மூடுக

கூட்டுறவுத்துறை

  • அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் 90 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • அவற்றில் 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 1-அரியலூர் நகர கூட்டுறவு வங்கி, 2 – தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 1 -வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 17 – பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள், 2- தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள், 1-வல்லம் முந்திரிக் கொட்டை சேகரிப்போர் தொழில் ஒப்பந்தக் கூட்டுறவுக் கடன் சங்கம், 1-அரியலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் 1-அரியலூர் கூட்டுறவு ஒன்றியம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
  • அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்கடன், பொதுநகைக்கடன், மத்தியக் காலக்கடன், சுயஉதவிக்குழுக்கடன், கொதுவைக்கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன் மற்றும் மாற்றுத்திறனாளி கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • 1-அரியலூர் நகர கூட்டுறவு வங்கியின் மூலமாக சிறுவணிக கடன், நகைக்கடன், வீடு கட்டும் கடன், தொழில்கடன், பண்ணைசாராக்கடன், கூட்டுப் பொறுப்புக்குழு கடன் மற்றும் பணிபுரியும் மகளிர் வளர்ச்சி கடன் ஆகிய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • வேளாண் சேவை மையம் மூலமாக 43 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • கிராமமக்கள் தங்களது சொந்த ஊரிலேயே பயன்பெறும் வகையில் 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 2 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளும் பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருவாய் துறை மற்றும் சமூக நலத்துறையினால் வழங்கப்படும் சான்றுகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
  • அரியலூர் மாவட்டத்தில் 2 அம்மா மருந்தகங்கள் மற்றும் 2 கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு 20 %தள்ளுபடியுடன் நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கி வருகின்றன.

பயிர்கடன் தள்ளுபடி

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலம் 2021 -ஆம் ஆண்டு பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 30539 விவசாயிகளுக்கு ரூ.223.43/- கோடி அளவிற்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பொதுநகைக்கடன் தள்ளுபடி

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 2021 -ஆம் ஆண்டு பொதுநகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 15990 உறுப்பினர்களுக்கான 20838 கடன்களுக்கு ரூ.72.73/- கோடி அளவிற்கு பொதுநகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக்குழுக்கடன் தள்ளுபடி

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 2021 -ஆம் ஆண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 2500 குழுக்களுக்கான 35526 உறுப்பினர்களுக்கு ரூ.595.90/- கோடி அளவிற்கு மகளிர் சுயஉதவிக்குழுக்கடன் தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 01.04.2022 முதல் 22.08.2022 வரை பயிர்கடன்கள் ரூ.79.44/- கோடியும், நடைமுறை மூலதனக்கடன் ரூ.1.67/-கோடியும், மத்தியக்காலக்கடன்கள் ரூ.0.55/- கோடியும், சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.3.30/-கோடியும், மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு ரூ.0.15/- கோடியும் மற்றும் பொதுநகைக்கடன்கள் ரூ.64.68/-கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களை பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களாக மாற்றிட ஏதுவாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம் 20-சங்கங்களுக்கு ரூ.0.48/-கோடி மதிப்பீட்டிற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடப்பு ஆண்டில் 52- தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலம் 163-திட்டங்களுக்கு ரூ.16.49/- கோடி மதிப்பீட்டிற்கு முன்மொழிவு தயார் செய்யப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தில் கூட்டுறவு

அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரியலூர் மாவட்டத்தில் 263 முழு நேரம் மற்றும் 189 பகுதி நேரம் ஆக மொத்தம் 452 நியாயவிலைக்கடைகள் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப் கழகப் பொருட்கள் கிடங்குகளிலிருந்து முதன்மைச் சங்கம் மூலம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடைகளுக்கு நகர்வு செய்யப்படுகின்றன.

கூட்டுறவு நியாயவிலைக்கடைகள்

அரியலூர் மாவட்டத்தில் 452 நியாயவிலைக்கடைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றன. பொது விநியோகத் திட்டப்பொருட்கள், சிறப்பு பொது விநியோகத்திட்டப்பொருட்கள் மற்றும் ஊட்டி டீ, அரசு உப்பு போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களும் நியாய விலைக்கடைகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் பனைமரம் வளர்ப்போரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், அக்டோபர் 2021 முதல் நியாயவிலைக்கடைகள் மூலம் தரமான பனை வெல்லமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறப்புப் பொது விநியோகத்திட்டப் பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவையும் நியாயவிலைக்கடைகளில் அரசு வழங்கும் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் மண்ணெண்ணெய் வழங்குவதற்காக 01 மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.

