மூடுக

மகளிர் திட்டம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அரியலூர் மாவட்டம்.

முன்னுரை :

தமிழ்நாட்டில் மகளிரை சுய உதவிக்குழுக்களாக அமைத்து, திறன் வளர் பயிற்சியிகள் வழங்கி கூட்டமைப்புகள் மூலம் ஒருங்கிணைத்து வங்கிகள் மூலம் கடனுதவிகள் பெறச் செய்து, சிறு தொழில்களில் ஈடுபடுத்தி அவர்தம் வருவாயைப் பெருக்குவதன் மூலம் வறுமையை குறைத்து சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் 1983ல் நிறுவப்பட்டது.   இந்நிறுவனம், மாநிலத்திலுள்ள வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு நீடித்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் ஊரகப் பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினையும் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தினையும் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் :

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழை மக்களைக் கண்டறிந்து சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து அவர்களுக்கான நிலைத்த தன்மையுடைய அமைப்புகளை உருவாக்கி பல்வேறு திறன் பயிற்சிகள் மூலம் அவர்களது வாழ்வாதார நிலையை உயர்த்தி, வறுமையை ஒழிப்பதே இவ்வியக்கத்தின் குறிக்கோளாகும்.

மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட ஏழை மக்களின் குடும்பங்களை வறுமையிலிருந்து விடுபடச் செய்யும் நோக்கில் வலுவான மற்றும் உயிரோட்டமான மக்கள் அமைப்புகளை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை பெற வழிவகை செய்வதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.

  1. சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் சமுதாய உள்ளாக்கம்

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து கிராம ஊராட்சிகளிலிருந்தும் தகுதியான ஊரக ஏழை மக்கள் குடும்பங்களை மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு அதன் விவரங்கள் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. சமுதாய ஒருங்கிணைப்பில் தகுதியான ஊரக ஏழை குடும்பங்களிலிருந்து குறைந்த பட்சம் ஒரு மகளிராவது மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்க்கப்படுகிறது.
    மக்கள் நிலை ஆய்வில் கண்டறியப்பட்டவர்களில் நலிவுற்றோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மாற்றுத்திறனாளி, முதியோர் மற்றும் சிறுபான்மையினர் போன்றோர்களுக்கு முன்னுரிமை அளித்து சுய உதவிக்குழுவில் இணைக்கப்படுகின்றனர்.

    • மகளிர் சுய உதவிக்குழு அமைத்தல்

      ஒரே கிராமத்தில் ஒருமித்த கருத்துடைய 18 வயது முதல் 60 வயது வரை உள்ள மகளிர் 12 முதல் 20 எண்ணிக்கையில் ஒன்றிணைந்து தங்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் குழுவாக சேர்ந்து செயல்படுவதாகும். மேலும் மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர்கள் மற்றும் முதியோர்கள் குறைந்த பட்சம் 5 நபர்களைக் கொண்டும் சிறப்பு குழுக்களாக அமைக்கப்படுகிறது.

    • மகளிர் சுய உதவிக்குழுக்களின் நிதி ஆதாரங்கள் :

      தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தால் அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் நிலைத்த தன்மையுடன் செயல்பட பின்வருமாறு நிதி ஆதாரம் அளிக்கப்படும்.

    • சுழல்நிதி

      மூன்று மாதங்கள் முடிவடைந்த புதிய மகளிர் சுய உதவிக்குழுக்களை தர மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு ரூ.15,000/- சுழல் நிதியாக வழங்கப்படும். இந்நிதியை சுய உதவிக்குழுக்கள் தங்களது சேமிப்பு போலவே கருதி சுழல்நிதியை பயன்படுத்தலாம். உட்கடனாகவும் உறுப்பினர்களுக்கு சிறு நிதியாக வழங்கப்படும்.

    • சமுதாய முதலீட்டு நிதி

      சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதார செயல்பாடுகளுக்காக கடனாக வழங்கப்படும் தொகை சமுதாய முதலீட்டு நிதியாகும். சுய உதவிக்குழுக்களுக்கு அதிகபட்ச தொகையாக ரூ.1,50,000/- வீதம் ஆண்டிற்கு 9 % வட்டியுடன் கடனாக வழங்கப்படும்.

