவர்களாக இருந்தால் 2.5 ஏக்கர் பாசன நிலம் வைத்திருப்பவர்கள் அல்லது 5 ஏக்கர் பாசனமில்லா நிலமுடைய விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறமுடியும்.
  4. இயற்கையாக மரணமாக இருக்க வேண்டும். விபத்து, தற்கொலை கொண்டவர் குடும்பம் இந்த உதவியைக் கோர முடியாது
  5. மரணமடைந்தவரின் வயது 60-க்குள் இருக்க வேண்டும்.
  6. குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளை சம்பாதிக்க முடியாத நிலையில் (உடல் ஊனமுற்றவர் அல்லது படித்துக் கொண்டிருப்பவராக இருத்தல்) இருந்தால் இவ்வுதவியைப் பெற இயலும். மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்படுகிறது.
  7. வருட வருமானம் ரூ.48,000/-

முதலமைச்சர் பொது நிவாரண நிதி

  1. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.48,000/-ஆக இருத்தல் வேண்டும்.
  2. இறப்பு (இயற்கை இடர்பாடுகள், வகுப்பு வாத மோதல்கள், வெடிபொருள் விபத்து, வெடிகுண்டு விபத்து, கொள்ளை சம்பவங்கள், வனவிலங்குகளால் தாக்கப்படுதல்)
  3. உயர் அறுவை சிகிச்சைகள் மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகள்
  4. தொழிற்சாலைகள் / ஆலைகளை மூடப்படுவதால் பாதிப்படையும் ஊழியர்கள்
  5. பாம்பு கடி, குளம், குட்டை ஆறு மற்றும் கடலில் மூழ்கி இறத்தல்
  6. கட்டிட இடிபாடுகள், வீடுகளில் ஏற்படும் தீ விபத்து மற்றும் அதனால் ஏற்படும் மூச்சு திணறலால் இறத்தல்.

மேற்படி நிகழ்வுகளில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1,00,000/- முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கும் திட்டம்

  • தகுதியுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்படுகிறது.

மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

தனித்துணை ஆட்சியர்,
சமூகப் பாதுகாப்புத் திட்டம்,
முதல் தளம், மாவட்ட ஆட்சியகரம்,
அரியலூர்.