மூடுக

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை

  1. பாரத பிரதமரின் சிறு குறு நிறுவனங்களுக்கான நிதிதிட்டம் (PMFME) :
    ஒருமாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் முந்திரி தயாரிப்பதற்கு புதியதாக துவங்கப்படும் நிறுவனத்திற்கு திட்டமதிப்பில் 35 சதவீதம் அல்லது அதிகபட்டமாக 10 லட்சம் வரை நிதி வழங்கப்படும். இதுமட்டும் அல்லாமல் பழைய எந்த ஒரு உணவு பதப்படுத்தும் / மதிப்பு கூட்டும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் அதன் திட்டமதிப்பில் 35 சதவீதம் அல்லதுஅதிகபட்டமாக 10 லட்சம் வரை நிதி வழங்கப்படும்.
  2. வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் ( AIF) :
    இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர், நிறுவனங்கள், வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு தேவையான கட்டுமான வசதிகளை ஏற்படுத்திகொள்ளமுடியும். இதற்கு வங்கியில் 4 சதவட்டியில் வங்கிகடன் பெற இயலும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தொகைக்கு 3 சதவிகிதம் வட்டியில் விலக்குஅளிக்கப்படுவதால் நிகர வட்டிவிகிதம் 1 சதவிகிதமாகும்.
  3. அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நாடு முழுவதும் 10000 உழவர், உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கும் திட்டம் :
    இத்திட்டத்தின் கீழ் ஆண்டிமடம் ,தா.பழூர் மற்றும் திருமானூர் வட்டாரத்தில் நெல், நிலக்கடலை, முந்திரி பயிர் செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்குவதற்கு அடிப்படை புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டு, இயக்குநர்கள் தேர்வுசெய்யப்பட்டு, 25.09.2021 அன்று நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுதுபங்குதாரர்களுக்கு விதை,உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களைமொத்தமாக கொள்முதல் செய்து வழங்கவும் விளைவிக்கப்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டவும், மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் தேவையான வியாபார உத்தி (Business Plan)தயாரிக்கப்பட்டுவருகிறது.
  4. உழவர் சந்தை :
    விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நேரடியாக விற்பனை செய்ய ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் நகராட்சிகளில் உழவர் சந்தை இயங்கிவருகிறது.
  5. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் :
    ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் 500-1000 உறுப்பினர்களாக இருக்க வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் விளைப்பொருட்களை கொள்முதல் செய்து விற்பனைமற்றும் விதைஉரங்கள் பயிர் பாதுகாப்பு மருந்துகள் வணிகம் செய்வது  மூலமாக லாபம் ஈட்டலாம்.
  6. விலை ஆதரவுதிட்டம் :
    இத்திட்டத்தின் மூலம் உளுந்து விளைப்பொருளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.63.00 வீதம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
  7. தமிழ்நாடு பாசன விவசாயம் நவீனமயமாக்கல் திட்டம் :
    இத்திட்டத்தின் கீழ், தா.பழூர் மற்றும் திருமானூர் வட்டாரத்தில் நிலக்கடலை, மக்காச்சோளம், உளுந்து மற்றும் எள் பயிர் செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்குவதற்கு அடிப்படை புள்ளிவிபரம் சேகரிக்கப்பட்டு,  இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டு, நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுதுபங்குதாரர்களுக்கு விதை, உரம் உள்ளிட்டவேளாண் இடுபொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து வழங்கவும் விளைவிக்கப்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டவும், மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் தேவையான நிதி அரசிடமிருந்து பெறப்பட்டுசெயல்படுத்தப்பட்டு வருகிறது.
  8. ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் :
    ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் விவசாயிகளுக்குகிடைக்கும் நன்மைகள் சரியானஎடை,மறைமுகஏலம், நியாயமானவிலை, உடனடி பணப்பட்டுவாடா, இலவசதரம் பிரிப்பு, தரகு கமிஷன் இல்லை, அடமானக்கடன் மற்றும் உழவர் நலநிதித் திட்டம்.

தொடர்புக்கு:

வேளாண்மை துணை இயக்குநர்(வே.வ), பெரம்பலூர்
ஒருங்கினைந்தவேளாண்மைஅலுவலககட்டிடம்,பெரம்பலூர்-612 212
அலைப்பேசிஎண்: 9865529676