மூடுக

முதன்மை கல்வி அலுவலகம்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

      எழுமையும் ஏமாப்பு உடைத்து”   (398)

 “கல்வி தான் வாழ்க்கை, கல்வியில் இருந்துதான் வாழ்க்கை, கல்வி எனும் கனியைப் பறிக்க எந்தவொரு தடையையும் உடைத்து பயணியுங்கள், பயிற்சியும் முயற்சியும் எழுச்சியான வாழ்க்கை வாழ என்றும் துணை நிற்கும்

பொதுதகவல் (2022-23ஆம் கல்வியாண்டு)

 • அரியலூர் வருவாய் மாவட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் ஒருவரும், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மூவரும், வட்டாரக்கல்வி அலுவலர்கள் 12 பேரும், பள்ளித் துணை ஆய்வாளர்கள் மூவரும், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஒருவரும், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஒருவரும், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஒருவரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (நாட்டு நலப்பணித் திட்டம்) ஒருவரும் பணியாற்றி வருகின்றனர்.
 • அரியலூர் வருவாய் மாவட்டத்தில் 378 துவக்கப்பள்ளிகளும், 111 நடுநிலைப் பள்ளிகளும், 62 உயர்நிலைப்பள்ளிகளும், 53 மேல்நிலைப்பள்ளிகளும், 06 அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும், 09 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளும், 15 சுயநிதிப் பள்ளிகளும், 25 மெட்ரிக் பள்ளிகளும், 12 சி.பி.எஸ்.இ பள்ளிகளும் மற்றும் 63 மழலையர் துவக்கப்பள்ளிகளும் உள்ளன.
 • அரசு உயர்நிலைப் பள்ளியில் 62 தலைமையாசிரியர்களும், மேல்நிலைப் பள்ளியில் 53 தலைமையாசிரியர்களும், 398 முதுகலை ஆசிரியர்களும், 03 உடற்கல்வி இயக்குநர் நிலை I ஆசிரியர்களும், 45 கணினி பயிற்றுநர்களும், 968 பட்டதாரி ஆசிரியர்களும், 15 தொழிற்கல்வி ஆசிரியர்களும், 127 சிறப்பாசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இடைநிலையில் 489 தலைமையாசிரியர்களும், 1697 இடைநிலை ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
 • 01 முதல் 05 ஆம் வகுப்பு வரை 30260 மாணாக்கர்களும், 06 முதல் 08ஆம் வகுப்பு வரை 6496 மாணாக்கர்களும் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
 • 06ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 42013 மாணாக்கர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
 • LKG முதல் 05ஆம் வகுப்பு வரை 11086 மாணவ / மாணவிகள் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
 • 25% RTEஇன் படி 974 மாணவ / மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளிக் கல்வித்துறையினால் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள்

