மூடுக

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டம்

தேதி : 01/01/2020 -

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டமானது, வேலையில்லாத இளைஞா்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கு தேவையான பயிற்சியினை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களால் இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவனங்கள் மாதம் ரூ.5000 வீதம் உதவித் தொகையை 6 மாதங்களுக்கு வழங்கப்படும். அதில் மாதம் ரூ.2000 வீதம் ஒரு பயிற்சியாளருக்கு தமிழ்நாடு அரசால் அந்நிறுவனங்களுக்கு பயிற்சியின் முடிவில் மானியமாக திரும்ப அளிக்கப்படும்.

பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.(TNSDC).

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

முகவரி :
பொது மேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
531/21, ஜெயங்கொண்டம் ரோடு,
வாலாஜாநகரம்,
அரியலூர். 621704

தொலைபேசி. 04329 – 228555, 228556