திட்டங்கள்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார திட்டம்
தகுதி விண்ணப்பதார் ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 12 நபர்கள் இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் வயது 18 முதல் 55 -குள் இருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட குழுவாக இருக்க வேண்டும். மானிய விபரம் சுய உதவி குழுக்களுக்கு திட்டத் தொகையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ 6.00 இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
மண்ணின் மகள் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் மண்ணின் மகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தகுதி விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மானிய விபரம் சந்தை மதிப்பீட்டின் படி, திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5.00 இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 2.5…
கல்விக் கடன் திட்டம்
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு பட்டப் படிப்பினை உள்நாடு மற்றும் அயல் நாட்டில் பயில்வதற்காக NSFDC, NSTFDC மற்றும் NSKFDC போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று மாணாக்கர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. முழுநேர படிப்புகளுக்கான மாணாக்கர்களுக்கு மிக குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் மற்றும் வெளி நாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.40.00 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் மற்றும் வெளி நாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு…
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம்
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்னும் மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டத்தினை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஊரக மற்றும் நகா் பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவங்களை உருவாக்கி வேலைவாய்ப்பினை ஏற்படுத்த அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம், கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) மூலம் இத்திட்டத்தினை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது. மற்றும் மாநில அளவில் கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணைய இயக்குநரகம், மாநில கதா் மற்றும் கிராம தொழில் வாரியம் (KVIB) மற்றும் மாவட்ட தொழில்…
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்
திட்டத்தின் நோக்கம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் 5 கோடி வரையிலான, கடன் உதவியை வங்கிகள் அல்லது மாநிலக் கடனுதவி நிறுவனம் மூலம் பெற்று, தங்களது புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில் நிறுவனங்களை துவங்க வழிவகை செய்தல். தகுதிகள் பொதுப்பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயது வரை. சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினா் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்). பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு அல்லது ஐடிஐ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற்பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். திட்டத்தின் சிறப்பம்சங்கள்…
வேலையில்லா இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)
திட்டத்தின் நோக்கம் சமுதாயத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 இலட்சம், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு முறையே ரூ.5 இலட்சம் வரையில் வங்கிக்கடன் பெற்று தொழில் துவங்க வழிவகை செய்தல். தகுதிகள் பொதுப்பிரிவினருக்கு 18 வயது முதல் 35 வயது வரை. சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினா் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்). 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டத்தின் சிறப்பம்சங்கள்…