ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்.
- 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் நலத்தையும், ஊட்டச்சத்தையும் மேம்படுத்துதல்.
- உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மொழிவளர்ச்சி , சமுதாய வளர்ச்சி இவற்றைச் சிறுவயதிலிருந்தே நல்ல முறையில் பேணிக் காத்தல்.
- குழந்தை இறப்பு விகிதம், நோய் வாய்ப்படுதல், சத்துணவு பற்றாக்குறை ஆகியவற்றைக் குறைத்தல்.
- தாய்மார்களிடையே இயற்கையிலே உள்ள குழந்தை வளர்ப்புத் திறனைச் சத்துணவு மற்றும் சுகாதாரக் கல்வி மூலம் அதிகரித்தல்.
- குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் அனைத்து துறைகளுடன் சேர்ந்து பணியாற்றுதல்.
- 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்களின் நலத்தையும், ஊட்டச்சத்தையும் மாதந்தோறும் கண்காணித்து ஆலோசனை மற்றும் பரிந்துரை வழங்கப்பட்டு வருகிறது.
- கிஷோரி சக்தி யோஜனா மூலம் 11-18 வயது வளர் இளம் பெண்களுக்கு உடல் நலத்தையும், ஊட்டச்சத்தையும் அதிகரிக்க கல்வி அளித்தல் மற்றும் தொழில் பயிற்சி மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழி வகுக்கப்பட்டு வருகிறது.
- 2017 ஆம் ஆண்டு அரியலூர் சட்டமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்ட தொகையில் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் எரிவாயு இணைப்பு, சமையல் மேடை மற்றும் சமையல் அடுப்பு ஆகியவை கொடுக்கப்பட்டு, அனைத்து அங்கன்வாடி மையங்களின் தரம் உயர்த்தப்பட்டது.
- குழந்தைகளை ஊக்குவிக்க அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் இரண்டு செட் வண்ணச் சீருடை அனைத்துக் குழந்தைகளுக்கும் (2-5+ வயது) முன்பருவக் கல்வி குழந்தைகளுக்கு வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
- ISO தரச்சான்று நான்கு அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் வட்டாரத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்களுக்கும், திருமானூர் வட்டாரத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
- வருடந்தோறும் நெகிழ்வு தொகையாக ரூபாய் 1000/- வீதம் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்படுகிறது.
- வருடந்தோறும் குடற்புண் நீக்கல் மருந்து வழங்கப்படுகிறது.
- சிறந்த அங்கன்வாடி பணியாளர் விருது அரியலூர் வட்டாரம் மற்றும் ஆண்டிமடம் வட்டாரம் பணியாளர்கள் இருவருக்கு வழங்கப்பட்டது. மூ.5000/- வீதம் 2 பணியாளர்களுக்கு ரூ.10000/- வழங்கப்பட்டது.
- வருடந்தோறும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 5 வகை சாப்பாடு, 1-டசன் வளையல், குங்குமம், மஞ்சள் , பூ, சுமங்கலி செட் மற்றும் மாலை அணிவித்து அவர்களின் நலனை மேம்படுத்த வழிவகுக்கிறது.
- முன்பருவக்கல்வி பயில ஏதுவாக 11 மாதங்களுக்குமான பாடத்திட்ட புத்தகம் 1செட் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் விடுமுறை மாதம் என்பதால் பாதி வருகை புரியும் குழந்தைகளுக்கு 11 மாத தலைப்புப் பாடம் திருப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.
- அனைத்து முன்பருவக்கல்வி குழந்தைகளின் திறனை மதிப்பிடுவதற்காக 2-3 வயது, 3-4 வயது மற்றும் 4-5 வயது குழந்தைகளுக்கு ஆய்வுத் தாள் அட்டை தனித்தனியாக வழங்கப்பட்டு மதிப்பிடப்பட்டு வருகிறது.
- செயல்பாட்டு புத்தகம் அனைத்து முன்பருவக்கல்வி குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் குழந்தைகளின் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்த இது வழி வகுக்கிறது.
- குழந்தைகள் விவரப் பதிவேடு அனைத்து முன்பருவக் கல்வி குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு அவர்களின் விவரம் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது.
