ஊடக வெளியீடுகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 12.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 12.01.2026 அன்று நடைபெற்றது. (PDF 84KB)
முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா போட்டிகள் நடத்துவது தொடர்பாக கண்காணிப்புக்குழு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” ஊராட்சி ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 182KB)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் “உங்க கனவ சொல்லுங்க”என்ற திட்டத்தினை தொடங்கி வைத்த நிகழ்ச்சியின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்வில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 84KB)
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு வழங்கிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 05 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 36KB)
ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 200KB)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 182KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 05.01.2026 அன்று நடைபெற்றது.(PDF 126KB)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தம் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தம் சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 52KB)
கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 27KB)