மூடுக

கால்நடை பராமரிப்புத் துறை

குறிக்கோள்கள்

  • கால்நடைகள் மற்றும் கோழிகளின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல்.
  • அதிக பால் தரும் அயல்நாட்டு மற்றும் கலப்பின, காளைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உறை விந்துவைப் பயன்படுத்தி செயற்கைமுறை கருவூட்டல் இனப்பெருக்க நுட்பத்தை செயல்படுத்துவதன் மூலம் பால் உற்பத்தி மேம்பாடு அடையப்பட்டுள்ளது.
  • அதிக பால் தரக்கூடிய பசு மாடுகளை உற்பத்தி செய்வதற்காக, கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உறை விந்து மூலம் செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் /கால்நடை வைத்திருப்பவர்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரம் மேம்படும்.
  • உள்நாட்டின் கால்நடை இனங்களை அவற்றின் பூர்வீக வாழ்விடங்களில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க அதிக மகசூல் தரும் புல் வகை மற்றும் தீவன விதைகள் வழங்கப்பட்டு, பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் புல்நறுக்கும் மற்றும் புல் வெட்டும் கருவிகள் வழங்கப்படுகின்றன.
  • கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க செயல்திறனை பராமரிப்பதில் கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
  • கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு தேவையான சிகிச்சை மற்றும் உதவிகளை சரியான நேரத்தில் நவீன கால்நடை மருத்துவ கட்டமைப்புடன் வழங்குதல்.
  • கால்நடைகளுக்கு ஏற்படும் பெரிய தொற்று நோய்களைத் தடுப்பதன் மூலம் கால்நடைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்தல்.
  • கிராமப்புற ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துதல்.
  • கால்நடைகளின் மூலம் பரவும் முக்கிய ஜூனோடிக் நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதன் மூலம் மனித ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்.
  • அடிப்படை மற்றும் சமீபத்திய கால்நடை வளர்ப்பு நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பயிற்சி அளித்தல்.

ADMIN STRUCTURE

வ.எண் பதவியின் பெயர் அதிகாரியின் பெயர் தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி
1 மண்டல இணை இயக்குனர்,
கால்நடை பராமரிப்பு துறை, அரியலூர்
டாக்டர்.எம்.ஹமீத் அலி., எம்.வி.எஸ்.சி., 04329 299118 rjd.ari11[at]gmail[dot]com
2 துணை இயக்குனர் (கூ/பொ)
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி,
அரியலூர்.
டாக்டர்.பெ.ரமேஷ்., எம்.வி.எஸ்.சி ddcbfdariyalur[at]gmail[dot]com
3 உதவி இயக்குனர் ,
கால்நடை நோய் புலனாய்வு பிரிவு,
அரியலூர்.
Dr.P.சொக்கலிங்கம்., பி.வி.எஸ்.சி., adiuariyalur[at]gmail[dot]com
4 உதவி இயக்குநர் (கூ/பொ), கால்நடை பராமரிப்புத் துறை,
அரியலூர்.
Dr.P.சொக்கலிங்கம்., பி.வி.எஸ்.சி., (கூடுதல் பணி) adahariyalur[at]gmail[dot]com
5 உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை,
உடையார்பாளையம்.
டாக்டர்.பெ.ரமேஷ்., எம்.வி.எஸ்.சி., animaludpm[at]gmail[dot]com
6 கால்நடை மருத்துவர், கால்நடை மருத்துவமனை, அரியலூர் டாக்டர்.ர.ரிச்சர்ட்ராஜ்., பிவிஎஸ்சி., vhariyalur[at]gmail[dot]com
7 கால்நடை மருத்துவர் (கூ/பொ), கால்நடை மருத்துவமனை, பெரியவளையம் டாக்டர்.ர.ரிச்சர்ட்ராஜ்., பிவிஎஸ்சி., vhperiyavalayam[at]gmail[dot]com

 

. எண் திட்டத்தின் பெயர் பொறுப்பு அதிகாரி
1 மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் (SFDS) துணை இயக்குனர்,
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி, அரியலூர்.
2 தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் (கோழி வளர்ப்பு திட்டம்) உதவி இயக்குநர்கள், கால்நடை பராமரிப்புத் துறை, அரியலூர் & உடையார்பாளையம்.
3 கோமாரி நோய் தடுப்பு திட்டம்
(FMD-CP)
உதவி இயக்குநர்கள், கால்நடை பராமரிப்புத் துறை, அரியலூர் மற்றும் உடையார்பாளையம்.
4 கால்நடை காப்பீட்டுத்
திட்டம்
உதவி இயக்குநர்கள், கால்நடை பராமரிப்புத் துறை அரியலூர் & உடையார்பாளையம்.
5 கல்நாடை பாதுகாப்பு திட்டம் உதவி இயக்குநர்கள், கால்நடை பராமரிப்புத் துறை, அரியலூர் & உடையார்பாளையம்.
6 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, அரியலூர்.

