மூடுக

மாவட்ட நூலகம்

இந்தியாவின் நூலகத்தின் தந்தை

இந்தியாவின் நூலகத்தந்தை

முனைவர்.சீர்காழி இராமாமிர்த அரங்கநாதன்

09.08.1892 – 27.09.1972

நூலகத்தின் ஐந்து விதிகள்
 1. நூல்கள் பயன்படுவதற்கே.
 2. ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு நூல்.
 3. ஒவ்வொரு நூலுக்கும் ஒரு வாசகர்.
 4. காலம் கருதுக.
 5. நூலகம் வளரும் தன்மை உடையது.

முனைவர்.சீர்காழி இராமாமிர்த அரங்கநாதன்

மாவட்ட மைய நூலகம், அரியலூர்
 • இன்று வரை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை :          16139
 • மாவட்ட மைய நூலகத்திலுள்ள மொத்த நூல்கள் :          117238
அரியலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் நூலகங்கள் (22.08.2022 வரை)
 1. மாவட்ட மைய நூலகம் : 1
 2. கிளை நூலகங்கள் : 21
 3. ஊர்ப்புற நூலகங்கள் : 19
 4. பகுதி நேர நூலகங்கள் : 24

மொத்தம் : 65

நோக்கம்
 1. குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துதல்.
 2. அனைத்து தரப்பினருக்கும் சுயகல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல்.
 3. தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
 4. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல்.
 5. பாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கலைகள், அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.
 6. நடத்து கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல்.
 7. அனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுத்தல்.
 குறிக்கோள்கள்
 1. நிறைந்த நூலகப்பணியின் மூலம் அனைத்து தரப்பினரின் தகவல் தேவையினைப் பூர்த்தி செய்தல்.
 2. பழைய மற்றும் அரிய நூல்களை மின்மயமாக்கி, பாதுகாத்தல்.
 3. 1000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள இடங்களில் நூலகங்களை அமைத்து செயல்படுத்துதல்.
 4. நூலகங்களில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கச் செய்தல்.
 5. நூலகங்களில் தரமான நாளிதழ்கள் பருவஇதழ்கள் மற்றும் நூல்களை வாங்கி வழங்குதல்.
 6. நூலகங்களில் நவீன தொழில் நுட்பத்தினை புகுத்தி நூலகச் சேவையினை மேம்படுத்துதல்.
புதிய முனைப்புகள்
 1. போட்டித்தேர்வு மையம்போட்டித் தேர்வு மையம்

  போட்டித்தேர்வு மையம்போட்டித் தேர்வு மையம், அரியலூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. சுமார் 100 மாணவர்கள் தினமும் போட்டித் தேர்விற்காக பயின்று வருகின்றனர்.  அவர்களுக்கு இலவசமாக பயிற்சி மற்றும் குறிப்புதவி நூல்கள் போட்டித் தேர்விற்கு தயாராகும் வகையில் அளிக்கப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வு மையத்தில் பயின்ற சுமார் 50 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.

 2. போட்டித்தேர்வுக்கு தயாராகும் வாசகர்களுக்கான பருவஇதழ்கள்

  போட்டித்தேர்விற்குத் தயாராகும் அனைத்து பகுதி வாசகர்களுக்கும் ஒரே மாதிரியான முன்னனி ஆங்கில பருவ இதழ்கள் கிடைக்கும் நோக்கத்தோடு மாவட்ட மைய நூலகத்திற்கு 61 பருவ இதழ்களும், 4 முழு நேர கிளை நூலகங்களுக்கு 34 பருவ இதழ்களும் மற்றும் 21 கிளை நூலகங்களுக்கு 19 பருவ இதழ்களும் வாங்கப்பட்டுள்ளன.

 3. அச்சு மற்றும் இணைய வழி நூல்கள் பருவ இதழ்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்.
மாவட்ட நூலக ஆணைக்குழுவின் செயல்பாடுகள்
நூலகக் கட்டமைப்பு
சொந்தக் கட்டடம்:

மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் 65 நூலகங்களில் மாவட்ட மைய நூலகம் – 1, வட்டார நூலகம் – 2, முழு நேர நூலகம் – 1, கிளை நூலகம் – 5, ஊர்ப்புற நூலகம் – 2, பகுதி நேர நூலகம் – 1 ஆக 12 நூலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்குகிறது.

