தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
வகை வாரியாக திட்டங்களை பட்டியலிடு
இளைஞர் திறன்வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி
திட்டத்தின் விவரம் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டு, தேசிய தொழில் கல்வி நிறுவனம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தலைமை இயக்குநர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் நடத்தப்படும் பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். திட்டத்தில் சேர தகுதி ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள் கல்விச் சான்றிதழ்கள்
அம்மா இருசக்கர வாகனத்திட்டம்
திட்டத்தின் விவரம் அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50% ஆகியவற்றில் எதுகுறைவோ அது வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் வாகனத்தை வாங்க ரிசர்வ் வங்கியால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம். 125 CC திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும். திட்டத்தில் சேர தகுதி இருசக்கர வாகன திட்டமானது பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், சுயமாக தொழில் செய்யும் பெண்கள்,…
மகளிர் சுய உதவிக்குழு அமைத்தல்
திட்டத்தின் விவரம் இதுவரை சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படாத மக்களிடையே குழுக்கள் அமைப்பதும், சுய உதவிக்குழுவில் இதுவரை இணைக்கப்படாத மகளிரை குழுக்களின் இணைப்பதும் குறிப்பாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கைகள், நலிவுற்றோர் மற்றும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரை சிறப்புக் கவனம் செலுத்தி சுய உதவிக்குழுக்களின் சேர்ப்பது நோக்கமாகும். ஒத்த கருத்துடைய ஏழை மகளிர் தாமாகவே முன் வந்து தங்கள் வளர்ச்சிக்காக ஒன்று சேர்ந்து சேமிப்பினை பெருக்கிடவும், குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு குறிப்பிட்ட தொகையினை வாரம் அல்லது மாதந்தோறும் சேமித்து தங்களுக்குள்ளேயே சிறுகடன் கொடுத்து உதவிக்கொள்ளும் ஒரு சிறு குழு அமைப்பதே சுய உதவிக்குழுவாகும். திட்டத்தில் சேர…