 

வ.எண் திட்டத்தின் பெயர் திட்டத்தின் விளக்கம் தகுதி வரம்பு
1 மாநில தீவன அபிவிருத்தி திட்டம் (SFDS) கறவை மாடுகளை வளர்க்கும் போது, பசுந்தீவனம் உற்பத்தி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உற்பத்தித் தீவனச் செலவுகளை  கட்டுப்படுத்த மானாவாரி  பயிர்களாக விதைக்க பயறு வகை மற்றும் தீவன விதைகள் வழங்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கு 75% மானியத்தில் புல்வெட்டும் மற்றும் நறுக்கும் கருவிகள் வழங்கப்படுகின்றன .
ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் வழங்குவது விவசாயிகளுக்கு கடினமான பணியாகும், ஆனால் அவர்களின் கொல்லைப்புறத்தில் அசோலாவை உற்பத்தி செய்வது பசுந்தீவனத்திற்கு சிறந்த மாற்றாக இருக்கும். நிலமில்லாத விவசாயிகள் தங்களின் கொல்லை புறத்தில் ஹைட்ரோ போனிக்ஸ் வளர்த்து கால்நடைகளுக்கு வழங்குவதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிக்கலாம்.
பாசன நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள் / 5 கால்நடைகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள்.
2 தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் (கோழி வளர்ப்பு திட்டம்) தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டம் 2020 -2021 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. கோழி வளர்ப்பில் அனுபவம் அல்லது ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் 1000 கோழிகளுக்கான  கோழிப்பண்ணை வைத்திருக்கும் விவசாயிகள்.

பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க பயனாளி உறுதிமொழி அளிக்க வேண்டும்.

3 கோமாரி நோய் தடுப்பு திட்டம்
(FMD-CP)
கோமாரி நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை 1.62 இலட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து கால்நடை பராமரிக்கும் விவசாயிகள்.
4 கால்நடை காப்பீட்டுத் திட்டம் தவிர்க்க இயலாத காரணங்களால் கால்நடைகள் இறப்பது விவசாயிகளுக்கு பெரிய பொருளாதார இழப்பாகும். இத்தகைய இழப்புகளை சமாளிக்க, கறவை மாடுகளுக்கு இத்துறையின் மூலம் மானிய கட்டணத்தில் காப்பீடு செய்யப்படுகிறது. 2 1/2 வயது முதல் 8 வயதுக்குட்பட்ட கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.
1 முதல் 3 வயதுக்குட்பட்ட செம்மறி ஆடுகளுக்கு, காப்பீடு செய்யலாம்.ஒரு பயனாளி அதிகபட்சமாக 5  கால்நடைகளுக்கு மட்டுமே காப்பீடு செய்யத் தகுதியுடையவர்.
5 கல்நடை பாதுகாப்பு திட்டம் இத்திட்டத்தில், கால்நடை மருத்துவ வசதிகளை எளிதில் அணுக முடியாத தொலைதூர கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படும்.

மொத்தம், 6 தொகுதிகளிலும் 120 சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. குடற்புழு நீக்கம், கருவூட்டல், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் சிறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

அனைத்து கால்நடை பராமரிக்கும் விவசாயிகள்.
6 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி விவசாயிகளின் வீட்டு வாசலில் அவசர கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கிட ஜெயங்கொண்டத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டத்தில் 1 நடமாடும் கால்நடை மருத்து ஊர்தி இயங்கி வருகிறது. மேற்கண்ட சேவைகளைப் பெறுவதற்கு கட்டணமில்லா எண்.”1962” பயன்பாட்டில் உள்ளது அவசரகால சூழ்நிலையில் கால்நடை மருத்துவ வசதிகளை பெற உதவிக்கு 1962 ஐ அழைக்கவும்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005:–

 RTI சட்டம்-2005ன் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை (அரியலூர் மற்றும் உடையார்பாளையம் கோட்டத்தில்) ஏதேனும் தகவல் தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியைத் தொடர்பு கொள்ளவும்:-

பொது தகவல் அலுவலர் / மண்டல இணை இயக்குனர்

கால்நடை பராமரிப்பு துறை,
அறை எண்:- 212, ஆட்சியர் வளாகம்,
அரியலூர் – 621 704