மூடுக

நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத்திட்டம்

தேதி : 01/01/2020 -

நோக்கம்
ஆதிதிராவிட மக்களின் நில உடைமையை அதிகரிக்கவும் நில வளத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

தகுதி
விவசாயத்தைத் தொழிலாக கொண்டவராகவும் மற்றும் இதுவரை தாட்கோ மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது.

தேவையான ஆவணங்கள்
சாதிச்சான்று,வருமானச்சான்று(ஒரு இலட்சத்திற்குள்),பிறப்பிடச்சான்று,
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நிலத்தின் பட்டா / சிட்டா, அடங்கல் / புலப்படம், அ-பதிவேடு, வில்லங்கசான்று, புவியியல் வல்லுநரின் சான்று, விலைப்புள்ளி (GSTIN. எண்), திட்ட அறிக்கை, மற்றும் புகைப்படம்

பயனாளி:

-

பயன்கள்:

இத்திட்டத்தின் கீழ் 2017-18ஆம் ஆண்டு முதல் டிசம்பர் – 2019ஆம் ஆண்டு வரை 3 பயனாளிகளுக்கு 4.14 இலட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது,

விண்ணப்பிப்பது எப்படி?

திட்டங்களுக்கு http://application.tahdco.com/ என்ற தாட்கோ இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

இதர விபரங்களுக்கு, தொடர்புக்கு
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்

தொலைபேசி எண் : 04329 -228315