மூடுக

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

பொதுவிநியோகதிட்டம் — ஒருகண்ணோட்டம்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடி மக்களுக்கும் குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, மாதந்தோறும் இன்றியமையாப் பொருட்களை நல்ல தரத்தோடும், நியாயமான விலையிலும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே நியாய விலைக் கடைகள் வாயிலாக விநியோகம் செய்வதே பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

  1. பொதுவிநியோக திட்டத்தின் நோக்கங்கள் :

    • தமிழ்நாட்டிலிருந்து , பசி,பட்டினியை அறவே ஒழித்தல்
    • இன்றியமையாப் பொருட்களின் விலை ஏற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குடி மக்களை காத்தல்.
    • பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை செறிவூட்டி வழங்குவதன் மூலம் சத்து குறைபாட்டை குறைத்தல்.
    • வீட்டு உபயோக எரிபொருள்களான மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு உருளை ஆகியவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குதல்.
    • குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் அணுகும் வகையில் நியாய விலைக்கடைகள் அமைத்தலை உறுதிசெய்தல்.
    • ஏழை எளிய மக்கள் வாங்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குதல்
    • மாதந்தோறும் சரியான நேரத்தில் இன்றியமையாப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.
  2. பொதுவிநியோக திட்டம் சிறப்பாக செயல்பட வகுக்கப்பட்டுள்ள செயல்திட்டங்கள்:

    • குடும்ப அட்டைதாரர்களின் புகார்களை திறம்பட கையாளுதல்.
    • தற்போது செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு செல்ல இயலாமல் இன்னலுறும் கிராமங்களுக்கு புதிய பகுதி நேரக் கடை அமைக்கும் திட்டம்.
    • நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்கல், உரிய நேரத்தில் இன்றியமையாப் பொருட்களை நகர்வு செய்தல்.
    • நடைமுறையை மேம்படுத்துதல், அமலாக்கத்தை மேலும் கடுமையாக்குதல் மற்றும் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம், கடத்தலை குறைத்தல்.
    • நியாய விலை அங்காடிகளுக்கு மின் ஆளுமை மூலம் தவறு இல்லாத சரியான ஒதுக்கீடு மற்றும் நுகர்வினை அளித்தல்.
  3. பொது விநியோக திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்

    1. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை : மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையின் கீழ் நான்கு வட்ட வழங்கல்  அலுவலகங்கள் உள்ளன.
    2. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் :அதன் மண்டல இயக்குநர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் கொள்முதல், நகர்வு மற்றும் விநியோகம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
    3. கூட்டுறவு துறை :அனைத்து மாவட்டங்களிலு அந்தந்த  கூட்டுறவு இணைப்பதிவாளர் நியாய விலைக்கடைகளை கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
  4. உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அமைப்பு விளக்கப்படம்

    உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மாவட்ட  அளவில் கீழ்காணும் அமைப்புகளை கொண்டுள்ளது. மாவட்டத்தின்  தலைமை அலுவலகம், மாவட்ட ஆட்சியரக கட்டிடத்தில் உள்ளது.  வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில்  4 வட்ட வழங்கல் அலுவலகங்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் உள்ளது. மாவட்ட அளவில் செயல்படும் அமைப்பு வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    ADMIN STRUCTURE

  5. உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள்

    பொது விநியோக திட்ட பிரிவு கீழ்காணும் பணிகளை கையாளுகிறது.

    (அ) குடும்ப அட்டை விநியோகம் மற்றும் நிர்வாகம்

    (ஆ) நியாய விலைக்கடைகள் ஏற்படுத்துதல் மற்றும் பிரித்தல்

    (இ) நியாய விலைக்கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடு

    (ஈ) இலவச எரிவாயு இணைப்பு திட்டம் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல்

    (உ) நியாய விலைக்கடைகள் கண்காணித்தல் மற்றும் மேற்பார்வையிடுதல்

    (ஊ) மண்ணெண்ணெய் மொத்த வணிகர்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் கண்காணித்தல்

    (எ) அத்தியாவசியப் பொருட்களின் கடத்தலை தடுக்க செயலாண்மை

    (ஏ) பொது விநியோக திட்ட மின் ஆளுமை

    (ஐ) 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாட்டு ஆணைகளை நடைமுறைப்படுத்துதல்

    ஒ)2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

    (ஓ) மத்திய, மாநில அரசுகக்கு நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைக்கான விபரங்களை அளித்தல்.

