மூடுக

கரையவெட்டி பறவைகள் சரணாலயம்

வழிகாட்டுதல்

வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம்

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 18(1) இன் படியும் அரசு ஆணை எண். 219,சுற்றுச்சூழல் மற்றும் வனத்(FR.VI) துறை, நாள் 10.06.1997 இன் படியும் கரையவெட்டி பறவைகள் சரணாலயம் 453.71 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்க அறிவிக்கப்பட்டது . இச்சரணாலயம் அடிப்படையில் ஒரு பாசன ஏரியாகும். இந்த ஏரி, செப்டம்பர் மாதம் முதல் மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் பெறுகின்றது. மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவக்காற்று மூலமும் கூடுதலாக நீரைப் பெறுகிறது.

இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும். அருகிவரும் பட்டைதலை வாத்து, இந்த ஏரியின் முக்கிய வருகையாளர்களுள் ஒன்றாகும். இச்சரணாலயத்தைப் பார்வையிட ஏற்ற காலம் அக்டோபர் – மார்ச்.

புகைப்பட தொகுப்பு

  • பறவைகள் ஆகாயத்தில்
  • பறவைகள் தரையில்
  • பறவைகள் செடியில்

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ளது திருச்சி விமான நிலையம். திருச்சியிலிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக அரியலூர் வந்தடையலாம்.

தொடர்வண்டி வழியாக

சென்னை - திருச்சி மார்க்கம், நிறுத்தம் : அரியலூர் ரயில் நிலையம்

சாலை வழியாக

அரியலூர் பஸ் நிலையம் - via NH 136 ( சுமார் 20 கி.மீ.)