மூடுக

மாவட்ட ஆட்சியரகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதி செய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் , மற்றும் துணை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவலர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர். நகராட்சிகளின் கமிஷனர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.

Thiru.P.Rathinasamy, IAS.,
திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் – இது நாள் வரை

வரிசை எண் பெயர் பணிக்காலம்
1.Rakesh KumarYadav திரு. ராகேஷ் குமார் யாதவ் இ.ஆ.ப 01.01.2001 – 19.04.2002
அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு 19.11.2007 அன்று மீண்டும் அமைக்கப்பட்டது.
2. Thiru. V.M. Xavier Chrisso Nayagam I.A.S. திரு. V.M. சேவியர் கிறிசோ நாயகம் இ.ஆ.ப 23.11.2007 – 05.03.2008
3. Thiru. R. Sudalai Kannan I.A.S. திரு. R. சுடலைக்கண்ணன் இ.ஆ.ப 09.03.2008 – 23.02.2009
4. Thiru. Anil Mesharam I.A.S. திரு. அனில் மேஷ்ராம் இ.ஆ.ப 24.02.2009 – 18.08.2009
5. T.Abiraham IAS திரு. T. ஆப்ரஹாம் இ.ஆ.ப 24.08.2009 – 29.09.2010
6. T.K.Ponnusamy IAS திரு. T.K. பொன்னுசாமி இ.ஆ.ப 30.09.2010 – 03.06.2011
7. Tmt. Anu George I.A.S. திருமதி. அனு ஜார்ஜ் இ.ஆ.ப 08.06.2011 – 10.09.2012
8. Thiru. P. Senthilkumar I.A.S. திரு. P. செந்தில்குமார் இ.ஆ.ப 12.09.2012 – 09.03.2013
9. Thiru. M. Ravikumar I.A.S. திரு. M. ரவிக்குமார் இ.ஆ.ப 11.03.2013 – 07.08.2013
10. Thiru. E. Saravanavelraj I.A.S. திரு. E. சரவணவேல்ராஜ் இ.ஆ.ப 08.08.2013 – 05.05.2017
11.Tmt.G Laxmi Priya, I.A.S., திருமதி.க.லட்சுமி பிரியா,இ.ஆ.ப., 12.07.2017 – 21.02.2018
12. Image of District Collector திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப.,
சுருக்கக்குறிப்பு | புகைப்படத்தொகுப்பு
26.02.2018 – 30.06.2019
13. T.G.Vinay IAS டாக்டர். டி.ஜி. வினய், இ.ஆ.ப.,
சுருக்கக்குறிப்பு | புகைப்படத்தொகுப்பு
01.07.2019 – 12.10.2019
14. திருமதி-த-ரத்னா-இ-ஆ-ப திருமதி. த. ரத்னா, இ.ஆ.ப.,
சுருக்கக்குறிப்பு | புகைப்படத்தொகுப்பு
13.10.2019 – 15.06.2021
15. திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப.,
சுருக்கக்குறிப்பு | புகைப்படத்தொகுப்பு
16.06.2021 – 21.05.2023
16. திருமதி. ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப., திருமதி. ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப.,
சுருக்கக்குறிப்பு | புகைப்படத்தொகுப்பு
22.05.2023 – 18.07.2024
17. Thiru.P.Rathinasamy, IAS., திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப.,
செய்தி வெளியீடு | புகைப்படத்தொகுப்பு
பொறுப்பு ஏற்ற நாள் 19.07.2024

வருவாய்

  1. பிரிவு அ – பணியாளர் தொகுதி, அலுவலக நடைமுறைகள், வருவாய் தீர்வாயம், தபால் அனுப்புதல்.
  2. பிரிவு ஆ – நிலம் – பட்டா மாறுதல், நில மாற்றம், குத்தகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் நில ஒப்படை.
  3. பிரிவு இ – சட்டம் ஒழுங்கு, நீதியியல் – வழக்குகள்
  4. பிரிவு ஈ – நிலம் கையகப்படுத்தல், பதிவறை பாதுகாப்பு, இரயில்வே நிலங்கள் மற்றும் பொது தேர்தல்.
  5. பிரிவு உ – மாவட்ட அரசிதழ், அரசுத் தேர்வுகள், தணிக்கை தடைகள்,தகவல் அறியும் உரிமைச் சட்டம், கட்டடங்கள், நில வரி மற்றும் வீடு கட்டும் முன்பணம்.
  6. பிரிவு ஊ – வரவு செலவு, ஒத்திசைவு, ஊதியம், ஊதிய நிர்ணயம், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள், மனு நீதி நாள்,முக்கிய நபர்கள் வருகை குறித்த ஏற்பாடுகள் மற்றும் வருவாய் வசூலிப்பு சட்டம்.
  7. பிரிவு எ – சமூக பாதுகாப்பு திட்டங்கள், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம்.
  8. பிரிவு ஏ – நில சீர்திருத்த சட்டங்கள், பூமிதான நிலங்கள் மற்றும் இயற்கை இடர்பாடுகள்.
  9. பிரிவு பா – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை.
  10. பிரிவு எஸ் – குடிமை பொருட்கள் மற்றும் பொது வினியோக திட்டம்.
  11. பிரிவு ம – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.
  12. நில அளவை பிரிவு – நில அளவை.

ஊரக வளர்ச்சி

  1. திட்ட இயக்குனர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
  2. நேர்முக உதவியாளர்(சத்துணவு) : பள்ளி சத்துணவு திட்டம்
  3. உதவி இயக்குனர்(தணிக்கை) : தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு
  4. உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) : கிராம பஞ்சாயத்துகள்