மூடுக

புவியியல் மற்றும் சுரங்கத்துறை

மாவட்டமானது பலகோடி ஆண்டுகளுக்கு முன்பாக கடலால் உள்வாங்கப்பட்டு அதன் பொருட்டு பல சுண்ணாம்பு படிவங்களால் இன்று பழமையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த படிவங்களே அரியலூர் மாவட்டத்தில் இன்று சுண்ணாம்பு கற்கள்(Limestone) மற்றும் தொல்லுயிர் எச்சங்களாக (Fossils) சில்லக்குடி, கள்ளக்குறிச்சி, ஓட்டக்கோவில், கல்லமேடு மற்றும் நின்னியூர் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் 7 சிமெண்ட் ஆலைகளுக்கு இங்கு கிடைக்கும் சுண்ணாம்பு கற்கள், மார்ல் மற்றும் கன்கர் ஆகிய கனிமங்கள் முக்கிய மூலப்பொருட்கள் ஆகும். மேலும் இம்மாவட்டத்தில் கிடைக்கும் தீக்களிமண் கனிமமானது கனிமக்குழாய்கள் மற்றும் டைல்ஸ் செய்ய மூலப்பொருளாக விளங்குகிறது. உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் தாலுக்காவில் நிலக்கரி , கச்சா எண்ணைய் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளதாக ஆய்வில் தரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் கிராவல், செங்கல் மண், மணற்கற்கள் மற்றும் லேட்டிரைட் ஆகிய சிறுவகை கனிமங்கள் கிடைக்கிறது.

தொடர்பு முகவரி

உதவி இயக்குநர்,
புவியியல் மற்றும் சுரங்கத்துறை,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
அரியலூர்.