தொழில் முனைவோர் திட்டம் – சிறப்புத்திட்டம்
(அ) பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் தொடங்குவதற்காக செயல்படுத்தப்படுகிறது.
தகுதி
எண்ணெய் நிறுவனத்தால் அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படும் வயது வரம்பு, தொழில் சார்ந்த கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்
சாதிச்சான்று, வருமானச்சான்று(ஒரு இலட்சத்திற்குள்), பிறப்பிடச்சான்று,
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, திட்ட அறிக்கையுடன் எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட விளம்பரம் மற்றும் புகைப்படம்,
இத்திட்டத்திற்கான பயனாளி தேர்வு சென்னை, தாட்கோ தலைமையலுவலகம் மூலம் தெரிவு செய்யப்படுகிறது.
(ஆ) தொழில் முனைவோர் திட்டம்
இந்து ஆதிதிராவிட இன மக்கள் தொழிலாளர் நிலையிலிருந்து தொழில் முனைவோராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு வருவாய் ஈட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தி வருகிறது.
தகுதி
தாட்கோ பயிற்சி திட்டத்தில் பயன்பெற்றவர்களுக்கும் மற்றும் கடன் கோரும் தொழிலில் முன் அனுபவம் உள்ளவர்கவும் இருக்கவேண்டும்,
தேவையான ஆவணங்கள்
சாதிச்சான்று,வருமானச்சான்று(ஒரு இலட்சத்திற்குள்),பிறப்பிடச்சான்று,
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி (GSTIN. எண்), திட்ட அறிக்கை, புகைப்படம் வாகன கடனுக்கு ஓட்டுநர் உரிம்ம் மற்றும் பேட்ஜ்.
மேற்கண்ட திட்டங்களுக்கு18 முதல் 65 வயதிற்குள் இருக்கவேண்டும்
பயனாளி:
-
பயன்கள்:
இத்திட்டத்தின் கீழ் 2017-18ஆம் ஆண்டு முதல் டிசம்பர் – 2019ஆம் ஆண்டு வரை 94 பயனாளிகளுக்கு 105.28 இலட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது,
விண்ணப்பிப்பது எப்படி?
திட்டங்களுக்கு http://application.tahdco.com/ என்ற தாட்கோ இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
இதர விபரங்களுக்கு, தொடர்புக்கு
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்
தொலைபேசி எண் : 04329 -228315