மூடுக

உதவி இயக்குநர் (ஊராட்சிகள்/தணிக்கை)

15 வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டம் நிர்வாக அனுமதி – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

நோக்கங்கள்:

ஊராட்சி நிர்வாகத்தின் முக்கிய செயல்பாடு சிறந்த நிர்வாகத்தை வழங்குவதும், கிராமப்புறங்களில் தூய்மையான மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் திட்டங்களை குக்கிராம அளவில் செயல்படுத்துவதை திறம்பட கண்காணித்தல்.

நிர்வாக அமைப்பு :

Organization Setup

மாநில நிதி ஆணைய மானியங்கள்

மாநில நிதிக்குழு மானியம் என்பது மாநில அரசின் நேரடி வரி வருவாய் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியாகும். தற்போது, ஐந்தாவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரையின்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும், கிராம ஊராட்சிகள், வட்டார ஊராட்சிகள், மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு 55:37:8 என்ற விகிதத்தில் நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும், மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது இரண்டு வகையான நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அவை அடிப்படையான,

  • மக்கள் தொகை மானியம்.
  • குறைந்தபட்ச மானியம்.
  1. மக்கள் தொகை மானியம்:
    ஐந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்கள் தொகை மானியம் பின்வருமாறு விடுவிக்கப்படுகிறது.

    வ. எண். விபரம் மானிய ஒதுக்கீடு(ரூ)
    1 மொத்த மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) 60%
    2 ஆதிதிராவிட/பழங்குடியின மக்கள் தொகை 15%
    3 பரப்பளவு 15%
    4 தனிப்பட்ட நுகர்வுக்கான செலவு 10%

    மேற்குறிப்பிட்ட நிதியில் இருந்து கிராம ஊராட்சிகளுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகள், ஊராட்சித் தலைவர்/ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்/மாவட்ட ஊராட்சி தலைவர் கிராம ஒன்றிய மாவட்ட ஊராட்சி இதர உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சியின் தீர்மானம் மூலம் செலவுகளை தாங்களே மேற்கொள்ளலாம். இந்த நிதியில் இருந்து ஊராட்சி செயலர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு காவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது மற்றும் இதர நிர்வாக செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

  2. குறைந்தபட்ச மானியம்:வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு மட்டுமே குறைந்தபட்ச மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிதி மாவட்ட ஊராட்சிக்கு வழங்கப்படவில்லை. மேலும், இந்த நிதியை கிராம ஊராட்சிகளில் ஏற்படும் மின்கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் (TWAD) செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நிதியில் வேறு எந்த செலவும் செய்யக்கூடாது. வட்டார ஊராட்சியில் வேறு எந்த தடையும் இல்லை.

15வது மத்திய நிதிக்குழு மானியம்

  1. பின்வரும் விகிதாச்சார அடிப்படையில் 15 வது மத்திய நிதிக்குழு மானியம் அனைத்து 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்கள் தொகை மானியம் பின்வருமாறு விடுவிக்கப்படுகிறது.
    • மாவட்ட ஊராட்சி – 5%
    • வட்டார ஊராட்சி – 15%
    • கிராம ஊராட்சி – 80%
    வ. எண். விபரம் மானிய ஒதுக்கீடு(ரூ)
    1 மொத்த மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) 60%
    2 ஆதிதிராவிட/பழங்குடியின மக்கள் தொகை 15%
    3 பரப்பளவு 15%
    4 தனிப்பட்ட நுகர்வுக்கான செலவு 10%
  2. 15 வது மத்திய நிதிக்குழு மான்யநிதி வரையறுக்கப்பட்ட மான்யம் மற்றும் வரையறுக்கப்படாத மான்யம் என இரண்டு வகையாக விடுவிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிதியும் ஆண்டுக்கு இரண்டு தவணைகளில் அனைத்து 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் (மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி) விடுவிக்கப்படுகிறது.
    அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட மானிய தொகை ஒதுக்கீடு :-

    1. திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) நிலையை உருவாக்குதல் சுகாதாரம் மற்றும் பராமரித்தல்.
    2. குடிநீர் வழங்குதல்.
    3. மழைநீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி.

