மூடுக

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம்

தேதி : 01/01/2020 -

(அ) படித்த வேலையற்ற இளைஞர்கள் தங்களுக்கு தெரிந்த விருப்பமான தொழிலினை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தகுதி
18 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆதிதிராவிட இளைஞராகவும், மத்திய அல்லது மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும். தாட்கோ மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு 25 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்

சாதிச்சான்று,வருமானச்சான்று(ஒரு இலட்சத்திற்குள்),பிறப்பிடச்சான்று,
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி (GSTIN. எண்), திட்ட அறிக்கை, புகைப்படம் வாகன கடனுக்கு ஓட்டுநர் உரிம்ம் மற்றும் பேட்ஜ்.

இத்திட்டத்தின் கீழ் 2017-18ஆம் ஆண்டு முதல் டிசம்பர் – 2019ஆம் ஆண்டு வரை 48 பயனாளிகளுக்கு 70.28 இலட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது

(ஆ) மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் இது போனற பிற இனங்கள்.

தகுதி
மருத்துவ மையம் அமைப்பதற்கு மற்றும் மேம்படுத்துவதற்கு குறைந்தபட்சம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இயற்கை வைத்தியத்தில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மருந்தியல் அமைப்பதற்கு பயின்றிருத்தல் வேண்டும். கண்ணாடியகம் அமைப்பதற்கு சம்மந்தப்பட்ட படிப்பு படித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். முடநீக்கு மையம் அமைப்பதற்கு முடநீக்கியல் பட்டப்படிப்பு படித்து உரிய கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இரத்தப் பரிசோதனை நிலையம் அமைப்பதற்கு தொடர்புடைய தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்திய மருத்துவ கழகம் / தொடர்புடைய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

சாதிச்சான்று,வருமானச்சான்று(ஒரு இலட்சத்திற்குள்),பிறப்பிடச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி (GSTIN. எண்), திட்ட அறிக்கை கல்வித்தகுதி சான்று மற்றும் புகைப்படம்.

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

திட்டங்களுக்கு http://application.tahdco.com/ என்ற தாட்கோ இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

இதர விபரங்களுக்கு, தொடர்புக்கு
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்

தொலைபேசி எண் : 04329 -228315