நகரும் நியாயவிலைக்கடைகள்

நியாயவிலைக்கடைகளிலிருந்து தொலை தூரத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் நகரும் நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது அரியலூர் மாவட்டத்தில் தொலைதூரப் பகுதிகளுக்கு மொத்தம் 45 நகரும் நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத்திட்டப்பொருட்கள் அவர்களின் இடத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நியாயவிலைக்கடையிலும் விற்பனை முனையக்கருவி

இது சரக்குகளை அனுப்புவது முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வது அடிப்படையிலான கண்காணிக்கப்படும் வரை விநியோகச் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனையும் நிகழ்நேர அடிப்படையில் இணைய வலைப்பக்கம் மூலம் கிட்டத்தட்ட 97%பரிவர்த்தனைகள் கைவிரல் ரேகை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. பதிவு முறையில் இதனால் பட்டிகள் தயாரிப்பதும் களவு போலியாக செய்தலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இதர பொருட்களின் விற்பனை

  1. ஊட்டி டீ தேயிலை விற்பனை

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் தேயிலை விலை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உற்பத்தி செய்யும் தேயிலையானது “இண்ட்கோசர்வ் நிறுவனம்” INDCOSERVE ( The Tamil Nadu Small Tea Growers Industrial Cooperative Tea Factories Federation Ltd.,) மூலம் கொள்முதல் செய்யப்பட்டு ஊட்டி டீ என்ற வியாபார பெயரில் நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது. இது சிறு தேயிலை விவசாயிகளுக்கு விலையை கட்டுப்படுத்தியும் நிரந்தர வருமானத்தை ஈட்டவும் உதவுகிறது.

  2. அரசு உப்பு விற்பனை விவரம்

    அயோடின் கலந்த உப்பு தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இது பொது மக்களிடையே அயோடின் பற்றாக்குறையினால் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

  3. பனைவெல்லம் விற்பனை விவரம்

    காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தால் கொள்முதல் செய்யப்பபடும் வெல்லத்தை கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

JR Coop-Tamil Diagram

மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

கூட்டுறவுச்சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்,
மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்,
அறை எண்- 213, 2- வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர்.
தொலைபேசி எண். 04329-228 333.
மின்னஞ்சல் : jralr[dot]rcs[at]gmail[dot]com
DR Coop-Tamil Diagram

  1. கூட்டுறவு சார்பதிவாளர் / கள அலுவலர், அரியலூர்
    அலைபேசி எண் :9750082757
  2. கூட்டுறவு சார்பதிவாளர் / கள அலுவலர், திருமானூர்
    அலைபேசி எண்:9786605942
  3. கூட்டுறவு சார்பதிவாளர் / கள அலுவலர், செந்துறை
    அலைபேசி எண்:9943407023
  4. கூட்டுறவு சார்பதிவாளர் / கள அலுவலர், ஜெயங்கொண்டம்;
    அலைபேசி எண் : 9943407023
  5. கூட்டுறவு சார்பதிவாளர் / கள அலுவலர், ஆண்டிமடம்
    அலைபேசி எண்:9894482727
  6. கூட்டுறவு சார்பதிவாளர் / கள அலுவலர், தா.பழூர்
    அலைபேசி எண் : 9894482727

மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

கூட்டுறவுச் சங்கங்களின் சரகத் துணைப்பதிவாளர்,
கூட்டுறவுச் சங்கங்களின் சரகத் துணைப்பதிவாள் அலுவலகம்,
அறை எண் – 219, இரண்டாம் தளம்
மாவட்ட ஆட்சியர் வளாகம், அரியலூர்
அலுவலக தொலைபேசி எண் : 04329-228051
அலுவலக மின்னஞ்சல் முகவரி : dralr[dot]tnrcs[at]gmail[dot]com
DR PDS-Tamil Diagram

  1. கூட்டுறவு சார்பதிவாளர் (பொ.வி.தி ), அரியலூர்
    கைப்பேசி எண் :8637460533
  2. கூட்டுறவு சார்பதிவாளர் (பொ.வி.தி ), திருமானூர்
    கைப்பேசி எண்:9444402394
  3. கூட்டுறவு சார்பதிவாளர் (பொ.வி.தி ), செந்துறை
    கைப்பேசி எண் : 9444402394
  4. கூட்டுறவு சார்பதிவாளர் (பொ.வி.தி ), ஜெயங்கொண்டம்
    கைப்பேசி எண்: 9597870496
  5. கூட்டுறவு சார்பதிவாளர் (பொ.வி.தி ), ஆண்டிமடம்
    கைப்பேசி எண்: 9597870496
  6. கூட்டுறவு சார்பதிவாளர் (பொ.வி.தி ), தா.பழூர்
    கைப்பேசி எண்: 8637460533

மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

துணைப்பதிவாளர் (பொதுவிநியோகத்திட்டம்).
துணைப்பதிவாளர் (பொதுவிநியோகத்திட்டம்) அலுவலகம்,
அறை எண்: 217, 2 வது தளம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்,
தொலைபேசி எண் : 04329-228131
மின்னஞ்சல் : drpdsalr[dot]tnrcs[at]gmail[dot]com