    • நலிவு நிலை குறைப்பு நிதி :

      மக்கள் நிலை ஆய்வின் போது மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நலிவுற்றோர் மேம்பாட்டு நிதியாக ரூ.10,000/- முதல் ரூ.25,000/- வீதம் ஆண்டிற்கு 6% வட்டியுடன் தனி நபர் கடனாக வழங்கப்படும்.

  2. திறன் வளர்ப்பு :

    கிராம அளவில் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மிக முக்கியமான அங்கமாக விளங்கி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பணிகளை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.
    சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறந்த சேவை பெறுவதை உறுதி படுத்துவதற்காக இந்த சமுதாய அமைப்புகளுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக இப்பயிற்சிகளின் ஆதாரமாக சுய உதவிக்குழுக்களின் நிர்வாகமும் நிதி மேலாண்மையும் திகழ்கின்றன. சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் ஒருங்கிணைந்த துடிப்பான செயல்பாடுகளே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வெற்றிக்கு அடிப்படை என்பதால் திறன் வளர்ப்பிலுள்ள கீழ்க்கண்ட அனைத்து நிலை பயிற்சிகளும் இவ்வமைப்புகளுக்கு அளிக்கப்படுகின்றன.

    • புதிதாக அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள், ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கான பயிற்சி
    • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை சார்ந்த பயிற்சி
    • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
    • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்காளர்களுக்கு புத்தக பராமரித்தல் பயிற்சி
    • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் துணைக் குழுக்கள் மற்றும் சமூக தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
    • கிராம வறுமை ஒழிப்புச் சங்க அலுவலக நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு ஆளுமை மற்றும் நிதி குறித்த மேலாண்மை பயிற்சி
    • வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் நிர்வாக குழு மற்றும் உறுப்பினர்களுக்கான பயிற்சி
    • மாவட்ட அளவில் மகமை உறுப்பினர்களுக்கான பயிற்சி
    • சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு புத்தாக்க பயிற்சி
    • மாநில வள வல்லுநர் மற்றும் மாவட்ட வள வல்லுநர்களுக்கு புத்தாக்க பயிற்சி
    • மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி.
  3. தீன் தயாள் உபாதியாய கிராமின் கௌசல்ய யோஐனா:

    பணியமர்வுடன் கூடிய திறன் பயிற்சி

    தீன் தயாள் உபாதியாய கிராமின் கௌசல்ய யோஐனா திறன் பயிற்சி திட்டமானது தமிழ்நாட்டில் 2014 ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சியளித்து தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதை அடிப்படையாக் கொண்டிருப்பதுடன், அவர்களுக்குத் தொடர்ந்து ஆலோசனை மற்றும் கண்காணிப்பு வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :
    • 3 முதல் 17 மாதங்கள் வரை வேலைவாய்ப்புடன் கூடிய சந்தை சார்ந்த தொழில் திறன் பயிற்சிகள்.
    • தொழில்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம்.
    பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள் :

    18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ள இளைஞர்கள் (ஆண்/பெண் இருபாலருக்கும்) பெண்கள், மாற்றுத்திறனாளிகள், நலிவடைந்தோர் மற்றும் விளிம்பு நிலை பழங்குடியினர் முதலியோருக்கு வயதுவரம்பு 45 ஆக தளர்த்தப்பட்டுள்ளது.