- கடுமையான எடைக்குறைவாக இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவக் குழு மூலம் பரிந்துரை செய்யப்பட்டு வருடந்தோறும் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
- ஆண்டிமடம் வட்டாரத்தில் கடுமையான எடைக் குறைவாக உள்ள 10 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நன்கொடையில் 3 மாத காலத்திற்கு தினமும் சத்துமாவுடன் (இணை உணவுடன்) நெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையில் முதல் உணவாக வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தைகள் நலத்தையும், ஊட்டச்சத்து நிலையையும் மேம்படுத்தும் விதமாக வாரம் 6 நாட்களுக்கு தினமும் ஒரு உணவு வழங்கப்படுகிறது.
அவைகளாவன,
திங்கள் கிழமை – தக்காளி சாதம், வேகவைத்த முட்டை. செவ்வாய் கிழமை - கலவைசாதம், வேகவைத்த முட்டை. புதன் கிழமை - காய்கறி புலாவ், வேகவைத்த முட்டை. வியாழக்கிழமை - எலுமிச்சைசாதம், வேகவைத்தமுட்டை. வெள்ளிக்கிழமை - பருப்பு சாதம், வேகவைத்த முட்டை. சனிக்கிழமை - கலவை சாதம் வழங்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை – சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஒருநாள் உணவு விகிதம் : அரிசி 80கிராம், பருப்பு 10 கிராம்.
கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இணை உணவு மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
கர்ப்பிணி தாய்மார்கள் – 220 கிராம் ஒருநாள் அளவு பாலூட்டும் தாய்மார்கள் - 220 கிராம் ஒருநாள் அளவு 6-24 மாத குழந்தைகள் - 150 கிராம் – இயல்பு நிலைக் குழந்தைகள் 6-24 மாத குழந்தைகள் - 240 கிராம் – கடுமையான எடைக்குறைவு குழந்தைகள் 2-3 வயது குழந்தைகள் - 130 கிராம் - இயல்பு நிலைக் குழந்தைகள் 2-3 வயது குழந்தைகள் - 190 கிராம் – கடுமையான எடைக்குறைவு குழந்தைகள் 3-5 வயது குழந்தைகள் - 10 கிராம் ஒருநாள் (அனைத்துக் குழந்தைகளுக்கும்) 3-5 வயது குழந்தைகள் - 100 கிராம் (கடுமையான எடைக்குறைவு)
முதன்மை அங்கன்வாடி மையங்கள்(குறைந்தது 400 மக்கள் தொகை உள்ள ஊரகம் மற்றும் கிராமப்புறங்களிலும், அதிகபட்சம் 800 மக்கள் தொகையும் 25 குழந்தைகளுக்கு அதிக எண்ணிக்கை) | குறு அங்கன்வாடி மையங்கள் (குறைந்தது 150 மக்கள் தொகை உள்ள ஊரகம் மற்றும் கிராமப்புறங்களிலும், அதிகபட்சம் 400 மக்கள் தொகையும் 15 குழந்தைகளின் எண்ணிக்கைக்கு குறையாமலும்) | குழந்தை வளர்ச்சி திட்டம் (வட்டாரங்கள்) |
---|---|---|
691 | 83 | 6 |
வ. எண் | பிரிவு | வயது-மாதம் | பயனடைவோர் |
---|---|---|---|
1. | இளம் குழந்தைகள் | 7 மாதம் முதல் 12 மாதம் வரை | 5099 |
2. | கர்ப்பிணிகள் | 4863 | |
3. | பாலூட்டும் தாய்மார்கள் | 5406 | |
4. | வளர் இளம் பெண்கள் | 15 முதல் 18 வயது | 22980 |
5. | இளம் குழந்தைகள் | 1-2 வயது | 10099 |
6. | இளம் குழந்தைகள் | 2-3 வயது | 10446 |
7. | குழந்தைகள் | 3-5 + | 21338 |
வ.எண் | வகை | வழங்கிய மையங்கள் | தொகை (லட்சத்தில்) |
---|---|---|---|
1. | எரிவாயு இணைப்பு | 774 | 19.35 |
2. | எரிவாயு அடுப்பு | 774 | 7.74 |
3. | பிரஷர் குக்கர் | 774 | 20.12 |
4. | சமையல் மேடை | 774 | 19.35 |