குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர தகவு
தமிழ்நாடு அரசு தொழில் துவங்க முன்வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் ஆதரவும் அளித்து வருகிறது. தொழில் முனைவோர்கள் தொழில் துவங்க தேவையான பல்வேறு வகையான உரிமங்கள் மற்றும் அனுமதிகளை ஒற்றைச் சாளர தகவின் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோர்களுக்கு உகந்த மற்றும் முதலீட்டாளா்களுக்கு இயைந்த சூழலை உருவாக்குவதில் மாநிலத்திற்கு உள்ள விருப்பத்தினை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசானது, 11 துறைகளின் மூலம் வழங்கப்பட வேண்டிய உரிமங்கள் மற்றும் அனுமதிகளை குறித்த காலத்திற்குள் வெளிப்படையான வகையில் இணையதளம் வழியாக முதலீட்டாளர்களுக்கு பெற்று வழங்கிட இணையதள ஒற்றைச் சாளர தகவினை உருவாக்கியுள்ளது.
பயனாளி:
-
பயன்கள்:
-
விண்ணப்பிப்பது எப்படி?
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை https://www.easybusiness.tn.gov.in/msme என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.