மூடுக

திட்டங்கள்

வகை வாரியாக திட்டங்களை பட்டியலிடு

வடிகட்டு

இளைஞர் திறன்வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி

திட்டத்தின் விவரம் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டு, தேசிய தொழில் கல்வி நிறுவனம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தலைமை இயக்குநர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் நடத்தப்படும் பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். திட்டத்தில் சேர தகுதி ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள் கல்விச் சான்றிதழ்கள்

வெளியிடப்பட்ட தேதி: 19/03/2020
விவரங்களை பார்க்க

அம்மா இருசக்கர வாகனத்திட்டம்

திட்டத்தின் விவரம் அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50% ஆகியவற்றில் எதுகுறைவோ அது வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் வாகனத்தை வாங்க ரிசர்வ் வங்கியால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம். 125 CC திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும். திட்டத்தில் சேர தகுதி இருசக்கர வாகன திட்டமானது பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், சுயமாக தொழில் செய்யும் பெண்கள்,…

வெளியிடப்பட்ட தேதி: 19/03/2020
விவரங்களை பார்க்க

மகளிர் சுய உதவிக்குழு அமைத்தல்

திட்டத்தின் விவரம் இதுவரை சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படாத மக்களிடையே குழுக்கள் அமைப்பதும், சுய உதவிக்குழுவில் இதுவரை இணைக்கப்படாத மகளிரை குழுக்களின் இணைப்பதும் குறிப்பாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கைகள், நலிவுற்றோர் மற்றும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரை சிறப்புக் கவனம் செலுத்தி சுய உதவிக்குழுக்களின் சேர்ப்பது நோக்கமாகும். ஒத்த கருத்துடைய ஏழை மகளிர் தாமாகவே முன் வந்து தங்கள் வளர்ச்சிக்காக ஒன்று சேர்ந்து சேமிப்பினை பெருக்கிடவும், குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு குறிப்பிட்ட தொகையினை வாரம் அல்லது மாதந்தோறும் சேமித்து தங்களுக்குள்ளேயே சிறுகடன் கொடுத்து உதவிக்கொள்ளும் ஒரு சிறு குழு அமைப்பதே சுய உதவிக்குழுவாகும். திட்டத்தில் சேர…

வெளியிடப்பட்ட தேதி: 19/03/2020
விவரங்களை பார்க்க

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர தகவு

தமிழ்நாடு அரசு தொழில் துவங்க முன்வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் ஆதரவும் அளித்து வருகிறது.  தொழில் முனைவோர்கள் தொழில் துவங்க தேவையான பல்வேறு வகையான உரிமங்கள் மற்றும் அனுமதிகளை ஒற்றைச் சாளர தகவின் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோர்களுக்கு உகந்த மற்றும் முதலீட்டாளா்களுக்கு இயைந்த சூழலை உருவாக்குவதில் மாநிலத்திற்கு உள்ள விருப்பத்தினை வெளிப்படுத்தும் வகையில்  தமிழ்நாடு அரசானது, 11 துறைகளின் மூலம் வழங்கப்பட வேண்டிய உரிமங்கள் மற்றும் அனுமதிகளை குறித்த காலத்திற்குள் வெளிப்படையான வகையில் இணையதளம் வழியாக முதலீட்டாளர்களுக்கு பெற்று வழங்கிட இணையதள…

வெளியிடப்பட்ட தேதி: 17/03/2020
விவரங்களை பார்க்க

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டம்

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டமானது, வேலையில்லாத இளைஞா்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கு தேவையான பயிற்சியினை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களால் இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவனங்கள் மாதம் ரூ.5000 வீதம் உதவித் தொகையை 6 மாதங்களுக்கு வழங்கப்படும். அதில் மாதம் ரூ.2000 வீதம் ஒரு பயிற்சியாளருக்கு தமிழ்நாடு அரசால் அந்நிறுவனங்களுக்கு பயிற்சியின் முடிவில் மானியமாக திரும்ப அளிக்கப்படும். பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.(TNSDC).