வாடகைக் கட்டடம்:

வட்டார நூலகம் – 1, கிளை நூலகம் – 3 ஆக 4 நூலகங்கள் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இலவசக் கட்டடம்:

கிளை நூலகம் – 9, ஊர்ப்புற நூலகம் – 14, பகுதி நேர நூலகம் – 23 ஆக 49 நூலகங்கள் இலவசக் கட்டடத்தில் இயங்குகிறது.

கணினிமயமாக்கம்:

மாவட்ட மைய நூலகம் இராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையின் இணைமானிய நிதியுதவியின் அடிப்படையில் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட வசதிகளுடன் மாவட்ட மைய நூலகம் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.  மாவட்ட மைய நூலகம் இணையதள இணைப்பு வாயிலாக இணைக்கப்பட்டு இந்நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றியத் தகவல்களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.

வாசகர் வட்டம்:

நூலகச் செயல்பாடுகளில் பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் இருக்கும் வகையில் அனைத்து நூலகங்களிலும் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், நூலக உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களைக் கொண்டும் வாசகர் வட்டம் செயல்பட்டு வருகிறது.

 1. வாசகர் வட்டத் தலைவர்
 2. வாசகர் வட்டச் செயலாளர்
 3. வாசகர் வட்ட உறுப்பினர்கள்
நிர்வாகக் கட்டமைப்பு

நிர்வாகக் கட்டமைப்பு

மாவட்ட மைய நூலகத்தின் கீழ் செயல்படும் நூலகங்களின் பணிநேரங்கள்
நூலகம் பணி நேரங்கள்
மாவட்ட மைய நூலகம் காலை 8.00மணி முதல் இரவு 8.00 வரை

விடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

முழு நேர நூலகங்கள் காலை 8.00மணி முதல் இரவு 8.00 வரை

விடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

பேரூராட்சி கிளை நூலகங்கள் காலை 9.00மணி முதல் 12.30 மணி வரை

மாலை 4.00மணி முதல் 7.00 மணி வரை

விடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

கிளை நூலகங்கள் காலை 9.00மணி முதல் 12.30 மணி வரை

மாலை 03.00மணி முதல் 06.00 மணி வரை

விடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

ஊர்ப்புற நூலகங்கள் காலை 9.00மணி முதல் 12.00 மணி வரை

மாலை 04.00மணி முதல் 06.30 மணி வரை

விடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

பகுதி நேர நூலகங்கள் காலை 8.00மணி முதல் 11.00 மணி வரை

விடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கான நிபந்தனைகள்
 1. உறுப்பினராக சேர்வதற்கு ஆதார் அட்டை / குடும்ப அட்டை நகல்.
 2. ஏற்கனவே நூலகத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அறிமுகம்.
 3. ஒரு புத்தகத்திற்கு காப்புத் தொகை ரூ.20/- ம் ஆண்டு சந்தா ரூ.10/- ம் செலுத்த வேண்டும்.
 4. இரண்டு புத்தகத்திற்கு காப்புத்தொகை ரூ.40/- ம் ஆண்டு சந்தா ரூ.10/- ம் செலுத்த வேண்டும்.
 5. மூன்று புத்தகத்திற்கு காப்புத்தொகை ரூ.50/- ம் ஆண்டு சந்தா ரூ.10/- ம் செலுத்த வேண்டும்.
 6. ஐந்து புத்தகத்திற்கு காப்புத்தொகை ரூ.100/- ம் ஆண்டு சந்தா ரூ.10/- ம் செலுத்த வேண்டும்.
 7. நீங்கள் எடுத்து செல்லும் நூல்கள் தவணை நாள் 14 நாட்களுக்குள் நூலகத்தில் திரும்ப வழங்க வேண்டும்.
கிளை நூலகம் /ஊர்ப்புற நூலகம்/பகுதி நேர நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு நிபந்தனைகள்
 1. உறுப்பினராக சேர்வதற்கு ஆதார் அட்டை / குடும்ப அட்டை நகல்.
 2. ஏற்கனவே நூலகத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அறிமுகம்.
 3. ஒரு புத்தகத்திற்கு காப்புத் தொகை ரூ.15/- ம் ஆண்டு சந்தா ரூ.5/- ம் செலுத்த வேண்டும்.
 4. இரண்டு புத்தகத்திற்கு காப்புத்தொகை ரூ.25/- ம் ஆண்டு சந்தா ரூ.5/- ம் செலுத்த வேண்டும்.
 5. மூன்று புத்தகத்திற்கு காப்புத்தொகை ரூ.30/- ம் ஆண்டு சந்தா ரூ.5/- ம் செலுத்த வேண்டும்.
 6. நீங்கள் எடுத்து செல்லும் நூல்கள் தவணை நாள் 14 நாட்களுக்குள் நூலகத்தில் திரும்ப வழங்க வேண்டும்.
மாவட்ட நூலக ஆணைக்குழுவில் கீழ் பகுதி நேர நூலகம் திறப்பதற்கான
விதிமுறைகள்
 1. புரவலர் தொகை ரூ.1000/- வீதம் 2 புரவலர்கள் சேர்க்கப்பட வேண்டும்.
 2. உறுப்பினர் தொகை ரூ.20/- வீதம்  200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும்.
 3. நூலகம் செயல்படுவதற்கு ஏதுவாக வாடகை இல்லாத இலவசக் கட்டடம் வழங்கப்பட வேண்டும்.
 4. நூலகம் திறக்கப்படும் பொழுது ரூ.2000/- மதிப்புள்ள தளவாட சாமான்கள் இலவசமாக வழங்க வேண்டும்.
 5. பிற்காலத்தில் நூலக கட்டடம் கட்டுவதற்கு ஏதுவாக 5 செண்ட் இலவச காலிமனை வழங்கப்பட வேண்டும்.
நூலகங்களை தரம் உயர்த்துதல்
 • பகுதி நேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாக தரம் உயர்த்தல்

  பகுதி நேர நூலகங்கள் அந்நூலகத்திற்கு வருகை புரியும் வாசகர் வருகை உறுப்பினர் சேர்க்கை புரவலர் சேர்க்கை மற்றும் நூல் இரவல் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக பயன்பாடுடைய பகுதி நேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாகக தரம் உயர்த்தப்படும்.

 • ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தல்

  ஊர்ப்புற நூலகங்கள் அந்நூலகத்திற்கு வருகை புரியும் வாசகர் வருகை உறுப்பினர் சேர்க்கை புரவலர் சேர்க்கை மற்றும் நூல் இரவல் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக பயன்பாடுடைய ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்படும்.

 • கிளை நூலகம் முழு நேர நூலகங்களாக தரம் உயர்த்தல்

  கிளை நூலகங்கள் அந்நூலகத்திற்கு வருகை புரியும் வாசகர் வருகை உறுப்பினர் சேர்க்கை புரவலர் சேர்க்கை மற்றும் நூல் இரவல் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக பயன்பாடுடைய கிளை நூலகங்கள் வாசகர்கள் நலம் கருதி முழு நேர நூலகங்களாக தரம் உயர்த்தப்படும்.

அரிய நூலகங்கள்
 1. சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர்
 2. உ.வே.சாமிநாதய்யர் நூலகம், சென்னை
 3. மறைமலையடிகள் நூலகம், சென்னை
 4. அடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்
 5. அரசு கீழ்திசை நூலகம், சென்னை
 6. ரோஜா முத்தையா நூலகம், சென்னை
 7. ஞானாலயா நூலகம், புதுக்கோட்டை
 8. மகாகவி பாரதி நினைவு நூலகம், ஈரோடு
 9. சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம், கும்பகோணம்
 10. தமிழ் நூல் காப்பகம், விருத்தாச்சலம்
அலுவலக முகவரி மற்றும் தொடர்புகள்

மாவட்ட நூலக ஆணைக்குழு,
மாவட்ட நூலக அலுவலகம்,
மார்க்கெட் தெரு,
அரியலூர் – 621 704

தொலைபேசி எண்: 04329-220441
மின்னஞ்சல்: dclari@nic[dot]in