மூடுக

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம்

தேதி : 01/01/2020 -

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்னும் மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டத்தினை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஊரக மற்றும் நகா் பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவங்களை உருவாக்கி வேலைவாய்ப்பினை ஏற்படுத்த அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம், கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) மூலம் இத்திட்டத்தினை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது. மற்றும் மாநில அளவில் கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணைய இயக்குநரகம், மாநில கதா் மற்றும் கிராம தொழில் வாரியம் (KVIB) மற்றும் மாவட்ட தொழில் மையம் (DIC) மூலமாகவும் இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

திட்டத்தின் நோக்கம்

கிராம மற்றும் நகா்ப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்க முறையே ரூ.25 இலட்சம், ரூ.10 இலட்சம் வரை வங்கிக் கடன் பெற்று தொழில் துவங்க வழிவகை செய்தல்.

தகுதிகள்

  • குறைந்தபட்சம் வயது வரம்பு 18 ஆகும்.
  • ரூ.10 இலட்சத்திற்கு மேல் உற்பத்தி தொழில்கள் மற்றும் ரூ.5 இலட்சத்திற்கு மேல் சேவைத் தொழில்கள் துவங்க குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • பொதுப்பிரிவினருக்கான மூலதனப் பங்கு 10 விழுக்காடு. சிறப்புப் பிரிவினருக்கான மூலதனப் பங்கு 5 விழுக்காடு. (பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினா் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்).
  • மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு (நகா்புறங்களுக்கும்), 35 விழுக்காடு (ஊரக பகுதிகளுக்கும்) வழங்கப்படுகிறது.
  • மாவட்ட தோ்வு குழு மூலம் நோ்காணல் செய்யப்பட்டு, மாதம் இருமுறை பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.