    பாடத்திட்டம்:

    தரமான பாடத்திட்டம் மற்றும் ளுளுஊ துறை திறன் குழுமம் ஆகியவற்றால் பாpந்துரைக்கப்பட்ட அடிப்படை பாடத்திட்டத்தினை அனைத்து பயிற்சிகளுக்கும் பின்பற்றுவதுடன் அடிப்படை ஆங்கிலத்தில் பேச்சுத்திறன், அடிப்படை கணினி அறிவு மற்றும் மென் திறன் போன்ற திறன் மேம்பாட்டு பாடங்களையும் கொண்டதாக பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
    பயிற்சியின் பாடத்திட்டமானது 40 விழுக்காடு விளக்கப்பாடமும் 60 விழுக்காடு செய்முறை பயிற்சியும் கொண்டிருப்பதுடன் பயிற்சியின் போது பாடத்திட்ட குறிப்புகளும் அளிக்கப்படுகின்றது. பயிற்சி காலத்தில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்படுகிறது.
    நிறுவன பயிற்சிக்குப்பின் இரண்டாம் கட்டமாக மொத்த பயிற்சி கால அளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் பணியமர்த்தும் இடத்திலேயே களப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
    பயிற்சி நிறைவு பெற்ற உடன் SSC துறை திறன் குழுமம் (Sector Skill Council) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயிற்சியாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமான சான்றிதழ்கள் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் வழங்கப்படுகிறது.
    பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு குறைந்தது ஓராண்டு காலம் வரை ஆலோசனை வழங்கி, அவர்கள் பணியில் தொடர்ந்து நீடிப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

    வேலைவாய்ப்பு முகாமின் மூலம் நேரடி வேலைவாய்ப்பு :

    வேலைவாய்ப்பு முகாமானது வேலைகொடுப்பவர் மற்றும் வேலை தேடுபவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க தமிழக அரசால் துவக்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த முன் முயற்சியாகும். இம்முகாம்களில் இளைஞர்களின் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு பணியமர்வு செய்யப்படுகின்றனர்.

  4. நிதி உள்ளாக்கம் :

    சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு

    தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மகளிர் சுய உதவிக்குழு வங்கி கடன் இணைப்பு திட்டத்தின் மூலம் வங்கி கடன் பெறுவதற்கு தகுதி பெறும்.
    சுய உதவிக்குழுக்கள் வங்கி கடன் பெற குறைந்த பட்சம் 6 மாத காலம் முடிவுற்று கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    • கூட்டங்கள் நடத்துதல்
    • சேமிப்பு
    • உள்கடன் கொடுத்தல்
    • கடன் வசூலித்தல்
    • பேரேடுகள் பராமரித்தல்

    சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு பொருளாதார நடவடிக்கை மேற்கொண்டு வருமானத்தை அதிகரித்து கொள்ளவும் வங்கி கடன் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படுகிறது. மேலாண்மை திறன்கள் முந்தய கடன்களை காலம் தவறாது செலுத்தியது போன்றவைகளின் அடிப்படையில் வங்கிகள் தொடர்ந்து மறு கடன்கள், போதுமான கடன்கள் வழங்கும்.
    ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி கீழ்க்கண்டவாறு வங்கிக் கடன்கள் வழங்க வேண்டும்.

    ரூபாயில்
    முதல் கடன் இணைப்பாக (முதலாமாண்டு) 1,50,000/-க்கு மேல்
    இரண்டாவது (2-3 ஆண்டு) 3,00,000/- அதற்கும் மேல்
    மூன்றாவது (3-4 ஆண்டு) 6,00,000/- அதற்கும் மேல்
    நான்காவது (4(ம)-4ஆண்டுக்கு மேல்) நுண் கடன் திட்டம் அடிப்படையில் வழங்கப்படும்

    ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி வங்கிகளால் 9மூ முதல் 12மூ வரை வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன்

    ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு தான் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு இந்த கூட்டமைப்பு மகளிர் சுய உதவிக்குழுக்களின் நிதி தேவைகளை நிறைவேற்றும் நிறுவனமாக திகழ்கிறது. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மொத்த கடன் திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் போதுமான வங்கி கடன்கள் கிடைக்காததினால் அதிக வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனத்தில் சிக்கிக் கொள்வதை தடுக்க இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
    ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் ரூ.10 இலட்சம் முதல் 1.50 கோடிகள் வரை வங்கிகளில் மொத்த கடனாக பெற்று அமைப்பில் உள்ள குழுக்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

  5. வாழ்வாதாரம்

    பண்ணை சார் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள்

    பண்ணை மகளிர் குடும்ப வருமானத்தினை படிப்படியாக அதிகரிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகம்.   தொடர்ச்சியாக வருமானம் பெறுவதற்கு தேவையான தொடர் நடவடிக்கைகள் இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   தகுதியான ஊரக ஏழை குடும்பங்களில் உள்ள மகளிர் மக்கள் நிலை ஆய்வில் கண்டறியப்பட்டவர்களில் நலிவுற்றோர் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மாற்றுத் திறனாளி முதியோர் மற்றும் சிறுபான்மையினர் போன்றவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.