  6. வட்ட வழங்கல் அலுவலரின் கடமைகள்

    • அலுவலகத்திற்கு நேரில் வருகைதரும் , தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாகவும், பொறுமையாகவும் பதில் அளித்தல்.
    • மக்களிடமிருந்து பெறப்படும் குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுதல், கிடங்குகள் மற்றும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் நகர்வு, தரம் மற்றும் இருப்பினை கண்காணித்தல்.
    • அத்தியாவசிய பொருட்கள் ஒதுக்கீடு வழங்குதல்
    • மக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து விதமான புகார் மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
    • அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தினை செயல்படுத்துதல்
    • பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
  7. புதிய மின்னணு குடும்பஅட்டை வழங்குதல்

    தேவையான ஆவணங்கள் : 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப  உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் , குடும்ப தலைவர் புகைப்படம் மற்றும் குடியிருப்பிற்கான ஆவணங்களுடன் அரசு இ-சேவை மையத்திலோ அல்லது பொது இணையதளம் www.tnpds.gov.in வாயிலாகவோ புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

  8. மின்னணு குடும்பஅட்டை தொடர்பான சேவைகள்

    பெயர் சேர்த்தல் , குடும்ப  தலைவர்  மாற்றம் , முகவரி மாற்றம் , பெயர் நீக்கம்,  மற்றும் குடும்ப அட்டை  ஒப்படைத்தல்  போன்ற கோரிக்கைகள் அரசு இ சேவை மையத்திலோ அல்லது பொது இணையதளம் www.tnpds.gov.in வாயிலாகவோ புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

  9. பொது விநியோக திட்டத்தின் குறையுற்றோர் குறை தீர்த்தல் செயல்முறை

    தமிழ்நாடு அரசு, நுகர்வோர் குறைகளை தீர்க்க மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது. குடியிருப்பாளர்கள், குறைகளை இணையத்தளம் அல்லது மின்னஞ்சல் முறை மூலம் தீர்க்கலாம். மாநில அளவில், பொது விநியோகத் திட்டத்தின் கட்டணமில்லா உதவித் தொலைபேசி எண்: 1967 மற்றும் 1800-425-5901. தமிழ்நாட்டில் குடியிருப்பவர்கள், இந்த எண்கள் மூலம் ஏதேனும் சந்தேகங்கள்-புகார்கள்-ஆலோசனைகளை பெறலாம். மேலும் www.tnpds.gov.in என்ற பொது இணையதளம் மூலம் புகார்களை பதிவு செய்யலாம். இதனால், குறையுற்றோர் குறை தீர்த்தல் செயல்முறை ஒருங்கிணைக்கப்பட்டு மாநிலங்களில் ஒரு ஒற்றைச் சாளர முறையாக அமைந்துள்ளது. இதன் மூலம் புகார்கள் மற்றும் குறைகள் எளிதாக பதிவு செய்ய முடியும்.

  10. குறுஞ்செய்தி சேவை

    நியாய விலைக் கடையில் உள்ள இருப்பினை அறிய, உங்கள் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள / பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசியிலிருந்து PDS< SPACE> 101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும்

    நியாய விலைக் கடை திறந்திருக்கும் விவரம் அறிய, உங்கள் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள / பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசியிலிருந்து PDS< SPACE> 102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும்

    தங்களது குடும்ப அட்டையில் பொருள்கள் வாங்காமலே, பொருள்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்பட்டால் PDS<SPACE>107 என பதிவு செய்து 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

  11. குடும்ப அட்டை சம்பந்தமான மனுக்கள் தீர்வு செய்ய கால அவகாசம்

    சேவை காலவறை (தேவையான ஆதாரம் அளிக்கப்படும் பட்சத்தில்)  விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டடியது
    புதிய குடும்ப அட்டை வழங்குதல் 15 நாட்கள் அரசு இ சேவை  மையத்திலோ அல்லது பொது இணையதளம்
    www.tnpds.gov.in
    குடும்பஉறுப்பினர்களின்பெயர்களைச்சேர்த்தல், நீக்குதல் / வயதுதிருத்தம் 3 நாட்கள் அரசு இ சேவை  மையத்திலோ அல்லது பொது இணையதளம்
    www.tnpds.gov.in
    முகவரி மாற்றம் ( அதே நியாயவிலைக் கடையின் அதிகார வரம்பிற்குள்) 3 நாட்கள் அரசு இ சேவை  மையத்திலோ அல்லது பொது இணையதளம்
    www.tnpds.gov.in
    முகவரி மாற்றம்  (கடை மாற்றத்துடன்) 3 நாட்கள் அரசு இ சேவை  மையத்திலோ அல்லது பொது இணையதளம்
    www.tnpds.gov.in
    மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது தாலுகா / மண்டலத்திற்கு பெறப்பட்ட ஒப்புவிப்பு சான்று பேரில் முகவரி மாற்றம் 3 நாட்கள் அரசு இ சேவை  மையத்திலோ அல்லது பொது இணையதளம்
    www.tnpds.gov.in
    நகல் அட்டை 3 நாட்கள் அரசு இ சேவை  மையத்திலோ அல்லது பொது இணையதளம்
    www.tnpds.gov.in
    நியாய விலைக்கடை தொடர்பான புகார்கள் 24X7 மாவட்ட ஆட்சித் தலைவர் ,மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள்
    தகவல் பெறும் உரிமை  சட்டம்-2005-ன்படி பொது விநியோகத்திட்டம் தொடர்பான தகவல்கள் பெறுவதற்கு 30 நாட்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்
  12. தொடர்பு  விபரங்கள்

