மூடுக

அம்மா இருசக்கர வாகனத்திட்டம்

தேதி : 01/01/2020 -

திட்டத்தின் விவரம்

அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50% ஆகியவற்றில் எதுகுறைவோ அது வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் வாகனத்தை வாங்க ரிசர்வ் வங்கியால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம். 125 CC திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.

திட்டத்தில் சேர தகுதி

இருசக்கர வாகன திட்டமானது பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், சுயமாக தொழில் செய்யும் பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்களில் பணியாற்றுவோர், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற 18 வயது முதல் 45 வயது வரையில் ஒட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் அல்லது பழகுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது ஆண்டு வருமான அளவு ரூ.2,50,000/- ஐ தாண்டக்கூடாது. மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலை பகுதிகள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை தாண்டிய திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேவையான ஆவணங்கள்

ஓட்டுநர் உரிமம் (அல்லது) பழகுநர் உரிமம், வயதிற்கான சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஒட்டுநர் உரிமம் இவைகளில் ஏதேனும் ஒன்று) வருமான சான்றிதழ் வேலை அளிப்பவரிடமிருந்து பெறப்பட வேண்டும்.வேலையின் தன்மை குறித்த சான்றிதழ், கல்விக்கான சான்றிதழ் (8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்) கடவு சீட்டு அளவு புகைப்படம், ஜாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் வகுப்பினராக இருந்தால்) ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. அவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.