“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 17.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக உடையார்பாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 25KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 16.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16.04.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 93KB)
மேலும் பலஅண்ணல் அம்பேத்கர் 135-ஆவது பிறந்த நாள் – சமத்துவ நாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் 135-ஆவது பிறந்த நாள் – சமத்துவ நாள் விழாவினை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 962 பயனாளிகளுக்கு ரூ.13.44 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 24KB)
மேலும் பலபெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 34KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025அரியலூர் மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு 203 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 34KB)
மேலும் பலசமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (11.04.2025) அன்று நடைபெற்றது.(PDF 20KB)
மேலும் பலநீர்வளத்துறையின் சார்பில் பாசன ஆதாரங்கள் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025நீர்வளத்துறையின் சார்பில் பாசன ஆதாரங்கள் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் 22 பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 32KB)
மேலும் பலதமிழில் பெயர் பலகை முதன்மையாக வைப்பது தொடர்பான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் முதன்மையாக வைப்பது தொடர்பான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (09.04.2025) அன்று நடைபெற்றது.(PDF 18KB)
மேலும் பலஅனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025அரியலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 09.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025அரியலூர் வட்டம், 09.04.2025 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 25KB)
மேலும் பல