வரையறுக்கப்பட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள்:

  1. குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி:
    1. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக கிராமத்தில் குடிநீர் குழாய் விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
    2. நம்பகமான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் மற்றும்/அல்லது ஏற்கனவே உள்ள ஆதாரங்களை மேம்படுத்துதல்.
    3. நீர் ஆதாரம், சேமிப்பு மற்றும் குடிநீர் விநியோகத்திற்கான உள்கட்டமைப்பின் மேம்பாடு.
    4. நீரின் தரம் குறைவாக இருக்கும் இடங்களில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைகளை நீக்குதல்.
    5. சாம்பல் நீர் மேலாண்மை – உள்நாட்டு சாம்பல் நீர் மறுசுழற்சி
    6. மழைநீர் சேகரிப்பு பணிகள்.
  2. திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத உள்ளூர் நிலை உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு
    சுகாதாரம் தொடர்பான கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 50ரூ தொகையில் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படலாம்.

    1. சமூக சுகாதார வளாகங்கள் கட்டுதல்.
    2. SBM (G) கட்டம் – II வழிகாட்டுதல்களின் நிதி விதிமுறைகளின்படி சமூக உறிஞ்சுக்குழி / சாம்பல் நீர் மேலாண்மை அமைப்புகள், சமூக உறிஞ்சுக்குழிகள்
    3. வடிகால் கால்வாய்கள் கட்டுதல்.
    4. ஒருங்கிணைந்த சுகாதார கழிவறைகள் மறுசீரமைப்பு செய்தல்

வரையறுக்கப்படாத திட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய வேலைகள்

  1. தெரு விளக்குகள் அமைத்தல்.
    1. புதிய தெரு விளக்குகள் மற்றும் ஏற்கனவே தெருக்களுக்கு உள்ள பகுதியில் LED விளக்குகள் TANGEDGO மூலமாக விஸ்தரிப்பு செய்தல்.
  2. குடிநீர் பணிகள்:
    1. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக கிராமத்தில் குடிநீர் குழாய் விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
    2. கிராமப்புறங்களில் 55 LPCD வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நீர் வழங்கல் பணிகள் திட்டமிடப்பட வேண்டும். சாத்தியமான இடங்களில் JJM உடன் இணைக்கப்பட வேண்டும்.
    3. குடிநீர் ஆதாரங்கள் உருவாக்குதல், மோட்டார் திறன் மேம்பாடு, குடிநீர் குழாய் விரிவாக்கம், திறந்த வெளி கிணறுகளை ஆழப்படுத்துல்,JJM-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளலாம்.
    4. மாவட்ட WSSC ஆல் அங்கீகரிக்கப்பட்ட, பொருந்தக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட VAP/BAP/DAP இலிருந்து மட்டுமே அனைத்து பணிகளை மேற்கொள்ள முடியும்.
  3. சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை:
    1. சமுதாய சுகாதார வளாகங்கள், வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகளின் கட்டுமானம், பழுது மற்றும் பராமரிப்பு ஆகியவை மேற்கொள்ளலாம்.
    2. ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் கழிப்பறைகள் கட்டுவது, குடிநீர் வசதி உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்.
  4. கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு.
    1. உற்பத்தி நோக்கத்திற்கான பொதுவான பணிக்கொட்டகை (SHGs)
    2. கிராமப்புற சந்தையின் உள்கட்டமைப்பு மேம்பாடு செய்தல்.
    3. மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான விற்பனை நிலையம் அமைத்தல்.
    4. கிராம ஊராட்சி சேவை மையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.

பிற வேலைகள்:
தேவைக்கேற்ப தகன மயானம்/இடுகாடுகள் போன்ற பணிகள் மற்றும் பிற வேலைகள் மேற்கொள்ளலாம். இம்மானியத்தைப் பயன்படுத்தி அத்தியாவசியமற்ற பணிகளை மேற்கொள்ளக் கூடாது. வரையறுக்கப்படாத நிதியை பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட தகுதியான அனைத்து பணிகளும் மேற்கொள்ளலாம்.

அலுவலக தொடர்பு முகவரி:

132, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலம்
அரியலூர் – 621704.
மின்னஞ்சல்: adpts.tnari[at]nic[dot]in
போன்: 04329-228134
அலைபேசி: 7402607736