மூடுக

குடிநீர் வடிகால் வாரியம்

பொது விபரம்

குடிநீர் விநியோகம் பற்றிய குறிப்புரை

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,கிராம குடிநீர் திட்டக் கோட்டத்தின் வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 1 நகராட்சிகள், 1 பேரூராட்சிகள் மற்றும் 6 ஒன்றியங்களில் உள்ள 201 ஊராட்சிகளில் 1573 குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினசரி வழங்கப்படுகிறது.

நகராட்சிகள்:

அரியலூர் நகராட்சியில் உள்ள 27822 மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 85 லிட்டர் தினந்தோறும் உள்ளாட்சி மூலம் வழங்கப்படுகிறது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 33945 மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 82 லிட்டர் தினந்தோறும் உள்ளாட்சி மூலம் 27.83 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது. உடையார்பாளையம் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் தினந்தோறும் வழங்கப்படுகிறது.

கூட்டு குடிநீர் திட்டங்கள்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு தனி மின்விசைத் திட்டம் மூலம் போதுமான குடிநீர் வழங்க முடியாத நிலையில் இம்மாவட்டத்தில் இயங்கும் 7 கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி 22.30 மில்லியன் லிட்டர்கள் குடிநீர் வழங்கப்படுகிறது.

நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள்

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள 281 பயன்பாட்டு கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம்

இத்திட்டம் ரூ. 2606.00 லட்சம் மதிப்பீட்டில் அரசாணையின் 187/ தேதி 25.09.2008 நிர்வாக ஒப்புதலும் ரூ. 2661.00 லட்சம் மதிப்பீட்டிற்கு, தலைமை பொறியாளர் / கிழக்கு மண்டலம் / தஞ்சாவூர் எண். 37/ 2008-09-ன் வழியாக தொழில் நுட்ப ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் புதிய குழாய்கள் ரூ. 12.64 கோடி மதிப்பீட்டில் பதிக்கப்பட்டு வாழைக்குறிச்சி தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து கழுவந்தோண்டி நீருந்து நிலையம், பெரியவளையம், மற்றும் கல்லாத்தூர் நிலைத்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வரை சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு முதல் பகுதியாக 147 பயன்பாட்டு கிராம்ங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு செயல்முறைகள் நடைப்பெற்று வருகின்றது. எஞ்சியுள்ள 134 பயன்பாட்டு கிராம்ங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு கூடுதல் திட்ட அறிக்கை ரூ. 3.73 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு வாரிய தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் நகராட்சி-பாதாள சாக்கடை திட்டம்:

அரியலூர் பாதாள சாக்கடை திட்டம் ரூ. 27.50 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு அரசாணை 204/ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் நிர்வாகம் / MA-3( Dept)/ தேதி 22.10.2009 நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. திட்டப் பணிகள் இரண்டு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு திட்டம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு 20.10.2017முதல் திட்டம் சோதனை முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நகராட்சிகளில் மூலம் கழிவுநீர் அகற்றும் வீட்டிணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.