மூடுக

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள்

தேதி : 01/01/2020 -

அ. முதலீட்டு மானியம்

தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிகப்பட்சமாக ரூ.50 இலட்சம் வரை வழங்கப்படும்.
தகுதிகள்

  • தமிழ்நாட்டின் எப்பகுதியிலும் தொடங்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் 13 வகையான உந்துதல் தொழில்களை மேற்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
  • அரசால் அறிவிக்கப்பட்ட 251 தொழிலில் பின்தங்கிய வட்டாரங்களில் ஆரம்பிக்கப்படும் அனைத்து புதிய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
  • மாநிலத்தில் 385 வட்டாரங்களில் அமைக்கப்படும் வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
  • மேற்கண்ட வகையை சார்ந்த தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில் துவங்கும் பொழுது.

ஆ.குறைந்தழுத்த மின்மானியம்

20 விழுக்காடு குறைந்தழுத்த மின்மானியம் வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின் இணைப்பு பெற்ற நாள் இவற்றில் எது பிந்தியதோ அந்நாளிலிருந்து 36 மாதங்களுக்கு வழங்கப்படும்.
தகுதிகள்

  • மாநிலத்தின் எப்பகுதியிலும் தொடங்கப்படும் அனைத்து உற்பத்திச் சார்ந்த குறுந்தொழில் நிறுவனங்கள்.
  • மாநிலத்தின் 385 வட்டாரங்களில் தொடங்கப்படும் அனைத்து வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
  • தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 251 வட்டாரங்களில் அமைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.
  • மேற்கண்ட வகையைச் சார்ந்த தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில்கள் துவங்கும் பொழுது.

இ.மின்னாக்கி மானியம்

இம்மானியத் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் எப்பகுதியிலும் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் வாங்கியுள்ள மின்னாக்கியின் (320 KVA) மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை மின்னாக்கி மானியம் வழங்கப்படுகிறது.

ஈ.பின்முனை வட்டி மானியம்

குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனப்படுத்துதல் மற்றும் கடன் உத்திரவாத நிதி ஆதாரத் திட்டம் (CGTMSE) மூலம் பெறும் ரூ.1 கோடி வரையிலான கடன்களின் மீது 5 ஆண்டுகளுக்கு கடனுக்கான வட்டியில் 3 விழுக்காடு என்ற அளவில் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

முகவரி :
பொது மேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
531/21, ஜெயங்கொண்டம் ரோடு,
வாலாஜாநகரம்,
அரியலூர். 621704

தொலைபேசி. 04329 – 228555, 228556