வ.எண் திட்டங்கள்
1 1 முதல் 8 வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை 4 செட்
2 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்
3 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள்
4 6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா நில வரைபட நூல்
5 6 மற்றும் 9 ம் வகுப்புகளில் விலையில்லா வடிவ கணிதப் பெட்டி
6 3 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா வண்ணப் பென்சில்கள்
7 1 மற்றும் 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா கிரையான்ஸ்
8 1 முதல் 12 வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா புத்தகப் பை
9 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள்
10 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி
11 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி
12 10, 11 மற்றும் 12 வகுப்பில் இடைநில்லாமல் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை
13 1-12 வகுப்பு வரை விலையில்லா பேருந்து பயண அட்டை
14 1 முதல் 10 வகுப்புகளுக்கு முட்டையுடன்  சத்துணவு
15 1-12 வரையிலான மாணவர்களுக்கு வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி
16 2-12 வரை பயிலும் மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு பயிற்சி
17 மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி சேர்க்கையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு . தனியார் கல்லூரியில் இடம் கிடைக்கும் பட்சத்தில் கட்டணத்தை அரசே ஏற்கிறது.
18 அனைத்து உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
19 ரோபோட்டிக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை கற்று பரிசோதித்து பார்க்க ஏதுவாக அடல் டிங்கரிங் லேப்
20 தனித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில்  தேசிய அளவிலான அங்கீகாரங்களையும் பரிசுகளையும் பெற்று உயர நல்வாய்ப்பு
21 உடல்நலம் பேண வாரம் தோறும் இரும்புச் சத்து மாத்திரைகள்
22 வருடம் இரண்டு முறை உடல் பரிசோதனை
23 கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண்பரிசோதனை செய்து தேவைப்படும் மாணவர்க்கு கண் கண்ணாடிகள் வழங்குதல்
24 வயது வந்த பெண் குழந்தைகளுக்கு விலையில்லா சானிட்டரி பேட் வழங்கல்
25 கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் நடத்துதல்
26 வகுப்பு தோறும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக புத்தகப் பூங்கொத்து திட்டம்
27 குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமை வளர்ச்சி
 • தொடக்கக்கல்வியில் 01 முதல் 03ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும், 04 மற்றும் 05ஆம் வகுப்பு மாணவ / மாணவிகளுக்கு SABL முறை, 06 முதல் 08ஆம் வகுப்பு வரை ALM முறையிலும் கல்வி வளர்ச்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 • மாண்புமிகு தமிழக முதல்வரால் துவங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி (01 முதல் 08ஆம் வகுப்பு) சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 • மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான “நான் முதல்வன்” உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி நெறிமுறைகளோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி மாணாக்கர்களுக்கான  கல்வி உதவித் தொகைகள்

 • ஆதிதிராவிடர் நல மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை
 • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை
 • சிறுபான்மையினர் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை
 • மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை
 • துப்புரவாளரது குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை
 • வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை
 • 9 முதல் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை இவையனைத்தும் மாவட்டத்தில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்ட கல்வித் துறையின் சிறப்பம்சங்கள்

 • கீழப்பழுவூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தேர்ச்சியில் அதிக விழுக்காடு பெற்ற 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டு நீட் பயிற்சியோடு உண்டு உறைவிடப் பள்ளியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 • அரியலூர் மாவட்டம் கருப்பூரில் கஸ்தூரிபாய் காந்தி வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டுதோறும் 10 முதல் 14 வயதுடைய 40 மாணவிகள் சேர்க்கப்பட்டு நன்கு பயின்று வருகின்றனர்.
 • அரியலூர் மாவட்ட ஆட்சியரால் துவங்கப்பட்டு இணையவழி வானொலி நிகழ்ச்சி பள்ளி வேலை நாட்களில் மதியம்00 முதல் 01.30 பி.ப வரை மாணாக்கர்களது படைப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
 • NAS 2021 – தேர்வில் அரியலூர் மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று மாவட்டத்திற்கு மாணவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.
 • சட்டத்துறை, காவல்துறை, நீதித்துறை, சமூகத்துறை, பெண்கள் பாதுகாப்பு அலகு சார்ந்து ஆண்டு தோறும் மாணாக்கர்களுக்கு கல்வி மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 • ஒன்றியம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்ட அளவில் மாணாக்கர்களுக்கு ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் ழவழங்கப்பட்டு வருகின்றன. மாநில அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் அரியலூர் மாவட்டம் சிறப்பு நிலையைப் பெற்று வருகிறது.
 • ஆண்டு தோறும் “கலைத் திருவிழா” – இயல் இசை நாடக வாயிலாக அனைத்து விதமான போட்டிகளும் மாவட்ட அளவில் மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் ழவழங்கப்பட்டு வருகின்றன.
 • 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் அரியலூர் மாவட்டத்தில் 3 நிலைகளில் 4 மாணாக்கர்கள் முதலிடம் பெற்று மாமல்லபுரத்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிடுவதற்கான விமானத்தில் சென்று வந்தனர். அங்கு முதல் நாள் நடைபெற்ற அணிவகுப்பில் அரியலூர் மாவட்ட மாணாக்கர்கள் பங்கேற்று அணிவகுத்துச் சென்றனர். பார்வையாளராக சென்ற சர்வானிகா என்ற 7வயது மாணவி கிராண்ட் மாஸ்டரை வென்று பார்வையாளர்களை அசத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார்.