மூடுக

திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப.

திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப.,

திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப.

  • காலம்: தற்போதைய
  • ஒதுக்கீடு ஆண்டு: 2013
  • ஆட்சேர்ப்புக்கான ஆதாரம்: மாநில சேவைகள்
  • சேவை: இ.ஆ.ப
  • தொடர்புகள்: 04329-228336
  • மின்னஞ்சல்: collrari[at]nic[dot]in

விவரம்

வேதியியலில் பொறியியல் பட்டதாரியான திருமதி. பெ.ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ்., அவர்கள், 1999-2000ஆம் வருட குரூப் I தேர்வில் தமிழ்நாடு மாநில குடிமையியல் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார். வேலூர் கோட்டத்தில் 2004ஆம் ஆண்டில் கோட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றார். 2009 முதல் 2011 வரை திருநெல்வேலி மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராகவும், 2012 முதல் 2017 வரை உணவுப்பொருள் மற்றும் நுகர்;வோர்; பாதுகாப்பு துறையில் இணை ஆணையராக, பொது விநியோகத்திட்டம் (ஆன்லைன்) செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். 2017 முதல் 2021 வரை இவர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் இணை இயக்குநராக, பல்வேறு துறைகளின் கணினிமயமாக்கல் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆன்லைனில் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர், கல்வி, சுகாதாரம், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் மாண்புமிகு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி செயல்பட உறுதியளித்துள்ளார். அரியலூர் மாவட்டம், பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்று என்ற பார்வையை மாற்றுவதோடு, மாவட்டத்திற்கு ஒரு நிறைவான வளர்ச்சியை கொண்டு வருவது இவரது குறிக்கோள் ஆகும்.