    வாழ்வாதார திறன் மேம்பாட்டு பயிற்சி

    முன்னோடி தொழில் நுட்பங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் செயல்விளக்கங்கள் செய்து காட்டப்படும்.   பயிர் வளர்ப்பு கால்நடை வளர்ப்பு, அங்கக வேளாண்மை, ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்தல், பூச்சி மருந்தில்லா மேலாண்மை மேற்கொள்ள உயிரியல் இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தங்களின் வருமானத்தினை பெருக்கி கொள்ளலாம்.

    இயற்கை வேளாண் தொகுப்புகள் ஏற்படுத்ததுல்

    தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் வேளாண் சாகுபடியில் நீடித்த நிலைத்த இயற்கையான சாகுபடி முறைகளையும் முன்னோடியான கால்நடை பராமரிப்பு முறைகள் மரம் நீங்கலான வனப்பொருட்களை சேகரித்தல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்றவற்றின் மூலமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதார முறைகளை வலுப்படுத்தி வருகிறது. விவசாயிகளை அடுத்த நிலைக்கு முன்னேற்றுவதற்கு இயற்கை வேளாண்மை சான்று பெறுவதும், சந்தைப்படுத்துதலில் இலாபகரமான விலை பெறவும் வழிவகை செய்ய வேண்டும்.
    இயற்கை வேளாண் தொகுப்புகள் கீழே கண்ட நன்கு வரையறுக்கப்பட்ட திட்ட செயலாக்க நடவடிக்கைகள் மூலம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    • இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமுள்ள விவசாயிகளைக் கொண்ட அருகாமையில் உள்ள தொகுப்பு கிராமங்களை தேர்வு செய்வது.
    • ஆர்வமுள்ள மகளிர் விவசாயிகளை தேர்வு செய்வது.
    • அங்கக சான்றிதழ் வழங்கும் நடைமுறை தமிழ்நாடு அங்ககச் சான்றிதழ் துறையுடன் சேர்ந்து இயற்கை வேளாண் தொகுப்பின் பயனாளிகளுக்கு அங்கக வேளாண்மை பயிற்சியும் அங்கக சான்றிதழ் வழங்கும் நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இந்த திட்ட்த்தில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் சமுதாய வள பயிற்றுநர்கள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல்.
    உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்தல்

    வாழ்வாதார நடவடிக்கைகளில் முக்கிய நோக்கம் கிராமப்புற குடும்பங்களின் வருமானத்தினை அதிகரிப்பதே ஆகும். கூட்டு கொள்முதல் கூட்டு பேரம் பேசுதல் மற்றும் கூட்டு சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உற்பத்தியாளர்களை உற்பத்தியாளர் குழுக்களாக உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களை அருகாமையில் உள்ள சந்தைகளில் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்தல்

    கிராமப்புறங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும் சாpவிகித உணவினை எடுத்துக்கொள்வதை உறுதி செய்யவும் வீடுகளில் உள்ள சிறிய அளவிலான இடங்களில் காய்கறி தோட்டம் அமைக்க இந்த இடம் வழிவகுக்கிறது. இதற்கான பயிற்சி ஊராட்சி அளவில் சமுதாய வள பயிற்றுநர்களால் அளிக்கப்படும்.

    ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள்

    வேளாண்மை தொழில்களிலிருந்து நிலையான வருமானம் பெறுவதற்காக வேளாண் மகளிர் விவசாயிகள் வேளாண் தொழிலுடன் கால்நடை வளர்ப்பையும் சேர்த்து ஒருங்கிணைந்த பண்ணை முறை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகளின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பு உருவாக்கப்படும்.
    ஒவ்வொரு ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பிலும் இயந்திர வாடகை மையம் இயற்கை விவசாய இடுபொருட்களை தயாரித்து விற்பனை செய்ய கூடிய அங்காடி விவசாயத்துடன் கறவை மாடுகள் வளர்ப்பு ஆடு, வளர்ப்பு கோழி, மீன் வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணை தாவர மற்றும் மண் மாதிரிகளில் பூச்சி மருந்து மற்றும் இரசாயன உரங்களின் மிச்சத்தினை கண்டுபிடிப்பதற்கான பண்ணை ஆய்வுக்கூடம் ஆகியவை இருக்கும்.

    சந்தைப்படுத்துதலுக்கு ஆதரவு

    கண்காட்சிகள்

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை கண்காட்சிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூலம் சந்தைப்படுத்திட தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இக்கண்காட்சிகள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்புகளையும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் விற்பனைத் திறனை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.
    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கைவினைப்பொருட்கள் செயற்கை அணிகலன்கள், சணல் பொருட்கள், தோல் பொருட்கள்,சிறு தானியங்கள் போன்ற மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், பொருட்களை விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்திடவும் ஒவ்வொரு ஆண்டும் சுய உதவிக்குழு விற்பனை விழா என்ற பெயரில் பொங்கல், சித்திரை மற்றும் நவராத்திரி பண்டிகை காலங்களில் மாநில அளவிலான மூன்று கண்காட்சிகளை நடத்துகின்றது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனைத் திறனை மேம்படுத்துவதற்கும் மொத்த கொள்முதல் தரம் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றின் திறனை வளர்ப்பதற்கும் இக்கண்காட்சிகள் உதவுகின்றன.

தீன்தயாள் அந்தியோதய யோஐனா- தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்

தீன்தயாள் அந்தியோதய யோஐனா- தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கமானது மத்திய மற்றும் மாநில அரசுகளால் 60-40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது நகர்புறங்களில் பின்தங்கிய மற்றும் ஏழை குடும்பங்களுக்கு வலுவான நிறுவன அமைப்புகளை உருவாக்கித் தருவதன் மூலம் அவர்களின் நிலையான வாழ்வாதாரத்தை நலிவுற்ற நிலையிலிருந்து நிலையான லாபம் தரக்கூடிய வகையில் சுய வேலை மற்றும் திறன் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உறுதி செய்வதாகும்.

சமூக அணிதிரட்டல் மற்றும் நிறுவன மேம்பாடு

இந்த உட்கூறின் நோக்கமானது சுய உதவிக்குழுக்கள் மற்றும் அவர்களது கூட்டமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களை சமூக அணிகளாக ஒன்று திரட்டுதல் ஆகும். அத்தகைய அணிகளிலிருந்து சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தும் கூட்டமைப்பினை உருவாக்குதல் மற்றும் அதன் தொடர்பான பிற நடவடிக்கைகளை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு கண்காணித்தல் மற்றும் குழுக்களுக்கு வங்கி இணைப்பு ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஒரு சுய உதவிக்குழுவிற்கு அதிக பட்சமாக ரூ.10000/- செலவிடப்படுகிறது. மேலும் ஒரு சுய உதவிக்குழுவிற்கு சுழல் நிதியாக ரூ.10000/- வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்களின் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ஒரு முறை சுழல் நிதியாக ரூ.50,000/- கொடுக்கப்படுகிறது.
மேலும் நகர்புற வாழ்வாதார மையங்கள் அமைக்க ஒரு மையத்திற்கு ரூ.10,00,000/- நிதி வழங்கப்படுகிறது.

திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் வேலைவாய்ப்பினை உருவர்ககுதல்

இதன் நோக்கமானது நகர்புற ஏழை மக்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் பயனாளிக்கான போக்குவரத்து செலவு மதிப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு பெற்ற பயனாளிக்கான உதவித் தொகை ஆகியவை தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி திட்டக் கூறில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

திட்ட இயக்குநர்/இணை இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
அரியலூர்.
தொலைபேசி எண்: 04329 – 228505