மூடுக

சுற்றுலாத்துறை

புதைபடிவ அருங்காட்சியகம் – வாரணவாசி

வாரணவாசி கிராமத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்பில் ₹2 கோடி செலவில் 5,200 சதுர அடியில் புதைபடிவ அருங்காட்சியகம் கட்டப்பட்டள்ளது. பள்ளத்தாக்குகள், செங்குத்தான பள்ளங்கள், மணல் மற்றும் பாறைகளில் துண்டிக்கப்பட்ட கோபுரங்களால் ஆன நில அமைப்புக்கள் கொண்டதாகும்.  இந்த அருங்காட்சியகம் மெஸ்ஸானைன் அளவுகளில் கட்டப்பட்டுள்ளது. .கேம்பிரியனுக்கு முந்தைய, ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் காலகட்டங்களில் இருந்து பாறைகள், பெட்ரிஃபைட் மரம், டைனோசர்கள் மற்றும் ஒன்பது வகையான அம்மோனைட் புதைபடிவங்களின் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியின் இயற்கை வளங்கள் அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது . அருங்காட்சியகம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். திங்கள் முதல் ஞாயிறு வரை (வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர).

சுற்றுலா அலுவலகம்-அரியலூர் முகவரி

சுற்றுலா அலுவலகம்,
அறை எண்.233 2வது தளம்,
மாவட்டஆட்சியரகம்,
அரியலூர்-621704.

தொடர்பு எண்கள்

சுற்றுலா அலுவலர்-9176995873
உதவி சுற்றுலா அலுவலர்-9787484754