மூடுக

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்

தேதி : 01/01/2020 -

திட்டத்தின் நோக்கம்

முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் 5 கோடி வரையிலான, கடன் உதவியை வங்கிகள் அல்லது மாநிலக் கடனுதவி நிறுவனம் மூலம் பெற்று, தங்களது புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில் நிறுவனங்களை துவங்க வழிவகை செய்தல்.

தகுதிகள்

  • பொதுப்பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயது வரை. சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினா் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்).
  • பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு அல்லது ஐடிஐ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற்பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.10.00 இலட்சத்திற்கு மேல், அதிகபட்சமாக ரூ.500.00 இலட்சம் வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவைத் தொழில் துவங்கலாம். தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% (அதிகபட்சமாக ரூ.30.00 இலட்சம் வரை).
  • பொதுப்பிரிவினருக்கான மூலதனப் பங்கு 10 விழுக்காடு. சிறப்புப்பிரிவினருக்கு மூலதனப் பங்கு 5 விழுக்காடு.
  • மொத்த திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மூலதன மானியம் (அதிகபட்சமாக ரூ.30 இலட்சம்).
  • 3 விழுக்காடு பின்முனை வட்டி மானியம்.
  • மாவட்ட தோ்வு குழு மூலம் நோ்காணல் செய்யப்பட்டு, மாதம் இருமுறை பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா். அவ்வாறு தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒரு மாத காலம் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://www.msmeonline.tn.gov.in/needs/index.php என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.