    வ.எண் அலுவலர்விபரம் அலுவலக முகவரி தொலைபேசிஎண்
    1. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அறைஎண்.10
    தரைதளம், மாவட்ட ஆட்சியகரம், அரியலூர்
    9445796402
    அலுவலகம்
    அறைஎண்.21தரைதளம், மாவட்ட ஆட்சியகரம், அரியலூர்
    2. வட்ட வழங்கல் அலுவலர், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம்,  அரியலூர் 9445000274
    3. வட்ட வழங்கல் அலுவலர், உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,  உடையார்பாளையம் 9445000275
    4 வட்ட வழங்கல் அலுவலர், செந்துறை வட்டாட்சியர் அலுவலகம், செந்துறை 9445000276
    5 வட்ட வழங்கல் அலுவலர், ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிமடம் 9499937027
  13. அட்டை வகை

    வ. எண் அட்டைவகை உரிமம்பெற்றபொருட்கள்
    1 முன்னுரிமை குடும்ப அட்டை அனைத்து பொருட்களும்
    2 முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும்
    3 முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (அரிசி அட்டை) அனைத்து பொருட்களும்
    4 முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (சர்க்கரை அட்டை) அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும்
    5 பொருட்களில்லா அட்டை பொருட்கள் இல்லை
  14. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களின் விநியோக விலை மற்றும் வழங்கல் அளவு விவரம் பின்வருமாறு :

    வ. எண் பொருள்கள் விற்பனைவிலை (கிலோ / லிட்டர்ஒன்றுக்கு) விநியோகஅளவு
    1 அரிசி 01.06.2011 முதல் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா 35 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

    பெரியவர் ஒன்றுக்கு  4 கிலோ கிராம் , சிறியவர் ஒன்றுக்கு 2 கிலோ கிராம் (12 வயதிற்குள்) . ஒரு குடும்ப அட்டைக்கு குறைந்தபட்சம் 12 கிலோகிராம் மற்றும் அதிகபட்சம் 20 கிலோகிராம் வழங்கப்படும்.

    4 நபர்கள் மற்றும் அதற்கு மேல் கூடுதலாக உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5கிலோ வீதம் அதிகப்படுத்தி வழங்கப்படுகிறது..

    2 சர்க்கரை அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் கிலோ ரூ.13.50/இதர சர்க்கரை பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.25.00/ அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 0.500 கிராம் வீதம் அதிகபட்சமாக 2 கிலோவும், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக கூடுதலாக 3 கிலோ சர்க்கரையும் வழங்கப்படுகிறது.
    3 கோதுமை 01.02.2017 முதல் விலையில்லாமல் வழங்கப்படுகிறது மாவட்டத் தலைமையகம் மற்றும் சென்னை நகரத்தில் உள்ள அட்டைகளுக்கு அட்டை ஒன்றுக்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோகிராம். மற்றும் மற்ற பகுதியில் உள்ள அட்டைகளுக்கு அட்டை ஒன்றுக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோகிராம் (பொருட்கள் இருப்பில் இருக்கும் தன்மை பொறுத்து வழங்கப்படும்)
    4 மண்ணெண்ணை லிட்டர் ஒன்றுக்கு 13.60 முதல் 14.20 ரூபாய் இருப்பிடம் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு அட்டைக்கு 3 முதல் 15 லிட்டர்  வீதம் வழங்கப்படுகிறது.

    மாவட்ட தலைமையிடம்- 10 லிட்டர் (எல்பிஜி சிலிண்டர் வைத்திருக்க கூடாது)

    நகராட்சி-6 லிட்டர் (எல்பிஜி சிலிண்டர் வைத்திருக்க கூடாது)

    பேரூராட்சி-5 லிட்டர் (எல்பிஜி சிலிண்டர் வைத்திருக்க கூடாது)

    கிராம ஊராட்சி – 3 லிட்டர்(எல்பிஜி சிலிண்டர் வைத்திருக்க கூடாது)

    எந்த பகுதிகளிலும்- 3 லிட்டர் (ஒரு  எல்பிஜி சிலிண்டர் )

    5 துவரம் பருப்பு ஒரு கிலோ ஒன்றுக்கு ரூ.30./- வீதம் குடும்ப அட்டை ஒன்றுக்கு துவரம் பருப்பு தலா ஒரு கிலோ வீதம் வழங்கப்படுகிறது.
    6 பாமாயில் ஒரு கிலோ ஒன்றுக்கு ரூ.25./- வீதம் குடும்ப அட்டை ஒன்றுக்கு பாமாயில் தலா ஒரு கிலோ வீதம் வழங்கப்படுகிறது.