ஊடக வெளியீடுகள்
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 20.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 27KB)
”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 19.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19.02.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 90KB)
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025அரியலூர் மாவட்டத்தில் ரூ.17.72 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, ரூ.16.50 இலட்சம் மதிப்பிலான முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 53KB)
“நக்சா” திட்ட தொடக்க விழா – நில அளவைத் துறை
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025அரியலூர் மாவட்டத்தில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டார்.(PDF 20KB)
சிறுதானிய விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025சிறுதானிய விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, உணவுப் பொருள் கண்காட்சியினை பார்வையிட்டார்.(PDF 20KB)
போதைப்பொருள் விழிப்புணர்வு மொபைல் செயலி கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயலி செயலாக்கம் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 44 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.02.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 218 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பாக நடைபெற்ற பிரமாண்டமான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, 218 பேருக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்கினார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.(PDF 158 KB)
மாவட்ட ஆட்சியர், 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் – 15.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் – 15.02.2025. (PDF 43 KB)
உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025அரியலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.(PDF 23KB)