வெளியிடப்பட்ட தேதி: 17/03/2020
விவரங்களை பார்க்க

ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிக்கும் திட்டம் (PEACE)

திட்டத்தின் நோக்கம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆற்றல் சேமிப்பிற்கான புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வையும், அறிவுறுத்தலையும் உருவாக்கும். ஆற்றல் தணிக்கைகளை மேற்கொண்டு, ஆற்றல் திறனை அதிகரிக்கவும், எரிபொருள் மாற்றவும், மேலும் ஆற்றல் தணிக்கை அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தி அவற்றை கண்காணித்தல். திட்டத்தின் சிறப்பம்சங்கள் ஆற்றல் தணிக்கைக்கு ஆகும் செலவில் 50 விழுக்காடு ரூ.75,000 க்கு மிகாமல் மானியமாக வழங்குதல். ஆற்றல் தணிக்கையை நடைமுறை படுத்த தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கூறுகளின் மதிப்பில் (Components) 25 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரை மானியமாக வழங்குதல்.

வெளியிடப்பட்ட தேதி: 17/03/2020
விவரங்களை பார்க்க

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள்

அ. முதலீட்டு மானியம் தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிகப்பட்சமாக ரூ.50 இலட்சம் வரை வழங்கப்படும். தகுதிகள் தமிழ்நாட்டின் எப்பகுதியிலும் தொடங்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் 13 வகையான உந்துதல் தொழில்களை மேற்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். அரசால் அறிவிக்கப்பட்ட 251 தொழிலில் பின்தங்கிய வட்டாரங்களில் ஆரம்பிக்கப்படும் அனைத்து புதிய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். மாநிலத்தில் 385 வட்டாரங்களில் அமைக்கப்படும் வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். மேற்கண்ட வகையை சார்ந்த தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில் துவங்கும் பொழுது….

வெளியிடப்பட்ட தேதி: 17/03/2020
விவரங்களை பார்க்க

திறன் மேம்பாட்டு பயிற்சி

வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய ஆரம்ப நிலை பயிற்சிகளான ஆயத்த ஆடை தயாரித்தல், கணினி பயிற்சிகள்(டேலி), சில்லரை செலிவின மேலாண்மை, கணினி வன்பொருள் உதவியாளர், வெல்டர் வீட்டு பயன்பாட்டு மின் தொழில நுட்ப பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும்.

வெளியிடப்பட்ட தேதி: 16/03/2020
விவரங்களை பார்க்க

மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம்

தாட்கோ திட்டங்கள் எவையிலும் உடனடியாக பயன்பெற இயலாத ஆதிதிராவிட ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 30 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், குணப்படுத்த இயலாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டத்தில் விரைவில் சுய தொழில் புரிந்து பயன்பெறும் பொருட்டு முன்னுரிமை வழங்கப்படும். தகுதி வயது வரம்பு இல்லை. தேவையான ஆவணங்கள் சாதிச்சான்று,வருமானச்சான்று,பிறப்பிடச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி (GSTIN. எண்) மற்றும் புகைப்படம்.

வெளியிடப்பட்ட தேதி: 16/03/2020
விவரங்களை பார்க்க

இலவச துரித மின் இணைப்பு திட்டம்

ஆதிதிராவிட விவசாயி பெயரில் நிலப்பட்டாவுடன் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்து தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் இணைப்பு கோரிய விண்ணப்பதாரர் ஒருவருக்கு ரூ.25000/- வைப்புத்தொகையாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் செலுத்தி முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தகுதி ஆதிதிராவிட விவசாயியாக இருத்தல், வயது வரம்பு மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ஏதுமில்லை தேவையான ஆவணங்கள் சாதிச்சான்று, வருமானச்சான்று, பிறப்பிடச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பட்டா /சிட்டா- நிலப்பட்டா, அடங்கல், அ பதிவேடு, கிணறு (அ) ஆழ்துளை கிணறு அமைந்துள்ள புலப்படம், மின் வாரியத்தில் பதிவு செய்த இரசீது மற்றும் புகைப்படம்.

வெளியிடப்பட்ட தேதி: 16/03/2020
விவரங்களை பார்க்க