மூடுக

மகளிர் சுய உதவிக்குழு அமைத்தல்

தேதி : 01/01/2020 -

திட்டத்தின் விவரம்

இதுவரை சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படாத மக்களிடையே குழுக்கள் அமைப்பதும், சுய உதவிக்குழுவில் இதுவரை இணைக்கப்படாத மகளிரை குழுக்களின் இணைப்பதும் குறிப்பாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கைகள், நலிவுற்றோர் மற்றும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரை சிறப்புக் கவனம் செலுத்தி சுய உதவிக்குழுக்களின் சேர்ப்பது நோக்கமாகும். ஒத்த கருத்துடைய ஏழை மகளிர் தாமாகவே முன் வந்து தங்கள் வளர்ச்சிக்காக ஒன்று சேர்ந்து சேமிப்பினை பெருக்கிடவும், குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு குறிப்பிட்ட தொகையினை வாரம் அல்லது மாதந்தோறும் சேமித்து தங்களுக்குள்ளேயே சிறுகடன் கொடுத்து உதவிக்கொள்ளும் ஒரு சிறு குழு அமைப்பதே சுய உதவிக்குழுவாகும்.

திட்டத்தில் சேர தகுதி

குழு உறுப்பினர்கள் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இக்குழுவில் 12 லிருந்து 20 மகளிர் உறுப்பினர்களாக இருக்கலாம்.

விண்ணப்ப முறை

அந்தந்த ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகளை அணுகி புதிய மகளிர் சுய உதவிக்குழு அமைக்கலாம்.

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் தொடர்புக்கு :

திட்ட இயக்குர்,
அறை எண் 215, இரண்டாவது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
அரியலுர்
தொலைபேசி எண் -04329 228505