தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026
போதைப் பொருள் இல்லா இந்தியா பிரச்சாரம் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026அரியலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் இல்லா இந்தியா பிரச்சாரம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 25KB)
சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு தேர்தல் டைனோ இலச்சீனை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் அறிமுகப்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். (PDF 173KB)
சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.(PDF 177KB)
வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல்
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு 149 – அரியலூர் மற்றும் 150 – ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.PDF(134KB)
தேர்தல் பொதுப் பார்வையாளர் – கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் 2026 – அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினப்பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் இன்று (20.03.2026) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.PDF(266KB)
சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற் கட்ட தற்செயல் தெரிவு
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு 149 அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.(PDF 144KB)
மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026அரியலூர் மாவட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டார். (PDF 106KB)
100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிட்டு, 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். (PDF 153KB)
149- அரியலூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை 149- அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.(PDF 107KB)
தேர்தல் பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 132KB)